விளையாடிக் கொண்டிருக்கும்போது புதருக்குள் இருந்து வெளிவந்த பாம்பை மூன்று வயது சிறுவன் மென்று துப்பிய சம்பவம் உத்திரபிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரபிரதேச மாநிலம், ஃபரூகாபாத்தில் தனது வீட்டிற்கு வெளியில் விளையாடிக் கொண்டிருந்தான் அக்ஷய் என்கிற சிறுவன். அவனுக்கு வயது 3.
அப்போது அருகில் இருந்த புதருக்குள்ளிருந்து சிறிய பாம்பு ஒன்று வெளியில் வந்துள்ளது.
அந்த பாம்பை கையில் பிடித்து விளையாடிய சிறுவன் அக்ஷய், வாயில் போட்டு மென்று துப்பியுள்ளான், சிறிது நேரத்தில் அழுதிருக்கிறான். அலறல் சத்தம் கேட்டு வெளியே ஓடி வந்த அவனது பாட்டி, குழந்தையின் அருகில் பாம்பு ஒன்று இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
உடனடியாக குழந்தையின் பெற்றோரிடம் தகவல் அளித்தார் அப்பெண். பெற்றொர் ஒரு சிறிய பிளாஸ்டிக் பையில் இறந்த பாம்புடன் குழந்தையை தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தனர்.
குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், உரிய சிகிச்சை அளித்து அவனை 24 மணி நேரம் கண்காணிப்பில் வைத்திருந்து, ஆபத்து எதுவும் இல்லை என உறுதி செய்த பின்னர் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் குழந்தை கடித்த பாம்பும் விஷமற்ற இனத்தை சேர்ந்தது என்பதால், எந்த பிரச்னையும் இல்லை எனவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust