இந்தியாவில் இருக்கும் ரயில்-தீம் உணவகங்கள் பற்றி தெரியுமா? இங்கு என்ன சிறப்பு?

ரயில்களை ரசிப்பவர்கள் மற்றும் புதுமையான உணவுகளை அனுபவிக்க விரும்புவோருக்கு, இந்தியாவில் உள்ள ஐந்து ரயில்-தீம் கொண்ட உணவகங்கள் பற்றி சொல்ல போகிறோம்.
5 Unique Train-Themed Restaurants in India
5 Unique Train-Themed Restaurants in India Twitter
Published on

உணவுப் பிரியர்கள் வித்தியாசமான உணவுகளை மட்டும் தேடி தேடி சாப்பிட நினைக்கவில்லை, மாறாக உணவகத்தின் தனித்துவமான அமைப்பையும் அனுபவிக்க விரும்புகிறார்கள்.

உலகில் பல வித்தியாசமான உணவகங்கள் இருக்கின்றன. ஆனால் இந்த பதிவில் ரயில்களை ரசிப்பவர்கள் மற்றும் புதுமையான சாப்பாட்டு அனுபவங்களை பெற விரும்புவோருக்கு, இந்தியாவில் உள்ள ஐந்து ரயில்-தீம் கொண்ட உணவகங்கள் பற்றி சொல்ல போகிறோம்.

ரெயிலியஸ் கஃபே - டெல்லி

தெற்கு டெல்லியின் கைலாஷ் காலனியில் அமைந்துள்ள ரெயில்சியஸ் கஃபே ஒரு புதுமையான உணவு அனுபவத்தை வழங்குகிறது. இந்த கஃபே காதலர்களுக்கும் சரி குடும்பமாக வந்து சாப்பிடுபவர்களுக்கும் சரி சூப்பர் ஸ்பாட் என்றே சொல்லலாம். அதன் உட்புறங்கள் ரயில் நிலையத்தை போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது.

நேரம் : காலை 11 மணி - இரவு 11 மணி

விலை: இரண்டு பேருக்கு 1,400 ரூபாய்

ஹல்திராம்ஸ் - விஜயவாடா & நாக்பூர்

ஹல்திராம், உண்மையான ரயில் அமைப்பில் ஆடம்பரமான உணவை ருசிக்க உங்களை அனுமதிக்கிறது. ஐஆர்சிடிசி போன்ற தளங்கள் வழியாக உங்கள் உணவை ஆன்லைனில் ஆர்டர் செய்யலாம்.

24 மணி நேர சேவையை வழங்குகிறது.

விலை: இரண்டு பேருக்கு 300-350 ரூபாய் ஆகும்.

போகி வோகி - மும்பை

மும்பை CST பகுதியில் அமைந்துள்ள போகி வோகி, பரபரப்பான ரயில் நிலையத்தின் அதிர்வை ஆக்கப்பூர்வமாக பிரதிபலிக்கிறது.

ரயில் பெட்டிகள், ரயில் பாதைகள் மற்றும் பழங்கால இரயில்வே நினைவுச் சின்னங்கள் உட்பட, இரயில் பயணத்தின் உணர்வை தூண்டும் வகையில், இந்த உணவகம் உருவாக்கப்பட்டுள்ளது.

நேரம் : மதியம் 12 மணி - மாலை 4 மணி

விலை: இரண்டு பேருக்கு ₹500

ஸ்டீம் - ஜெய்ப்பூர்

ஜெய்ப்பூரில் உள்ள ராம்பாக் அரண்மனைக்குள் அமைந்துள்ள ஸ்டீம் ஒரு அழகான உணவகமாகும். அந்தக் காலகட்டத்தின் சொகுசு ரயில்களால் ஈர்க்கப்பட்டு, பழங்கால ரயில் பெட்டிகளில் பிரத்யேகமான சாப்பாட்டு அனுபவத்தை வழங்குகிறது. இந்திய ரயில்வேயின் பொற்காலத்தை நினைவுபடுத்தும் சூழலை இங்கு மக்கள் அனுபவிக்கலாம்.

நேரம் : மாலை 6 மணி - இரவு 9:30 மணி

விலை: இரண்டு பேருக்கு ₹5,500

5 Unique Train-Themed Restaurants in India
ஒரு ரயில் டிக்கெட் வைத்து வெவ்வேறு ரயில்களில் பயணிக்கலாமா? இத்தனை நாள் இது தெரியாம போச்சே!

பிளாட்ஃபார்ம் 65 - பெங்களூர்

பெங்களூர் பன்னர்கட்டா சாலையில் அமைந்துள்ள பிளாட்ஃபார்ம் 65, இந்திய ரயில்வேயின் சூழலைக் கொண்டுள்ளது.

இந்த உணவகத்தின் தீம் குடும்பங்கள் கொண்டாடும் விதத்தில் உள்ளது.

பலவகையான உணவு வகைகளை ருசிக்கக்கூடிய தனித்துவமான உணவு அனுபவத்தை இது வழங்குகிறது.

நேரம் : மதியம் 12 - இரவு 11 மணி

விலை: இரண்டு பேருக்கு 1,300 ரூபாய் ஆகும்.

5 Unique Train-Themed Restaurants in India
ஊட்டி: 208 வளைவுகள், 250 பாலங்கள் கடக்கும் மலை ரயில் - இந்தியாவின் slowest train இது தான்!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com