நேபாளம் முதல் கம்போடியா வரை: கொஞ்சம் காசு இருந்தால் போதும் இந்த நாடுகளுக்கு போய் வரலாம்

உலக சுற்றுலா பணக்காரர்களுக்கானது மட்டுமல்ல. சரியான திட்டமிடலுடன் பயணத்தை மேற்கொண்டால் நடுத்தர வர்கத்தினர் கூட உலகை சுற்றலாம். அப்படி நாம் செல்லமுடியக் கூடிய பட்ஜெட் நாடுகள் இதோ!
Nepal
NepalPixabay

ஊர் சுற்ற பிடிக்கும் அனைவருக்கும் நிச்சயமாக உலகம் சுற்றவும் பிடிக்கும். ஆனால் இந்த உலக சுற்றுலா எல்லாம் பணக்காரர்களுக்கானது என்று ஒதுக்கி வைத்துவிடுவோம். நடுத்தர குடும்பத்தினர் கூட எளிதாகப் போய்வரக் கூடிய 20 நாடுகளின் பட்டியல் இங்குக் கொடுக்கப்பட்டுள்ளது.

நேபாளம்

நேபாளம் தலைநகர் காத்மண்டூவில் சுற்றிப்பார்க்கல் அதிக இடங்கள் உள்ளது, உலகம் முழுவதும் இருந்து குறிப்பாக ஐரோப்பிய நாடுகளிலிருந்து அதிக சுற்றுலாப் பயணிகள் வருவதனால் அவர்களுக்கான (பணக்காரர்களுக்கான) வசதிகள் அதிகமாக இருக்கும். சில வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் செலவைக் குறைக்க முடியும். காத்மாண்டுவில் இல்லாமல் அருகிலுள்ள நகரங்களில் காணலாம். உள்ளூர் வாசிகளுடன் அவர்கள் உணவருந்தும் இடங்களில் உணவருந்தலாம். உங்களுக்கு உங்கள் உடன் வருபவர்களுக்கும் ட்ரெக்கிங் செய்யத் தெரியுமானால் லாங்டாங், அன்னபூர்ணா பகுதி மற்றும் எவரெஸ்ட் பேஸ் கேம்ப்பில் உள்ள எளிமையான மலையேற்றங்களில் நீங்களே ட்ரெக்கிங் செய்யலாம்.

Taiwan
TaiwanPexels

தைவான்

தைவானில் நாம் 600 ரூபாய்க்குள் அறை எடுத்துத் தங்கிக்கொள்ள முடியும். அவ்வளவு குறைந்த செலவில் விடுதிகள் கிடைக்கின்றன. இரவு சந்தைகள், பாரம்பரிய சுற்றுலா, கலாச்சாரங்கள் குறித்து அறிய, ஆன்மீக சுற்றுலா, சைக்கிள் பயணம், இயற்கை சுற்றுலா ஆகியவற்றுக்குத் தைவான் பெயர்போனது.

ஒரு நாளுக்கு 800 முதல் 1000 ரூபாய் செலவில் உணவு தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள முடியும். இந்திய உணவுகளும் கிடைக்கும். மேற்கத்திய உணவுகளுக்கு அதிக விலை கொடுக்க வேண்டியது இருக்கும்.

டாக்ஸியோ, பொது போக்குவரத்தோ பயன்படுத்தி 1000 ரூபாய் போக்குவரத்து செலவிலேயே பல இடங்களைப் பார்த்துவிடலாம்.

Nepal
OMG ! உலகின் மிகப் பெரிய பாலைவனம் சஹாரா கிடையாதா? சுவாரஸ்யமான 5 உண்மைகள்
Vietnam
VietnamPexels
Nepal
வியட்நாம் போர் வரலாறு - "அமெரிக்காவின் பயங்கரவாதம்" | பகுதி - 1

வியட்நாம்

மலை நகரங்கள், பள்ளத்தாக்குகளில் படகு சவாரி மற்றும் 2000 ஆண்டு பழமையான கட்டிடங்கள் ஆகியவற்றை இங்கு காணலாம். சீனாவில் அருகிலுள்ள இந்த நாடு சுற்றுலாத்துறைக்குப் பெயர்பெற்றது. சரியான திட்டமிடலுடன் சென்றால் செலவைக் குறைத்து நிறைவான அனுபவத்துடன் திரும்பலாம்.

Kenya
KenyaPixabay

கென்யா

தைவானுக்கு ஆகும் செலவுகளை ஒத்ததே கென்யாவின் செலவுகளும். கென்யா வளமான பல்லுயிர் பெருக்கத்தைக் கொண்ட நாடாகும்,மயக்கும் சஃபாரி சாகசங்கள் முதல், அழகிய நிலப்பரப்புகள் மற்றும் வளமான கலாச்சார பாரம்பரியம் வரை, கென்யா கட்டாயம் பார்க்க வேண்டிய நாடாக வரைபடத்தில் தன்னை நிலைநிறுத்தியுள்ளது. உலக சுற்றுலா செல்பவர்கள் அவசியம் கென்யாவை பார்வையிடுவர். காடுகளுக்குள் செல்ல அதிக செலவு ஆகலாம். ஏமாற்றும் ட்ராவல் ஏஜென்ஸிகளிடம் இருந்து பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

Myanmar
Myanmar Pixabay

மியான்மர்

சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளுக்குச் செல்வதை விட மலிவானது மியான்மர் சுற்றுலா. மணிப்பூர் மாநிலத்தின் இக்பாலுக்கு சென்று அங்கிருந்து மியான்மருக்கு போக முடியும். யாங்கோன் மற்றும் மாண்டலே போன்ற நகரங்களைச் சுற்றிப்பார்க்கப் பல சுற்றுலாப் பயணிகள் வருவதுண்டு. தமிழர்கள் அதிகம் வாழ்ந்த பகுதிகளையும் பார்வையிடலாம்.

Nepal
Spiti Valley : செல்வதற்கு முன் தெரிந்து கொள்ள வேண்டிய 9 விஷயங்கள்
Bhutan
BhutanPexels

பூடான்

மேற்கு வங்கம் வழியாகப் பூடானில் நுழைந்தால் செலவுகள் குறைவு. சுற்றுலாத்துறை பாக்கெஜில் சென்றால் செலவுகள் அதிகமாகும். குர்ஜி லக்ஹாங், தக்சாங் மடாலயம், சிங்கே சோங் என ஊரூராகச் சுற்றி பூடானின் அழகை ரசித்து வரலாம்.

Nepal
பூடான்: ஒரு புதிரான தேசத்தின் பிரமிக்க வைக்கும் வரலாறு
இலங்கை
இலங்கைPexels

இலங்கை

பல நாடுகளுக்கும் சுற்றிவிட்டு பக்கத்திலிருக்கும் இலங்கையைத் தவறவிடுவது எப்படி? அனுராதா புரம், யாலா தேசிய வனம், மலைப் பிரதேசங்கள் என இலங்கையில் சுற்றிப்பார்க்கப் பல இடங்கள் உள்ளது. தற்போது பொருளாதார நெருக்கடியால் அதிக விலை இருக்கலாம். இலங்கை பழைய நிலைக்குத் திரும்பினால் சட்டென்று பெட்டியைத் தூக்கிக்கொண்டு கிளம்பிவிடலாம்.

Nepal
திருகோணமலை: இலங்கை அரசியல்வாதிகள் எல்லாம் அங்கு பதுங்குவது ஏன்? அதன் முக்கியத்துவம் என்ன?
தாய்லாந்து
தாய்லாந்துPexels

தாய்லாந்து

தாய்லாந்து குடும்பமாக, ஜோடிகளாக, நண்பர்களாக என எப்படி வேண்டுமானாலும் செல்ல சுலபமான இடம். அதன் அழகை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை. அதிக வெளிநாட்டவர்கள் வந்து செல்லும் தாய்லாந்துக்குச் சுற்றுலா தான் முக்கிய வருமானமாகவும் இருக்கிறது. பணக்காரர்களில் ஆதிக்கம் அதிகம் என்பதால் குறைந்த விலைக்கு சீசன் பாக்கெஜ்கள் வரும் போது சென்றால் செலவு குறைவாக இருக்கும்.

Nepal
பாலியல் சுற்றுலா : ஏழை நாடுகளைச் சுரண்டும் மேற்குலக நாடுகள்!
இந்தோனேசியா
இந்தோனேசியாTwitter

இந்தோனேசியா

பாலிதீவு, யோக்யகர்த்தா நகரம் என இந்தோனேசியாவின் அழகான சுற்றுலாத்தலங்களின் பட்டியலே மிக நீளம். ஒரு நாளைக்கு 2000 ரூபாய் செலவில் நீங்கள் இங்குத் தங்க முடியும். குறைந்த விலை விடுதிகள் கிடைக்கின்றன. உள்ளூர் உணவுகளைச் சாப்பிட்டு சிக்கனமாகப் பயணத்தை மேற்கொள்ள முடியும்.

Nepal
இந்தோனேசியா தன் தலை நகரை மாற்றுவது ஏன்? புதிய தலை நகர் எது? தலை நகரை மாற்ற காரணங்கள் என்ன?
Angor Wat
Angor WatNews Sense

கம்போடியா

அங்கோர்வாட் கோவிலுக்காகவே கம்போடியா செல்பவர்கள் அதிகம். இந்தியர்கள் அதிகம் சுற்றுலா செல்ல விரும்பும் இடங்களில் கம்போடியாவும் ஒன்று. டாக்ஸியில் அதிகபட்சம் ஒரு கிலோமீட்டருக்கு 60 - 120 ரூபாய் செலவாகும். பொது போக்குவரத்தையும் பயன்படுத்தலாம்.

Nepal
கம்போடியா அங்கோர் வாட்: பிரமிக்க வைக்கும் பொக்கிஷம் - சோழ மன்னர்கள் கட்டியதா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com