இந்திய ரூபாய் நோட்டுகளில் இருக்கும் நினைவுச்சின்னங்கள் பற்றி தெரியுமா?

நாட்டின் கலாச்சார பன்முகத்தன்மையைக் கொண்டாடும் வகையில் இந்திய நினைவுச்சின்னங்கள் ரூபாய் நோட்டுகளில் அச்சிடப்பட்டன. என்னென்ன நினைவுச் சின்னங்கள் கரன்சியில் இடம்பெற்றுள்ளன என்பதை இங்கே தெரிந்துகொள்வோம்.
இந்திய ரூபாய் நோட்டுகளில் இருக்கும் நினைவுச்சின்னங்கள் பற்றி தெரியுமா?
இந்திய ரூபாய் நோட்டுகளில் இருக்கும் நினைவுச்சின்னங்கள் பற்றி தெரியுமா?Twitter
Published on

நாம் அன்றாடம் பயன்படுத்தும் விஷயங்களில் ரூபாய் நோட்டும் ஒன்று. தினமும் நம் கைகளில் தவழ்ந்தாலும் கரன்சி நோட்டுகளை கூர்ந்து கவனித்திருக்கமாட்டோம்.

நவம்பர் 10, 2016 முதல் புதிய மகாத்மா காந்தி கரன்சி நோட்டுகள் புழக்கத்திற்கு வந்தன. நாட்டின் கலாச்சார பன்முகத்தன்மையைக் கொண்டாடும் வகையில் இந்திய நினைவுச்சின்னங்கள் ரூபாய் நோட்டுகளில் அச்சிடப்பட்டன.

என்னென்ன நினைவுச் சின்னங்கள் கரன்சியில் இடம்பெற்றுள்ளன என்பதை இங்கே தெரிந்துகொள்வோம்.

10 ரூபாய் நோட்டில் இடம்பெற்ற கோனார்க் சூரியன் கோவில்

ஒடிசாவின் பெருமை வாய்ந்த கோனார்க் கோயில், இந்தியாவின் மிக முக்கியமான தலங்களில் ஒன்றாகும். இந்த யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளம் கட்டிடக்கலையின் அற்புதமாகவும் திகழ்கிறது.

ஒரு காலத்தில் இது சூரியக் கடிகாரமாகப் பயன்படுத்தப்பட்ட தளம். புதிய 10 ரூபாய் நோட்டின் பின்புறத்தில் சூரிய கோவில் அச்சிடப்பட்டுள்ளது. இந்த தாள் ஜனவரி 2018 இல் புழக்கத்தின் ஒரு பகுதியாக மாறியது.

20 ரூபாய் நோட்டில் கைலாஷ் கோயில் மற்றும் எல்லோரா குகைகள்

20 ரூபாய் நோட்டை திருப்பினால், கைலாஷ் கோயிலின் தூண்களில் ஒன்றின் அழகிய படத்தைக் காண்பீர்கள்.

2019 இல் நடைமுறைக்கு வந்த கரன்சி நோட்டில் எல்லோரா குகைகள் இடம்பெற்றிருக்கும். அதில் நம்பமுடியாத கட்டிடக்கலைப் படைப்பான கைலாஷ் கோயிலைக் காணலாம்.

50 ரூபாய் நோட்டில் ஹம்பி

விஜயநகர சாம்ராஜ்யத்தின் பழைய இடமான ஹம்பிக்கு நீங்கள் சென்றிருக்கிறீர்களா? புதிய 50 ரூபாய் நோட்டின் பின்புறத்தில் அதை பார்க்கலாம்.

கரன்சி நோட்டில் ஹம்பி என்று குறிப்பிடப்பட்டிருக்கும். ஹம்பியில் உள்ள விட்டலா கோயில் வளாகத்தின் புகழ்பெற்ற கல் தேர் இடம்பெற்றிருக்கும்.

இது ஹம்பியின் அங்கீகரிக்கப்பட்ட நினைவுச்சின்னங்களில் ஒன்றாகும். 50 ரூபாய் நோட்டு ஆகஸ்ட் 2017 இல் நடைமுறைக்கு வந்தது.

100 ரூபாய் நோட்டில் ராணி கி வாவ்

100 ரூபாய் நோட்டில் குஜராத்தின் படானில் அமைந்துள்ள ராணி கி வாவ் என்ற யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளம் இடம்பெற்றுள்ளது.

இது ராணியின் படிக்கிணறு என்றும் அழைக்கப்படுகிறது. நுணுக்கமாக வடிவமைக்கப்பட்ட இந்த படிக்கட்டுக் கிணறு 11 ஆம் நூற்றாண்டின் மன்னர் பீம் தேவ் I இன் நினைவாக கட்டப்பட்டது. 100 ரூபாய் நோட்டு ஜூலை 2018 இல் நடைமுறைக்கு வந்தது.

இந்திய ரூபாய் நோட்டுகளில் இருக்கும் நினைவுச்சின்னங்கள் பற்றி தெரியுமா?
2000 ரூபாய் நோட்டுகள் ஏன் அறிமுகப்படுத்தப்பட்டன? ஏன் திரும்பப் பெறப்படுகின்றன? - Explained

200 ரூபாய் நோட்டில் சாஞ்சி ஸ்தூபி

சாஞ்சி ஸ்தூபி இந்தியாவில் உள்ள மிகவும் புகழ்பெற்ற புத்த நினைவுச்சின்னங்களில் ஒன்றாகும். இது மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள சாஞ்சி நகரில் அமைந்துள்ளது.

200 ரூபாய் நோட்டில் இடம்பெற்ற புகழ்பெற்ற ஸ்தூபி யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமாகவும் உள்ளது. கரன்சி நோட்டு ஆகஸ்ட் 2017 இல் நடைமுறைக்கு வந்தது.

500 ரூபாய் நோட்டில் செங்கோட்டை

நவம்பர் 8, 2016 அன்று பணமதிப்பு நீக்கம் அறிவிக்கப்பட்ட உடனேயே, நவம்பர் 10, 2016 அன்று பணத்தாள் புழக்கத்தின் ஒரு பகுதியாக 500 ரூபாய் மாறியது.

அதன் பின்புறத்தில் செங்கோட்டை இடம்பெற்றிருக்கும்.

டெல்லியில் அமைந்துள்ள செங்கோட்டை, டெல்லியில் அதிகம் பார்வையிடப்படும் நினைவுச்சின்னங்களில் ஒன்றாகும்.

இந்திய ரூபாய் நோட்டுகளில் இருக்கும் நினைவுச்சின்னங்கள் பற்றி தெரியுமா?
1 ரூபாய்க்கு இவ்வளவு மவுசா? இந்திய ரூபாய்க்கு அதிக மதிப்பு கொடுக்கும் நாடுகள் தெரியுமா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com