₹5 முதல் ₹150 வரை : இந்திய அரசாங்கத்தால் வெளியிட்ட சிறப்பு நாயணங்கள் என்னென்ன?

இந்திய வரலாறு மற்றும் கலாச்சாரத்தில் குறிப்பிடத்தக்க பல்வேறு நிகழ்வுகள் மற்றும் ஆளுமைகளை நினைவுகூரும் வகையில் சிறப்பு நாணயங்கள் வெளியிடப்பட்ட பல நிகழ்வுகளும் உள்ளன.
4 times when Indian government launched special coins
4 times when Indian government launched special coinsTwitter
Published on

இந்திய அரசால் நாணயங்களை வெளியிடப்படும். சில குறிப்பிடத்தக்க நிகழ்வுகளை நினைவுகூரும் வகையிலும், புகழ்பெற்ற மனிதர்களை கௌரவிக்கும் வகையிலும் இந்திய அரசாங்கம் சிறப்பு நாணயங்களை அறிமுகப்படுத்தியிருக்கிறது.

இந்திய வரலாறு மற்றும் கலாச்சாரத்தில் குறிப்பிடத்தக்க பல்வேறு நிகழ்வுகள் மற்றும் ஆளுமைகளை நினைவுகூரும் வகையில் சிறப்பு நாணயங்கள் வெளியிடப்பட்ட பல நிகழ்வுகளும் உள்ளன. அப்படி என்னென்ன நிகழ்வுகளில் நாணயங்கள் வெளியிடப்பட்டன என்பது குறித்து இங்கே தெரிந்துக்கொள்ளலாம்.

சிறப்பு நாணயங்களை அறிமுகப்படுத்தப்பட்ட 4 முக்கிய நிகழ்வுகள் உள்ளன.

மகாத்மா காந்தியின் 150 வது பிறந்தநாளை முன்னிட்டு

2019 ஆம் ஆண்டில், மகாத்மா காந்தியின் 150 வது பிறந்தநாளை முன்னிட்டு, இந்திய அரசாங்கம் தேசத் தந்தைக்கு அஞ்சலி செலுத்துவதற்காக சிறப்பு ₹150 நாணயத்தை வெளியிட்டது. அந்த நாணயத்தில் ஒருபுறம் மகாத்மா காந்தியின் உருவப்படமும், மறுபுறம் அசோக தூணும் இடம்பெற்றிருந்தன.

அன்னை தெரசாவின் பிறந்தநாளை முன்னிட்டு

2010 ஆம் ஆண்டு அன்னை தெரசாவின் பிறந்தநாளை முன்னிட்டு இந்திய அரசாங்கம் ₹5 சிறப்பு நாணயத்தை வெளியிட்டது. இந்த நாணயத்தில் அன்னை தெரசாவின் உருவப்படமும், ஆங்கிலத்திலும் ஹிந்தியிலும் 'அன்னை தெரசாவின் பிறந்த நூற்றாண்டு' என்ற வாசகம் பொறிக்கப்பட்டிருந்தது.

தண்டி மார்ச் 75 வது ஆண்டு விழா

2005 ஆம் ஆண்டில், மகாத்மா காந்தி தலைமையிலான வரலாற்று தண்டி அணிவகுப்பின் 75 வது ஆண்டு நினைவாக, இந்திய அரசாங்கம் ₹5 நாணயத்தை வெளியிட்டது. நாணயத்தின் ஒருபுறம் உப்பு சத்தியாகிரக சின்னமும் மறுபுறம் அசோக தூணும் இடம்பெற்றிருந்தன.

4 times when Indian government launched special coins
இந்திய ரூபாய் ஏன் சரிகிறது? இதனால் நமக்கு ஏற்படும் ஆபத்துகள் என்ன?

சுவாமி விவேகானந்தரின் 150வது பிறந்தநாள்

2013ல் சுவாமி விவேகானந்தரின் 150வது பிறந்தநாளை முன்னிட்டு இந்திய அரசு ₹5 நாணயத்தை வெளியிட்டது. இந்த நாணயத்தில் சுவாமி விவேகானந்தரின் உருவப்படம், இந்தி மற்றும் ஆங்கிலத்தில் 'சுவாமி விவேகானந்தரின் 150வது பிறந்தநாள்' என்று எழுதப்பட்டிருந்தது.

4 times when Indian government launched special coins
இந்திய ரூபாய் நோட்டுகளில் இருக்கும் நினைவுச்சின்னங்கள் பற்றி தெரியுமா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com