இந்தியாவிலேயே மிக விலை உயர்ந்த 7 நம்பர் பிளேட்கள் இதுதானாம்! காரை விட விலை அதிகமா?

தங்கள் சொகுசு வாகனங்களுக்கு ஃபேன்சி எண்களை வாங்க லட்சக்கணக்கில் செலவழித்த இந்தியர்கள் இவர்கள் தான்...
7 Most Expensive Number Plates In India, Some Cost Most Than A Car
7 Most Expensive Number Plates In India, Some Cost Most Than A CarTwitter
Published on

நம்மில் பெரும்பாலோருக்கு கார் வாங்குவது ஒரு கனவாக இருக்கும். இன்னும் சிலருக்கு ஃபேன்ஸி எண்கள் மீது மோகம்!

கார் வாங்கும் காசை விட அவர்கள் வாங்கும் நம்பர் பிளேட்டின் விலை அதிகமாக இருக்கும். இந்தியாவில் ஃபேன்ஸி எண்களை வாங்கும் மோகம் அதிகரித்து வருகிறது.

கார் உரிமையாளர்கள் தங்களுக்குப் பிடித்த எண்களை வாங்குவதற்காக நம்பமுடியாத அளவிற்கு ஒரு பெரிய தொகையை செலுத்துகிறார்கள்.

தங்கள் சொகுசு வாகனங்களுக்கு ஃபேன்சி எண்களை வாங்க லட்சக்கணக்கில் செலவழித்த இந்தியர்கள் குறித்து காணலாம்...

1. Toyota Fortuner- - ரூ. 34 லட்சம்

நம்பர் பிளேட் - 007

2020 ஆம் ஆண்டில், அகமதாபாத்தைச் சேர்ந்த டிரான்ஸ்போர்ட்டரான ஆஷிக் படேல் ஒரு புதிய எஸ்யூவியை ரூ. 39.5 லட்சத்திற்கு வாங்கினார்.

ஆனால் அவர் கார் நம்பர் பிளேட்டுக்கு மட்டும் ரூ.34 லட்சத்தை செலவு செய்துள்ளார்.

அந்த எண்ணை அதிர்ஷ்டத்திற்கு வாங்கியதாகவும் ஆஷிக் TOI இடம் கூறினார்.

2. Porsche 718 Boxster - ரூ 31 லட்சம்

நம்பர் பிளேட் - '1'

திருவனந்தபுரம் கவுடியாரில் வசிக்கும் கே.எஸ்.பாலகோபால், முன்னணி மருந்து விநியோக நிறுவனமான தேவி ஃபார்மசியின் உரிமையாளர் ஆவார்.

அவர் தனது 1 கோடி மதிப்புள்ள நீல நிற போர்ஷ் 718 பாக்ஸ்டருக்கு ரூ.31 லட்சம் செலுத்தி ‘KL-01-CK-1’ என்ற நம்பர் பிளேட் வாங்கியுள்ளார்.

2019 ஆம் ஆண்டில், திருவனந்தபுரத்தில் உள்ள ஆர்டிஓ அலுவலகத்தில் நடைபெற்ற ஏலத்தில் ரூ. 31 லட்சம் செலுத்தி நம்பர் பிளேட் வாங்கியுள்ளார்.

3. Toyota Land Cruiser LC200 - ரூ. 18 லட்சம்

நம்பர் பிளேட் - 001

2017ல் தனது LC200 லேண்ட் க்ரூஸருக்கு ரூ.19 லட்சத்தில் '1' என்ற எண்ணை 'வென்றார் ' கே எஸ் பாலகோபால்

பாலகோபால் உட்பட மற்ற மூன்று கார் உரிமையாளர்களான அப்துல் கரீம், ரெஞ்சு குமார் மற்றும் சுபாகர்வாசுதேவன் ஆகியோர் KL-01-CB-1 என்ற பதிவு எண்ணை ஏலத்தில் பங்கேற்றார்.

அப்துல் கரீம் ரூ.3,00,000துக்கு ஏலம் கேட்டார். பின்னர் ஏலத்தை ஏற்றிய சுபாகர் ரூ.10.02 லட்சத்திற்கு கேட்டார். இதனை அடுத்து, பாலகோபால் ரூ.12 லட்சம் சொல்லி அந்த நம்பர் பிளேட்டை ஏலம் எடுத்துள்ளார்.

வேறு யாரும் அதிக தொகையை கேட்கவில்லை என்றாலும், பாலகோபால் தானே அந்த எண்ணிற்கு தொகையை ரூ.18 லட்சமாக உயர்த்தி புதிய சாதனை படைத்தார்.

இதனால் பாலகோபால் இந்தியாவின் விலையுயர்ந்த இரண்டு பதிவுத் தகடுகளின் உரிமையாளரானார்.

4.Toyota Land Cruiser LC200 - ரூ. 17 லட்சம்

நம்பர் பிளேட் - 001

2012 ஆம் ஆண்டில், சண்டிகரில் உள்ள சாஹல் டயர்களின் உரிமையாளர் ஜக்ஜித் சிங் சாஹல் தனது டொயோட்டா லேண்ட் க்ரூஸர் LC200 க்கு 17 லட்ச ரூபாய்க்கு CH-01AN-0001 என்ற பதிவு எண்ணைப் பெற்றார்.

சண்டிகர் வரலாற்றில் அதிக விலைக் கொடுத்து பெறப்பட்ட ஃபேன்சி நம்பர் இதுதான்.

இது குறித்து சாஹல் கூறியபோது, 'இந்த எண்ணுக்கு நான் செலுத்திய தொகை அதிகம் தான். இருப்பினும் இது எனது ராசியான எண்" என்று கூறியுள்ளார்.

மேலும் Hyundai Terracan, Toyota Fortuner and Honda CRV உள்ளிட்ட 10 கார்களுக்கு பதிவு எண் '0001' கொண்டதாகவும் கூறினார்.

5.Jaguar XJ - ரூ. 16 லட்சம்

நம்பர் பிளேட் - 001

லைவ் கிரியேஷன்ஸ் என்ற திருமண நிர்வாக நிறுவனத்தின் உரிமையாளர் ராகுல் தனேஜா.

2018 -இல் இவர் ரூ.1.5 கோடி மதிப்பிள்ள காருக்கு 16 லட்சம் செலவு செய்து RJ45 CG 001 என்ற நம்பர் பிளேட்டை வாங்கியுள்ளார்.

2011 ஆம் ஆண்டு ராகுல் தனது BMW க்காக 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள VIP 0001 நம்பர் பிளேட்டை வாங்கியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

7 Most Expensive Number Plates In India, Some Cost Most Than A Car
உலகிலேயே ஆரோக்கியமான சாப்பாடு இது தான்! - அறிவியல் சொல்வதென்ன?

6. Rolls-Royce Cullinan - ரூ. 12 லட்சம்

நம்பர் பிளேட் - 0001

இந்திய தொழிலதிபர் முகேஷ் அம்பானி சமீபத்தில் 13.14 கோடி ரூபாய் விலையில் Rolls-Royce Cullinan காரை வாங்கினார்.

இந்த காருக்கான விஐபி எண் 0001 - ஐ அவர் ரூ.12 லட்சம் கொடுத்து வாங்கியுள்ளார்.

இந்த காருக்கு ரூ.12 லட்சம் செலவில் பிரத்யேக நம்பர் பிளேட் பெறப்பட்டுள்ளதாக ஆர்டிஓ அதிகாரிகள் தெரிவித்தனர்.

7. BMW 5-Series - ரூ.10.31 லட்சம்

நம்பர் பிளேட் - '1'

ராகுல் தனேஜா எண் கணிதத்தில் வலுவான நம்பிக்கை உள்ளவர்.

எனவே அவருக்கு எண் 1 நல்லது என்று கருதியதால் அவர் தனது பிஎம்டபிள்யூ 5-சீரிஸின் பதிவுக்காக ரூ. 10.31 லட்சத்தை செலுத்தினார்.

ஆனால் ஒருசில ஆண்டுகளில் அவர் அந்த காரை விற்றுவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

7 Most Expensive Number Plates In India, Some Cost Most Than A Car
உலகிலேயே பயங்கரமான பேய் படம் இது தான் - அறிவியல் சொல்வது என்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com