இந்தியாவில் ஏப்ரல் மாதம் தொடங்கியது முதலே வெயிலின் தாக்கம் மக்களை வாட்டி வதைத்து வருகிறது.
ஏப்ரல் மாதத்தில் மட்டும் சராசரியாக 35.05 டிகிரி செல்சியஸ் வெப்பம் நிலவியுள்ளது. 122 ஆண்டுகளில் இல்லாத அளவிலான வெப்பநிலை பதிவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதேபோல் ஜம்மு காஷ்மீர் , பஞ்சாப், லடாக், ஹரியானா, சண்டிகர், டெல்லி, உத்தரகாண்ட், இமாச்சலப் பிரதேசம் ராஜஸ்தான், குஜராத் , மத்தியப் பிரதேசம் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் வழக்கத்தை விடக் கடுமையான வெப்பம் நிலவி வருகிறது.
அதுவும் மகாராஷ்டிராவில் வெயிலின் தாக்கம் மிகவும் கடுமையாக உள்ளது. மாநிலத்தில் வெயிலுக்கு சுருண்டுவிழுந்து, வெப்ப பக்கவாதம் ஏற்பட்டு உயிரிழப்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
மகாராஷ்டிரா மாநிலம், விதர்பாவில் அதிகபட்சமாக 15 பேர், நாக்பூரில் மட்டும் 11 பேர், மராத்வாடாவில் 6 பேர், ஜல்னாவில் 4 பேர் வெயிலின் கொடுமை தாங்காமல் உயிரிழந்திருக்கின்றனர். கடந்த ஆறு ஆண்டுகளில் வெப்ப தாக்கத்தினால் மகாராஷ்டிராவில் உயிரிழந்திருப்பது இதுவே முதல்முறையாகும்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn: https://www.newssensetn.com/
Nalam360 : https://www.newssensetn.com/health
Newsnow: https://www.newssensetn.com/wow-news
Tamilflashnewsapp: https://www.newssensetn.com/tamilnadu