142 இந்தியன் விளையாட்டு வீரர்கள் ஊக்கமருந்து சோதனையில் சிக்கியுள்ளனர். மேலும் 13 இந்திய கிரிக்கெட் வீரர்கள் சிகிச்சைக்காக பயன்படுத்தும் விலக்கு பெற்றுள்ளனர்.
தேசிய ஊக்கமருந்து எதிர்ப்பு நிறுவனத்தின் பதிவுசெய்யப்பட்ட சோதனை குழுவில் (RTI) சூர்யகுமார் யாதவ், ஸ்மிருதி மந்தனா, ரவீந்திர ஜடேஜா, ஹர்மன்ப்ரீத் கவுர், ஹர்திக் பாண்டியா, இஷான் கிஷன், ரிஷப் பந்த் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் ஆகிய கிரிக்கெட்டர்கள் இடம் பெற்றுள்ளனர்.
2022-23 ஆம் ஆண்டில் தேசிய ஊக்கமருந்து எதிர்ப்பு நிறுவனத்தின் ஊக்கமருந்து எதிர்ப்பு ஒழுங்குமுறை குழு (ADDP) செயல்திறனை மேம்படுத்தும் மருந்துகளை செலுத்தியதற்காக 80 விளையாட்டு வீரர்களுக்கு தண்டனைகளை வழங்கியது என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
2022 ஏப்ரல் - 2023 மார்ச் இடையே தேசிய ஊக்கமருந்து எதிர்ப்பு நிறுவனம் 4342 தடகள வீரர்களை சோதித்துள்ளது.
சோதனையில் சிக்கிய 142 பேரில் 49 பேர் தடகள வீரர்கள், பழு தூக்கும் வீரர்கள் 22 பேர், மல்யுத்த வீரர்கள் 17 பேர், பவர் லிஃப்டிங் வீரர்கள் 13 பேர்.
பாரிஸ் 2024 போட்டிகள் தொடங்குவதற்கு முன்பால கலந்துகொள்ளும் வீரர்களை குறைந்தது 3 முறை சோதிக்க தேசிய ஊக்கமருந்து எதிர்ப்பு நிறுவனம் முடிவெடுத்துள்ளது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust