மேற்கு தொடர்ச்சி மலை : குளிர்காலத்தில் நிச்சயம் காணவேண்டிய 5 அற்புத தலங்கள்!

மலையேற்றம் முதல் லாங் டிரைவ்கள் வரை ரம்மியமான இயற்கை காட்சிகளுடன், மழை காலத்தில் சுற்றுலா செல்லக் கூடிய இடங்கள் இதோ!
5 Places Must be Explored During The Monsoon
5 Places Must be Explored During The MonsoonTwitter

சுற்றுலா செல்வது அனைவருக்கும் பிடித்தமான ஒரு விஷயம். அதுவும் குளிர்காலத்தில் செல்ல வேண்டும் என்றால் சொல்லவே வேண்டாம். இப்போது நிலவும் ரம்மியமான காலநிலையில் மனத்திற்கு பிடித்த இடங்களுக்கு செல்ல யாருக்கு தான் பிடிக்காது.

அதிலும் மேற்கு தொடர்ச்சி மலைகள் மழைக்காலங்களில் காணக்கூடிய ஒரு காட்சியாகும்.

மலையேற்றம் முதல் லாங் டிரைவ்கள் வரை ரம்மியமான இயற்கை காட்சிகளுடன், மழை காலத்தில் சுற்றுலா செல்லக் கூடிய இடங்கள் இங்கே பட்டியலிடப்பட்டுள்ளன.

வால்பாறை ( Valparai )

கடல் மட்டத்திலிருந்து 3500 அடி உயரத்தில் வால்பாறை மலைத்தொடர் அமைந்துள்ளது. பொள்ளாச்சிக்கு 65 கி.மீ தூரத்திலும் கோயம்புத்தூரிலிருந்து 102 கி.மீ தூரத்திலும் இருக்கிறது.

இம்மலைத்தொடர் தேயிலை தோட்டங்கள் நிறைந்த சுற்றுசுழல் மாசற்ற சூழலுடன் மிகுந்த செழிப்பாக உள்ளது. இது தமிழ்நாட்டின் சிறந்த சுற்றுலா தலங்களில் ஒன்றாகும்.

தேக்கடி (Thekkady)

கேரள மாநிலத்தின் இடுக்கி மாவட்டத்தில் உள்ள குமுளி எனும் ஊரிலிருந்து சுமார் 4 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள சுற்றுலாத் தலம் தேக்கடி. இந்தப் பகுதி பசுமைமாறாக் காடுகளுக்காகவும், சவானா புல்வெளிகளுக்காகவும் புகழ் பெற்றது.

673 சதுர கி.மீ. பரப்பளவிலான பெரியாறு தேசியப் பூங்கா எனும் பெரியாறு புலிகள் சரணாலயப் பகுதியில் யானை, புலி, சோலை மந்தி, காட்டு எருமை, மான் போன்ற உயிரினங்கள் இருக்கின்றன.

காவலேதுர்கா கோட்டை (Kavaledurga Fort)

அடர்ந்த காடுகளுக்கு மத்தியிலும் மலையின் உச்சியிலும் அமைந்துள்ள கோட்டை காவலேதுர்கா. ஷிமோகாவின் தீர்த்தஹள்ளியிலிருந்து 18 கிமீ (11 மைல்) தொலைவில் உள்ள 9 ஆம் நூற்றாண்டு கோட்டையாகும்.

இடிபாடுகள் மற்றும் பழைய அரண்மனை தவிர, வெங்கடப்ப நாயக்கரால் கட்டப்பட்ட ஒரு மசூதியையும் இங்கு காணலாம். சூரியன் மறைவைக் காண இயற்கை எழில் கொஞ்சும் இடமாகவும் இது விளங்குகிறது.

5 Places Must be Explored During The Monsoon
மழைக் காலத்தில் டூர் செல்பவரா நீங்கள்? - இந்த இடங்கள் குறித்து தெரிந்து கொள்ளுங்கள்

அவலாஞ்சி (Avalanche)

நீலகிரி மாவட்டம் உதகமண்டலத்தில் இருந்து 28 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஏரி தான் அவலாஞ்சி.

ஏரியின் அருகில் சுற்றுலாப்பயணிகள் கூடாரங்களை அமைத்தும் தங்குகின்றனர். ஏரிக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் மீன்பிடிப்பில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளலாம்.

இகத்புரி ( Igatpuri )

நாசிக் மாவட்டத்தில் உள்ள இந்த நகரம் மகாராஷ்டிராவின் முக்கியமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகும். கடல் மட்டத்திலிருந்து 600 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இந்த நகரம் உணர்வுகளுக்கு விருந்தளிக்கிறது.

வழியும் அருவிகள் மற்றும் பசுமை அடர்ந்த காடுகள் என்று எங்கு திரும்பினாலும் நம் கண்களுக்கு திகட்ட வைக்கும் அளவுக்கு இயற்கை எழில் ததும்புகிறது. இகத்புரி மும்பையிலிருந்து சாலை மார்க்கமாக 116 கிமீ தொலைவில் உள்ளது.

5 Places Must be Explored During The Monsoon
வாகமன் : ட்ரெக்கிங், போட்டிங், அருவி குளியல் - வீக் எண்ட் சுற்றுலாவுக்கு தரமான இடம்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com