ஜூன் மாதத்துக்கான உங்க பயணத்தை பிளான் பண்ணியாச்சா? இந்த மலைபிரதேசங்கள ட்ரை பண்ணுங்க

அட மலைப்பிரதேசம் என்றதும் அதற்கான பட்ஜெட்டை நினைத்து மலைக்க வேண்டாம். குறைந்த செல்லக் கூடிய இந்தியாவின் சிறந்த மலைப்பிரதேசங்களின் பட்டியல் இங்குக் கொடுக்கப்படுகிறது. குறிப்பாக ஜூன் மதத்தில் போவதற்கு ஏற்ற இடங்கள் இவை.
Travel
TravelNews Sense
Published on

ஊர் சுற்றிப் பார்க்க வேண்டும் என ஒருவர் கூறுவதற்குப் பல அர்த்தங்கள் இருக்கிறது. பல ஊர்களின் உணவுகளைச் சாப்பிடுவதாக இருக்கலாம், அன்றாட சுழற்சியிலிருந்து விடுபடுவதாக இருக்கலாம், புதிய மனிதர்களைச் சந்திப்பதாக இருக்கலாம், புதியவற்றை அறிந்துகொள்வதாக அல்லது இயற்கையில் லயிப்பதாக இருக்கலாம். இதில் எதற்காகச் செல்வதாக இருந்தாலும் மலைப்பிரதேசங்கள் சிறந்த இடமாக அமையும்.

அட மலைப்பிரதேசம் என்றதும் அதற்கான பட்ஜெட்டை நினைத்து மலைக்க வேண்டாம். குறைந்த செலவில் செல்லக் கூடிய இந்தியாவின் சிறந்த மலைப்பிரதேசங்களின் பட்டியல் இங்குக் கொடுக்கப்படுகிறது. குறிப்பாக ஜூன் மதத்தில் போவதற்கு ஏற்ற இடங்கள் இவை.

கசோல், இமாச்சல பிரதேசம்

இமாச்சல பிரதேச மலைப்பகுதியில் உள்ள குக்கிராமம் தான் கசோல். மிக அமைதியான வானளாவிய மலை. மிதமான பனியில் கேம்ப் ஃபயர் அமைத்து நண்பர்களுடன் நேரம் செலவிட அல்லது நடு இரவு வரை விரும்பும் இசையைக் கேட்க, கிட்டார் சத்தத்துடன் நட்பு கொண்டாட விரும்புபவர்களுக்கு ஏற்ற இடம் கசோல். இங்கு 500 ரூபாயிலிருந்து தங்குமிடங்கள் கிடைக்கிறது. குடும்ப சுற்றுலாவுக்கும் இது ஏற்றதாக இருக்கும்

கசோல்
கசோல்Twitter

லாண்ட்ஸ்டவ்ன், உத்திரகாண்ட்

டெல்லியிலிருந்து 250 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது லாண்ட்ஸ்டவ்ன் மலைப்பிரதேசம். அட்வென்சர் விரும்பிகளும் ஆன்மிக பயணம் மேற்கொள்பவர்களும் ஒன்றாகச் செல்லமுடியுமென்றால் அது லாண்ட்ஸ்டவ்ன் தான். ஜூன் மாதத்தில் இங்குப் பச்சை நிறமுடுத்திய பைன் மற்றும் ஓக் மரங்களைக் காணலாம். இங்கு வசதியான ஹோட்டல்களில் தங்கினால் கூட 1500 ரூபாய் தான் செலவாகும்.

லாண்ட்ஸ்டவ்ன்
லாண்ட்ஸ்டவ்ன்Canva
Travel
காசர்கோடு முதல் சக்லேஷ்பூர் வரை : தென் இந்தியா - மிஸ் பண்ணக்கூடாத இந்த 10 இடங்கள்

கொடைக்கானல், தமிழ்நாடு

கொடைக்கானலில் சுற்றிப்பார்க்கப் பல இடங்கள் உள்ளன. குறிப்பாக அருவிகள், ஏரிகள், பைன் மரக் காடுகள், தோட்டங்கள், பூங்காக்கள் என அடுக்கிக்கொண்டு போகலாம். கொடைக்கானல் குளிர் பற்றிச் சொல்லத் தேவையேயில்லை. தலா 450 ரூபாயில் இங்குத் தங்குமிடங்கள் கிடைக்கும்.

கொடைக்கானல்
கொடைக்கானல்Canva
Travel
இந்தியாவில் இந்த 7 இடங்களிலிருந்து சூரியன் உதிப்பதைப் ஒருமுறையேனும் பாருங்கள்

ரிஷிகேஷ், உத்தரகாண்ட்

டெல்லியிலிருந்து 233 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது ரிஷிகேஷ். இது ஒரு பனிப் பிரதேசம் ஆகும். இங்கு ஆற்றில் பயணம் செய்வது மிகப் பிரபலம். கங்கை ஆற்றின் சுத்தமான பக்கங்களை இங்குக் காணலாம். சில ஆன்மிக தலங்களும் இங்கு உள்ளன.

ரிஷிகேஷ்
ரிஷிகேஷ்Canava
Travel
நேபாளம் முதல் கம்போடியா வரை: கொஞ்சம் காசு இருந்தால் போதும் இந்த நாடுகளுக்கு போய் வரலாம்

மெக்லியோட் கஞ்ச், இமாச்சல பிரதேசம்

ஒரு அமைதியான ஆன்மிக பயணத்துக்கு மெக்லியோட் கஞ்ச் செல்லலாம். இங்கு தான் தலாய்லாமா உள்ளது. புத்தம் குறித்த தேடலுக்கு ஏற்ற இடமாக இருக்கும் மெக்லியோட் கஞ்ச் மறுபக்கம் ட்ரெக்கிங் செல்ல வசதியான மலைப்பிரதேசமாகவும் இருக்கிறது. நிதானமான சாகசங்கள் புரிய மெக்லியோட் கஞ்ச் சரியான தேர்வு.

மெக்லியோட் கஞ்ச்
மெக்லியோட் கஞ்ச்Canva

இனி என்ன? இந்த மாதத்துக்கான உங்க ட்ரிப்பை பிளான் பண்ணத் தொடங்குங்க!

Travel
ரிஷிகேஷ் முதல் கசோல் : ரூ.5000 செலவில் இந்தியாவில் சுற்றிப்பார்க்க 7 அட்டகாச இடங்கள்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com