முகேஷ் அம்பானிக்கு மிரட்டல் விடுத்தது இவர் தான் - மும்பை போலீஸ் கூறியது என்ன?

இது தொடர்பாக டி பி மார்க் காவல் நிலையத்தில் மருத்துவமனை நிர்வாகம் புகார் அளித்திருப்பதாகவும் செய்தி வெளியாகியுள்ளன. இப்படி ஒரே நாளில் மொத்தம் எட்டு அச்சுறுத்தல் அழைப்புகள் வந்ததாகக் கூறப்படுகிறது.
முகேஷ் அம்பானி
முகேஷ் அம்பானிTwitter

இந்தியாவின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானிக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

முகேஷ் அம்பானிக்கும், அவரது குடும்பத்தினரின் (மனைவி நீதா அம்பானி, மகன் ஆகாஷ் அம்பானி, மகன் ஆனந்த் அம்பானி...) உயிருக்கும் ஆபத்து விளைவிக்கும் வகையில் நேற்று (ஆகஸ்ட் 15, திங்கட்கிழமை) மும்பை நகரத்தில் உள்ள ரிலையன்ஸ் ஃபவுண்டேஷன் மருத்துவமனை தொலைபேசிக்கு அச்சுறுத்தல் வந்ததாகச் செய்திகள் வெளியாகின.

இது தொடர்பாக டி பி மார்க் காவல் நிலையத்தில் மருத்துவமனை நிர்வாகம் புகார் அளித்திருப்பதாகவும் செய்தி வெளியாகின. இப்படி ஒரே நாளில் மொத்தம் எட்டு அச்சுறுத்தல் அழைப்புகள் வந்ததாகக் கூறப்படுகிறது.

தற்போது மும்பை காவல்துறையினர் இந்த மிரட்டலுக்கு காரணமான நபரைக் கண்டறிந்து கைது செய்துள்ளனர்.

முகேஷ் அம்பானி
Jio அம்பானி கதை : திருபாய் நவீன இந்திய பொருளாதாரத்தின் குருபாய் | பகுதி 1

இது குறித்து மும்பை காவல்துறை தரப்பில் கூறப்பட்டதாவது, "தொழிலதிபர் முகேஷ் அம்பானிக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். காவலர்கள் விசாரணையில் அவர் விஷ்ணு பவ்மிக் (56) எனத் தெரிய வந்தது.

இவர், மும்பையில் உள்ள ரிலையன்ஸ் பவுண்டேஷன் மருத்துவமனையில் இருந்து நேற்று காலை லேண்ட் லைன்னைப் பயன்படுத்தி மிரட்டல் விடுத்தது தெரியவந்தது.

மிரட்டலின் போது அவர் தன்னை அப்சல் என்ற பெயரில் அறிமுகம் செய்திருக்கிறார்.

அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம்" எனக் கூறப்பட்டிருக்கிறது.

விஷ்ணு திரிபுராவை தாயகமாகக் கொண்டவர். கடந்த 25 - 30 ஆண்டுகளாக மும்பையில் வசித்து வருகிறார். அவர் ஒரு நகை வடிவமைப்பாளர் என்றும் தெரியவந்துள்ளது.

முகேஷ் அம்பானி
கெளதம் அதானி Vs முகேஷ் அம்பானி: இந்திய 5ஜி சந்தையை பிடிக்க நடந்த போட்டி - விரிவான தகவல்கள்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com