புத்தரின் கால்தடங்களைக் கொண்ட 5 பிரபலமான இடங்கள் - எங்கு இருக்கிறது?

கௌதம புத்தரின் வாழ்க்கையுடன் தொடர்புடைய பல இடங்கள் உள்ளன, அதிலும் குறிப்பாக மிகவும் பிரபலமான ஐந்து இடங்கள் குறித்து இங்கே பார்க்கலாம்.
புத்தரின் கால்தடங்களைக் கொண்ட 5 பிரபலமான இடங்கள் -
எங்கு இருக்கிறது?
புத்தரின் கால்தடங்களைக் கொண்ட 5 பிரபலமான இடங்கள் - எங்கு இருக்கிறது?Twitter
Published on

கௌதம புத்தர் என்பவர் கி.மு 563க்கும், கி.மு 483க்கும் இடையில் வாழ்ந்தவர். இவரது இயற்பெயர் “சித்தார்த்த கௌதமர்” என்பதாகும். பின்னர் இவர் ஞானம் பெற்று புத்தர் ஆனார். கௌதம புத்தரின் போதனைகளின் அடிப்படையில் புத்த சமயம் உருவாக்கப்பட்டது.

கௌதம புத்தரின் வாழ்க்கையுடன் தொடர்புடைய பல இடங்கள் உள்ளன, அதிலும் குறிப்பாக மிகவும் பிரபலமான ஐந்து இடங்கள் குறித்து இங்கே பார்க்கலாம்.

போத்கயா

பீகாரின் நிரஞ்சனா நதிக்கரையில் அமைந்துள்ள போத்கயா புத்தரின் ஞானம் பெற்ற இடமாக அறியப்படுகிறது. அங்கு அமைந்துள்ள மகாபோதி கோவில் வளாகம் புத்தரின் வாழ்க்கையுடன் தொடர்புடைய நான்கு புனித இடங்களில் ஒன்றாகும்.

யுனெஸ்கோவின் கூற்றுப்படி, குப்தா வம்சத்தின் பிற்பகுதியில் இருந்து, இந்தியாவில் இன்னும் எஞ்சியிருக்கும் செங்கற்களால் கட்டப்பட்ட ஆரம்பகால புத்த கோவில்களில் இதுவும் ஒன்றாகும்.

குஷிநகர்

இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தில் உள்ள குஷிநகர் மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம் தான் குஷிநகர். இங்கு கௌதம புத்தர் மறுபிறவி அடைந்ததாக பௌத்தர்கள் நம்புகின்றனர்

சிராவஸ்தி

கி மு ஆறாம் நூற்றாண்டு முதல் கி பி ஆறாம் நூற்றாண்டு முடிய, சிராவஸ்தி நகரம் கோசல நாட்டின் தலைநகராக விளங்கியது. இந்நகரம் தற்போது உத்தரப் பிரதேசம் மாநிலத்தின் சிராவஸ்தி மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்நகரம் கௌதம் புத்தருடன் நெருங்கிய தொடர்புடையது.

இந்நகரத்திற்கு அருகில் கௌதம புத்தர் தொடர்புடைய தொன்மை வாய்ந்த பல பௌத்த புனிதச் சின்னம் காணப்படுகிறது.

புத்தரின் கால்தடங்களைக் கொண்ட 5 பிரபலமான இடங்கள் -
எங்கு இருக்கிறது?
ராமேஸ்வரம்: கோவில்கள் முதல் கோஸ்ட் டவுன் வரை- ஆன்மீகமும் அமானுஷ்யமும் கலந்த சூப்பர் ஸ்பாட்

லும்பினி

லும்பினி தற்போது நேபாளத்தில் கபிலவஸ்து மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது புத்தர் பிறந்த இடமாகும்.

சாரநாத்

சாரநாத் ஒரு மான் பூங்கா ஆகும், அங்கு கௌதம புத்தர் தனது முதல் உரையை நிகழ்த்தினார். இது மிருகடவா, மிகாதயா, ரிஷிபட்டனா, இசிபதனம் என்றும் அழைக்கப்படுகிறது.

புத்தரின் கால்தடங்களைக் கொண்ட 5 பிரபலமான இடங்கள் -
எங்கு இருக்கிறது?
முதலையின் பாதுகாப்பில் இருந்ததா அனந்தபத்மநாப கோவில்? - இந்தியாவின் மர்மமான 5 கோவில்கள்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com