பிரதமர் மோடிக்கு பரிசாக அளிக்கப்பட்ட 1,200 பொருட்கள் ஆன்லைன் மூலம் ஏலம் - என்ன காரணம்?

சாமானியர், அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் கொடுத்த பரிசுப்பொருட்கள் இருக்கிறது. நாட்டின் வளமான கலாச்சாரம், பாரம்பரியம் ஆகியவற்றை பிரதிபலிக்கக்கூடிய பொருட்கள் உள்ளன.
PM Modi
PM ModiTwitter

அனுமன் சிலை மற்றும் சூரியன் ஓவியம் உள்ளிட்ட பிரதமர் மோடி பெற்ற 1,200-க்கும் மேற்பட்ட பரிசு பொருட்கள் ஆன்லைன் மூலமாக ஏலம் விடப்படுகின்றன.

அரசியல் தலைவர்கள், பல்வேறு துறை பிரபலங்கள் பிரதமர் மோடியை சந்திக்கும் போது பரிசு பொருட்கள் கொடுப்பது வழக்கம். அந்த பரிசு பொருட்கள் அவ்வப்போது ஆன்லைன் மூலம் ஏலம் விடப்படுகின்றன.

ஏற்கனவே 3 முறை ஆன்லைன் மூலம் ஏலம் விடுப்பட்டுள்ள நிலையில், 4-வது முறையாக தற்போதும் ஏலம் விடுப்படுகிறது. செப்டம்பர் 17-ஆம் தேதி தொடங்கும் இந்த ஏலம் அக்டோபர் 2-ந் தேதி வரை நடைபெறவுள்ளது.

டெல்லியில் உள்ள தேசிய நவீன கலைக்கூடத்தில் இந்த பரிசு பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. பிரத்யேக இணையதளம் ஒன்றின் வழியாக ஏலம் நடக்கவுள்ளது.

பரிசு பொருட்களின் ஆரம்ப விலை ரூ.100 முதல் ரூ.10 லட்சம் வரை ஏலம் விடப்படுகிறது. இந்த ஏலத்தின் மூலம் கிடைக்கும் பணம், கங்கையை தூய்மைப்படுத்தும் திட்டத்துக்கு பயன்படுத்தப்பட உள்ளது.

சாமானியர், அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் கொடுத்த பரிசுப்பொருட்கள் இருக்கிறது. நாட்டின் வளமான கலாச்சாரம், பாரம்பரியம் ஆகியவற்றை பிரதிபலிக்கக்கூடிய பொருட்கள் உள்ளன.

PM Modi
உலகின் பிரபலமான தலைவர்; பிரதமர் மோடி முதலிடம் - பட்டியலில் இருக்கும் மற்ற தலைவர்கள் யார்?

ராணி கமலாபாதி சிலை, அனுமன் சிலை,சூரியன் ஓவியம், திரிசூலம், மகாலட்சுமி கடவுள் சிலை, ஏழுமலையான் படம் ஆகியவை பரிசு பொருட்களில் அடங்கும்.

டி-சர்ட், குத்துச்சண்டை கையுறைகள், ஈட்டி, ஓவியங்கள், சிற்பங்கள், கைவினை பொருட்கள், சால்வை, தலைப்பாகை, வாள் ஆகியவையும் உள்ளன. அயோத்தியில் கட்டப்படும் ராமர் கோவிலின் மாதிரி வடிவம், காசி விஸ்வநாதர் கோவில் மாதிரி வடிவம் ஆகியவையும் ஏலம் விடப்படுகின்றன.

PM Modi
பிரதமர் மோடி : தேசிய சின்னத்துக்கு அவமதிப்பா? குற்றச்சாட்டுக்கு சிற்பியின் விளக்கம் என்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com