ராமேஸ்வரம்: கோவில்கள் முதல் கோஸ்ட் டவுன் வரை- ஆன்மீகமும் அமானுஷ்யமும் கலந்த சூப்பர் ஸ்பாட்

ராமேஸ்வரத்தில் இருந்து சுமார் 280 கிமீ தொலைவில் அமைந்திருக்கிறது தனுஷ் கோடி. 1964ஆம் ஆண்டு ஏற்பட்ட ஒரு பெரும் புயலால் நகரமே அழிந்தது. இந்த இயற்கை பேரிடரில் 2000 பேர் வரை உயிரிழந்தனர்.
ராமேஸ்வரம்: கோவில்கள் முதல் கோஸ்ட் டவுன் வரை- ஆன்மீகமும் அமானுஷ்யமும் கலந்த சூப்பர் ஸ்பாட்
ராமேஸ்வரம்: கோவில்கள் முதல் கோஸ்ட் டவுன் வரை- ஆன்மீகமும் அமானுஷ்யமும் கலந்த சூப்பர் ஸ்பாட்Twitter

தமிழகத்தின் அடையாளங்களில் ஒன்று ராமேஸ்வரம். தென்கிழக்கு தமிழகத்தில் அமைந்திருக்கும் இந்த நகரமானது, இந்தியாவின் நிச்சயம் பார்க்கவேண்டிய சுற்றுலா தலங்களுள் ஒன்றாக இருக்கிறது.

முக்கியமாக இந்து மத நம்பிக்கையை பின்பற்றுபவர்களுக்கு இது வாழ்வில் ஒரு முறையாவது சென்று வரவேண்டிய புனித தலமாக கருதப்படுகிறது.

ராமாயண இதிகாச கதையில் இடம்பெற்ற இந்த கடற்கரை நகரத்தை பற்றிய பதிவு தான் இது!

புராணக் கதை

ராமாயண கதையின் படி, ராமர் இலங்கைக்கு ராமேஸ்வரம் வழியாகவே சென்றடைந்தார். இங்கு கடலின் மீது வாணர சேனையின் துணையுடன் கற்களை கொண்டு ஒரு பாலத்தை அவர் எழுப்பி அதன் மூலமாக கடல் கடந்து இலங்கைக்கு ராமர் சென்றார்.

இந்த பாலத்தை ராம சேது என்று அழைக்கின்றனர்

புராணங்களை கடந்து அறிவியல் ரீதியாக பார்த்தால் இந்த பாலம் முழுவதும் சுண்ணாம்பு கற்களால் ஆனது.

ராமேஸ்வரம்: கோவில்கள் முதல் கோஸ்ட் டவுன் வரை- ஆன்மீகமும் அமானுஷ்யமும் கலந்த சூப்பர் ஸ்பாட்
மகாபலிபுரம்: நூற்றாண்டுகள் பழமையான கடற்கரை கோவில் பற்றிய இந்த தகவல்கள் தெரியுமா? Wow Facts

ராமநாத சுவாமி கோவில்

ராவணனை கொன்ற பாவம் தனக்கு வந்துவிடக்கூடாது என்பதற்காக மணலால் ஆன சிவ லிங்கத்தை வைத்து ராமர் பூஜித்தார்.

எனவே ராமனே ஈசுவரனை வணங்கியதால் இக்கோயில் மூலவர் சிவபெருமானுக்கு இராம நாத சுவாமி என்றும் இந்த நகரத்திற்கு ராமேஸ்வரம் அதாவது இராம ஈசுவரம் என்றும் பெயர் பெற்றது என்று நம்பப்படுகிறது.

இந்த ராமநாஹ சுவாமி கோவில், இந்தியாவின் 12 ஜோதிர்லிங்க வழிபாடு தளங்களில் ஒன்று.

நுணுக்கமாக செதுக்கப்பட்ட கோபுரங்கள், வசீகரமான அலங்கரிக்கப்பட்ட தாழ்வாரங்கள் மற்றும் கூரையில் வசீகரிக்கும் தாமரை கலைவடிவம் பார்ப்பவர்களின் கண்களுக்கு விருந்தளிக்கிறது!

ராமநாத சுவாமி கோவிலை தவிர இங்கு வேறு சில கோவில்களும் உள்ளன

புனித நீர்நிலைகள்

இங்கு மொத்தம் 23 நீர்நிலைகள் உள்ளன. இந்த புனித தீர்த்தங்களில் ஒரு குளித்தால், அவரது பாவங்கள் கழியும் என்பது ஐதீகம்.

ராமேஸ்வரம் சென்று வந்தால் நிச்சயம் இங்கு புனித நீராடவேண்டும். இல்லை என்றால் யாத்திரை முழுமையடையாது என நம்பப்படுகிறது.

இந்த நீர்நிலைகளில் முதன்மையானதாக கருதப்படுவது அக்னிதீர்த்தம் தான். புராணத்தின்படி சீதை இங்கு நீராடிவிட்டு தான் சிவனுக்கு பூஜைகளை செய்தார். இதனால், மற்ற நீர்நிலைகளை காட்டிலும், அக்னிதீர்த்தத்தில் குளிப்பது மிக முக்கியம்

ராமேஸ்வரம்: கோவில்கள் முதல் கோஸ்ட் டவுன் வரை- ஆன்மீகமும் அமானுஷ்யமும் கலந்த சூப்பர் ஸ்பாட்
ராமேஸ்வரம்: பாம்பன் பாலத்தில் நேருக்கு நேர் மோதிய பேருந்துகள் : 8 பேர் படுகாயம் | Video

தனுஷ்கோடி

இதனை பேய் நகரம், அதாவது கோஸ்ட் டவுன் என்று அழைக்கின்றனர்.

ராமேஸ்வரத்தில் இருந்து சுமார் 280 கிமீ தொலைவில் அமைந்திருக்கிறது தனுஷ் கோடி. 1964ஆம் ஆண்டு ஏற்பட்ட ஒரு பெரும் புயலால் நகரமே அழிந்தது. இந்த இயற்கை பேரிடரில் 2000 பேர் வரை உயிரிழந்தனர்.

இவர்களின் ஆன்மாக்கள் இன்றும் தனுஷ்கோடியில் உலாவி வருவதாகவும், மனிதர்கள் சென்றால் இவை தாக்குவதாகவும் கட்டுக்கதைகள் கூறப்படுகிறது.

இங்கு தற்போது மனிதர்கள் யாரும் செல்வதில்லை என்றாலும் பிரபலமான சுற்றுலா தலமாக இருக்கிறது தனுஷ்கோடி.

ராமேஸ்வரம்: கோவில்கள் முதல் கோஸ்ட் டவுன் வரை- ஆன்மீகமும் அமானுஷ்யமும் கலந்த சூப்பர் ஸ்பாட்
கோவை: ஆதியோகி கழுத்தில் இருக்கும் 7 பாம்புகள் எதை குறிக்கிறது? ஈஷா பற்றிய சுவாரஸ்யங்கள்

கடற்பாலமும் கடற்கரைகளும்

ராமேஸ்வரத்தில் கடற்கரைகள் ஏராளம். இங்கு தண்ணீர் விளையாட்டுகள் அனுமதிக்கப்படுகிறது. பாம்பன் கடற்கரை, அரியமான் கடற்கரை, சங்குமால் கடற்கரை, குந்துகால் கடற்கரை, ஓலைக்குடா கடற்கரை மற்றும் குருசடை தீவு ஆகியவை நிச்சயம் விசிட் செய்யவேண்டிய கடற்கரைகள்

இதை தவிர இங்கு ஒரு கடற்பாலம் உள்ளது. பாம்பன் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த பாலம் வரலாற்று சிறப்புகள் கொண்டது. இதன் மேல் பயணிப்பதும் ஒரு த்ரில்லிங்கான அனுபவத்தை கொடுக்கும்.

இவை எல்லாவற்றையும் தவிர, இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம் பிறந்த ஊரும் ராமேஸ்வரம் தான்!

ராமேஸ்வரம்: கோவில்கள் முதல் கோஸ்ட் டவுன் வரை- ஆன்மீகமும் அமானுஷ்யமும் கலந்த சூப்பர் ஸ்பாட்
Kerala: ’ஏழைகளின் ஊட்டி’ Nelliyampathy மலைகள் குறித்து தெரியுமா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlustாமேஸ்வரம்

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com