பெங்களூரு விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானம் 50க்கும் மேற்பட்ட பயணிகளை மறந்துவிட்டு டார்மாக்கில் சென்றதை அடுத்து, விமான போக்குவரத்து இயக்குனரகம் ‘கோ ஃபர்ஸ்ட்’ விமான நிறுவனத்திடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கோ பர்ஸ்ட் என்ற விமான நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் பெங்களூருவில் இருந்து நேற்று காலை 6.40 மணிக்கு டெல்லிக்கு புறப்பட்டது.
ஆனால் 50-க்கும் மேற்பட்ட பயணிகள் விமானத்திற்கு வருவதற்கு முன்பே அவர்களை ஏற்றாமல் விமானம் புறப்பட்டு சென்றது.
சம்பந்தப்பட்ட பயணிகளின் போர்டிங் பாஸ்கள் மற்றும் அவர்களின் பைகள் அனைத்தும் சரிபார்க்கப்பட்ட பிறகு இது நடந்தது குறிப்பிடத்தக்கது.
நான்கு மணி நேரம் கழித்து, காலை 10 மணியளவில் புறப்பட்ட விமானத்தில் பயணிகள் அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பல பயணிகள் ட்விட்டரில் விமான சேவையை திட்டித் தீர்த்தனர்.
இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம், 'கோ பர்ஸ்ட்' விமான நிறுவனத்திடம் அறிக்கை கேட்டுள்ளது.
இதற்கிடையில், விமான நிறுவனம் மன்னிப்புக் கேட்டு, சம்பந்தப்பட்ட அனைத்து ஊழியர்களையும் பணியிலிருந்து நீக்கியது. மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust