கோடை வெயிலில் தாக்கம் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. அக்னி நட்சத்திரமே இன்னும் ஆரம்பிக்கப்படாத நிலையில் பல இடங்களில் வெப்பம் 40 டிகிரியைத் தாண்டி கொளுத்தி வருகிறது. இதனால் மக்கள் பொதுவெளிக்கு வருவதைத் தவிர்த்து வருகின்றனர்.
இந்நிலையில் ஒடிசாவின் சோனேப்பூர் மாவட்டத்தில் இளம்பெண் ஒருவர் வெயிலின் தாக்கம் எவ்வாறு உள்ளது என்பதைக் உணர்த்தும் வகையில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள காரின் பேனட்டில் சப்பாத்தி தேய்த்து, அங்கே சுட்டு எடுக்கிறார்.
பொதுவாக வெயிலில் நிறுத்தப்பட்டிருக்கு வாகனங்கள், கை வைக்க முடியாத அளவிற்குச் சூடாக இருக்கும் என்பது நாம் அறிந்த ஒன்றே, ஆனால் அடுப்பைப் போன்று இவ்வளவு சுடும் என்பது சப்பாத்தியை அழகாகப் பதமாகச் சுட்டு எடுக்கும் போது தான் தெரிகிறது. இதனை இணையத்தில் வீடியோவாக பகிர்ந்துள்ளனர். இந்த வீடியோவைப் பார்த்து சோலார் சக்தி தான் நம் எதிர்காலம் என பாசிடிவ்வான கருத்துக்களைச் சிலர் பகிர்ந்து வருகின்றனர். இந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com