இந்தியா முழுவதும் உள்ள 8 தனித்துவமான சிவன் கோவில்கள் பற்றி தெரியுமா?

இந்தியாவில் உள்ள பிரபலமான சிவன் கோயில்கள் குறித்து தற்போது பார்க்கலாம்
துங்நாத் கோவில்
துங்நாத் கோவில் Twitter
Published on

இந்தியாவைப் பொறுத்தவரை கோயில்கள் என்பது வரலாற்றோடும் வழிபாட்டோடும் தொடர்புடையதாக உள்ளது. அந்த வகையில் இந்தியாவில் உள்ள பிரபலமான சிவன் கோயில்கள் குறித்து தற்போது பார்க்கலாம்.

துங்நாத் கோவில்

இமயமலையில் சுமார் 3,600 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள துங்நாத் கோயில் உலகில் மிக உயரமான சிவன் கோயில் என்ற பெருமையை பெற்றுள்ளது. இந்து மதப்படி புண்ணியத்தை பெறுவதற்காக ஆண்டுதோறும் பல யாத்திரிகர்கள் இங்கு வருவது வழக்கமாக உள்ளது.

பிரகதீஸ்வரர் கோயில்

சோழ மன்னன் ராஜராஜ சோழனின் கட்டமைப்பில் தஞ்சை மாநகரில் உள்ள இந்த கோயில் அதன் பிரம்மாண்ட கோபுரத்தின் வழியாக வரலாற்று சிறப்புமிக்கது. இதில் இருக்கும் துல்லியமான கட்டிடக்கலை மற்றும் இங்கு உள்ள நந்தி உலகப் புகழ் பெற்றவையாகும். இதன் கட்டிடக்கலைக்காகவே இதனை காண உலகின் பல்வேறு தரப்பட்ட சுற்றுலாப் பயணிகளும் இங்கு குவிக்கின்றனர்.

முருதேஷ்வர் கோயில்

கர்நாடகாவில் உள்ள முருதேஷ்வர் கோயில் மிகவும் பிரபலமானதாகும்.

குறிப்பாக இங்கு இருக்கக்கூடிய சிவன் சிலை அரபிக் கடலை கண்டும் காணாதது போல் தோற்றமளிக்கிறது. மேலும் இங்கு இருக்கக்கூடிய சிலைகளை காணவும், புராணக் கதைகளுக்காகவும் பலதரப்பட்ட பக்தர்கள் சுற்றுலாவாசிகள் வருகை தருகின்றனர்.

சிதம்பரம் நடராஜர் கோயில்

தமிழகத்தில் உள்ள சிவன் கோயில்களில் மிகவும் பழமையான முக்கியத்துவம் வாய்ந்த கோயில்களில் ஒன்றாக சிதம்பரம் நடராஜர் கோயில் உள்ளது. இதன் சிற்பக்கலை மற்றும் கட்டிடக்கலையை காண்பதற்காக சுற்றுலா பயணிகள் இங்கு வருகின்றனர்.

மேலும் சிதம்பரம் கோவயிலில் வழிபாட்டின் போது கூறப்படும் சிதம்பர ரகசிய நிகழ்வு இங்கு பிரபலமானதாகும். இது சிவபெருமானின் உருவமற்ற தன்மையினை குறிப்பதாக கூறப்படுகிறது.

கேதார்நாத் கோயில் உத்தரகாண்ட்

இந்து புராணங்களின்படி கேதார்நாத் முக்கியமான புண்ணிய ஸ்தலமாக கருதப்படுகிறது. பசுமை சூழ்ந்த பகுதியில் மலையின் உச்சியில் அமைந்துள்ள இந்த இடத்திற்கு சுற்றுலாவாசிகளும் சிவ பக்தர்களும் வருகை தருகின்றனர்.

அமர்நாத் கோவில் ஜம்மு காஷ்மீர்

அமர்நாத் சிவன் கோயில் மற்ற இந்து கோவில்களில் உள்ள அமைப்பு போன்று இருக்காது. இதற்கு காரணம் இமயமலையின் 3,800 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள அமர்நாத் கோயிலில் சிவபெருமானின் சிலை இருக்காது, அதற்கு பதிலாக பனி லிங்கமாக சிவபெருமான் இருப்பதாக நம்பப்படுகிறது. இந்து மக்களின் நம்பிக்கையின்படி புண்ணிய ஸ்தலங்களில் முக்கியமான ஒன்றாக அமர்நாத் குகை கோயில் உள்ளது.

துங்நாத் கோவில்
தஞ்சை பெரிய கோயில் : நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை!

காசி விசுவநாதர் கோயில் வாரணாசி

இந்து மதங்களில் உள்ள புராணங்களின் படி நாம் செய்யும் பாவங்களுக்கு பரிகாரங்களாக கோவிலுக்கு செல்வதை நம்பிக்கையாக கொண்டுள்ளனர். அதன்படி உத்திர பிரதேச மாநிலம் காசி விஸ்வநாதர் கோவில் பாவங்களை கழிப்பதற்காக உள்ள புண்ணிய ஸ்தலமாக கருதப்படுகிறது.

கைலாசநாதர் கோயில் எல்லோரா

ஒரே பாறையில் செதுக்கப்பட்ட எல்லோரா குகைகளில் அமைந்துள்ள கைலாஷ்நாத் கோயில் கட்டிடக்கலைக்கும் சிற்ப கலைக்கும் அழகு சேர்ப்பவையாக இருக்கும். கட்டுமானத்தை காண்பதற்காகவும் இந்த கோயிலின் வடிவமைப்பை பார்ப்பதற்காகவும் உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலா வாசிகள் வருகின்றனர்.

துங்நாத் கோவில்
தினமும் ஒரு லட்சம் பேருக்கு இலவசமாக உணவு வழங்கும் இந்திய கோயில் - எங்கு இருக்கிறது?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com