மழைக் காலத்தில் டூர் செல்பவரா நீங்கள்? - இந்த இடங்கள் குறித்து தெரிந்து கொள்ளுங்கள்

கோடைக்காலத்தில் சுற்றுல செல்வதில் ஒரு மகிழ்ச்சி என்றால், மழைக்காலத்தில் செல்வதிலும் ஒரு திரில் இருக்கிறது. ஆனால், அதுவும் குறிப்பிட்ட இடங்களுக்கு செல்லும்போது தான். ஆகையால், நீங்கள் மழைக்காலத்தில் சுற்றுலா செல்பவராக இருந்தால், உங்கள் லிஸ்ட்டிலிருந்து இந்த இடங்களை நீக்கிவிடுங்கள்
மழைக் காலத்தில் டூர் செல்பவரா நீங்கள்?
மழைக் காலத்தில் டூர் செல்பவரா நீங்கள்? NewsSense

மழைக்காலம் வந்துவிட்டாலே பிரத்யேகமான சுற்றுலாத் தலங்களைத் தேடி மக்கள் பயணிப்பது இயல்பான ஒரு விஷயம்தான். கோடை முடிந்து வரும் பருவமென்பதால், மழையை அனுபவிக்கும் பயணங்களைத் திட்டமிடும் பல குடும்பங்கள் இந்தியாவில் இருக்கின்றன. ஆனால், மழைக்காலங்களில் சில இடங்களில் பயமுறுத்தும் மற்றும் நிலச்சரிவு, வெள்ளப்பெருக்கு போன்றவை ஏற்படுவதும் தவிர்க்கமுடியாத ஒன்றாக இருந்து வருகிறது.

ஒருவேளை நீங்கள் ஒரு மழைக்காலப் பயணத்தைத் திட்டமிடுபவராக இருந்தால், இந்த இடங்களுக்குப் பயணம் செய்வதைத் தவிர்க்கவும். இது உங்கள் சொந்த பாதுகாப்புக்கான அறிவுறுத்தல்.

1. கின்னார்


கின்னார் பள்ளத்தாக்கு ஆண்டு முழுவதுமே அழகாக காணப்படும் ஒரு பகுதியாகும். இருப்பினும் ஏப்ரல் மற்றும் ஜூன் மாதங்களுக்கு இடையில் அல்லது மழைக்காலங்களுக்குப் பிறகு இந்த இடத்திற்கு ஒரு பயணத்தைத் திட்டமிடுவது சிறந்தது. காரணம், பருவமழை காலத்தில் இங்கு வானிலை மிகவும் எதிர்பாராததாக மாறக்கூடியது. எனவே முக்கியமாக பருவமழை மாதங்களைத் தவிர்ப்பது நல்லது. இடைவிடாத மழையின் காரணமாக கின்னார் அடிக்கடி நிலச்சரிவுகளைச் சந்திக்கும். எனவே ஜூலை மற்றும் செப்டம்பர் மாதங்களில் இந்த இடத்திற்குச் செல்வதைத் தவிர்ப்பது நல்லது.

மழைக் காலத்தில் டூர் செல்பவரா நீங்கள்?
வானிலிருந்து பொழியும் மீன் மழை - காரணம் என்ன?

2. உத்தராகண்ட் :


உத்தராகண்டின் சில பகுதிகளில் பருவமழையின் போது வானிலையானது அச்சுறுத்தக் கூடியதாக இருக்கும். டெல்லி-என்.சி.ஆர்.க்கு அருகாமையில் இருப்பதால், இந்த இடம் ஆண்டு முழுவதும் நெரிசலாகவே இருக்கும். இருப்பினும், பருவமழையின் போது, உத்தராகண்டின் மேல் பகுதிகளில் நிலச்சரிவுகள், வெள்ளம் ஏற்படுவதற்கு அதிகமான வாய்ப்புகள் இருக்கிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அந்நேரங்களில், மக்கள் அவர்களுக்கு தீங்கு விளைவிக்கும் இடங்களுக்குச் செல்வதைத் தவிர்ப்பதற்காக தொடர்ச்சியாக வானிலை எச்சரிக்கைகளையும் வானிலை ஆய்வாளர்கள் வழங்குகிறார்கள்.

மழைக் காலத்தில் டூர் செல்பவரா நீங்கள்?
மழைக் காலத்தில் பார்க்க வேண்டிய இந்தியாவின் சிறந்த இடங்கள் - ஓர் அட்டகாச பயணம்

3. அசாம் :


ஆண்டுதோறும் மழைக்காலங்களில், அசாமின் பல பகுதிகளிலிருந்தும் நிலச்சரிவுகள் பற்றிய செய்திகளை நாம் பார்க்க முடியும். எனவே குறிப்பிட்ட இந்த நாட்களில் மட்டும், அசாம் செல்வதைத் தவிர்ப்பது நல்லது. காரணம், நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கினால் சாலைகள் துண்டிக்கப்படுவதென்பது அசாமைப் பொறுத்தவரையில் வழக்கமான ஒன்று.

மழைக் காலத்தில் டூர் செல்பவரா நீங்கள்?
1900 கி.மீ பயணம் - 8 ஆண்டுகளுக்கு பிறகு செல்ல நாயுடன் சேர்ந்த பெண் - ஒரு அடடே நிகழ்வு

4. பீகார் :


அக்டோபர் மற்றும் மார்ச் மாதங்கள் தான் பீகாருக்குச் செல்வதற்கான ஏற்ற காலகட்டமாகும். பீகார் வெள்ளத்தால் எளிதாகப் பாதிக்கப்படக் கூடிய பகுதியாகும். அதற்கேற்ப திட்டமிடாவிட்டால், எதிர்பாராத வானிலை உங்கள் விடுமுறைத் திட்டங்களைக் கெடுத்துவிடும் வாய்ப்புகள் அதிகம்.

புர்ஹி, கோசி, கந்தக் மற்றும் பாக்மதி போன்ற பெரிய ஆறுகள் இமயமலையிலிருந்து உருவாகி வடக்கு பீகாரில் பாய்வதால், அங்கு அடிக்கடி பெரிய அளவிலான வெள்ளப்பெருக்கும் ஏற்படுகின்றன.

மழைக் காலத்தில் டூர் செல்பவரா நீங்கள்?
மேகாலயா முதல் லடாக் வரை : பெண்கள் பயணம் செய்ய ஏற்ற 8 இடங்கள்!

5. மேகாலயா :


இந்த ஆண்டு, ஜூன் 1 முதல் 22 வரை, இப்பகுதியில் கடந்த ஆண்டுகளை விட 161% அதிக மழை பதிவாகியுள்ளது. வழக்கமாக பதிவாகும் மழையின் அளவான 503.1 மிமீ க்கு பதிலாக, இந்த ஆண்டு 1314.4 மிமீ மழை பதிவாகியுள்ளது. இதனால் நிலச்சரிவு ஏற்பட்டு நெடுஞ்சாலைகள் துண்டிக்கப்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டிருக்கிறது.

சாலைகள் மட்டுமின்றி, மொபைல் நெட்வொர்க் இணைப்பும் தடைபட்டுள்ளது. எனவே, மழைக்காலத்தில் மேகாலயாவைத் தவிர்ப்பது நல்லது. அதற்குப் பதிலாக நவம்பர் முதல் பிப்ரவரி வரையிலான குளிர்கால மாதங்களில் ஒரு பயணத்தைத் திட்டமிடலாம்.

6. டார்ஜிலிங் :


பெரும்பாலான கிழக்கு மாநிலங்களைப் போலவே டார்ஜிலிங், மழைக்காலத்தில் மந்தமாக மாறிவிடும். வாரத்தின் பாதி நாட்களில் தொடர்ந்து மழை பெய்வதால், மக்கள் நாள் முழுவதும் ரெயின்கோட் அணிந்து வெளியே வரவேண்டிய சூழலே அங்கு நிலவும். இந்த நேரத்தில், அங்கிருக்கும் தேயிலைத் தோட்டங்களில் சுற்றித் திரிவது நல்லதல்ல.

ஏனெனில் பாதைகள் வழுக்கும் தன்மை கொண்டவையாக முற்றிலுமாக மாறிப்போயிருக்கும். எனவே மழைக்காலங்களில் இந்த இடத்தை தவிர்த்துவிட்டு, கோடை காலத்தில் உங்கள் பயணத்தை திட்டமிடுவது நல்லது.

7. மும்பை :

மழைக் காலங்களில் மும்பையின் இயற்கையானது எழில்மிக்க ஒன்றுதான் என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால், இது மக்களுக்கு பல மடங்கு சிரமங்களையும் உண்டாக்குகிறது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். இடைவிடாத மழை காரணமாக உள்ளூர் ரயில் சேவைகள் நிறுத்தப்படுவது மும்பையின் பெரிய சிக்கல்களில் ஒன்று.

மேலும் பெருமழை வந்துவிட்டால், தண்ணீர் சீக்கிரம் தேங்கிவிடும் அபாயம் இருப்பதால் ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு செல்வது மிகவும் கடினமான ஒன்றாகவும் மாறிவிடுகிறது. எனவே மும்பை உங்கள் பயணத் திட்டத்திலிருந்தால், கவனமாக இருப்பது சிறந்தது.

மழைக் காலத்தில் டூர் செல்பவரா நீங்கள்?
மறைக்கப்பட்ட அரண்மனை : மழை காலத்தில் நீங்கள் நிச்சயம் போக வேண்டிய இடங்களில் ஒன்று இது

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com