தினமும் ஒரு லட்சம் பேருக்கு இலவசமாக உணவு வழங்கும் இந்திய கோயில் - எங்கு இருக்கிறது?

பசியோடு வருபவர்களுக்கு தினமும் 50,000 முதல் 100,000 பேருக்கு உணவு வழங்கப்படுகிறது. இங்கு வழங்கப்படும் இலவச உணவு சமூக சேவை மற்றும் சமத்துவத்திற்கான சீக்கிய அர்ப்பணிப்பின் அடையாளமாக இருக்கிறது.
தினமும் ஒரு லட்சம் பேருக்கு இலவசமாக உணவு வழங்கும் இந்திய கோயில் - எங்கு இருக்கிறது?
தினமும் ஒரு லட்சம் பேருக்கு இலவசமாக உணவு வழங்கும் இந்திய கோயில் - எங்கு இருக்கிறது?Twitter
Published on

பசியோடு இருப்பவர்களுக்கு உணவளிப்பதை விட பெரிய செயல் எதுவும் இல்லை என்று சொல்லி கேள்விப்பட்டிருப்போம், அதனால் பல கோயில்களில் உணவுகள் வழங்கப்படும். அந்தவகையில் அமிர்தசரஸ் நகரத்தில் அமைந்துள்ள பொற்கோயிலில் தினமும் ஒரு லட்சம் பேருக்கு உணவு வழங்குபடுவது குறித்து உங்களுக்கு தெரியுமா?

பொற்கோயிலில் பசியோடு வருபவர்களுக்கு தினமும் 50,000 முதல் 100,000 பேருக்கு உணவு வழங்கப்படுகிறது. இதனை உலகின் மிகப்பெரிய இலவச சமையலறை அல்லது சமூக சமையலறை 'லங்கர்' என்று அழைக்கின்றனர்.

இங்கு வழங்கப்படும் இலவச உணவு சமூக சேவை மற்றும் சமத்துவத்திற்கான சீக்கிய அர்ப்பணிப்பின் அடையாளமாக உள்ளது. இது சீக்கியர்களின் தன்னலமற்ற சேவை கொள்கைகளுக்கு ஒரு அழகான எடுத்துக்காட்டாகவும் இருக்கிறது.

1481 ஆம் ஆண்டில் சீக்கியர்களின் முதல் குருவான குரு நானக்கால் இந்த லங்கர் நடைமுறை தொடங்கப்பட்டதால், நாட்டிலும் உலகெங்கிலும் உள்ள சீக்கிய மதத்தைப் பின்பற்றுபவர்களுக்கு இது மிகவும் மரியாதைக்குரிய விஷயமாக கருதப்படுகிறது.

பொற்கோவிலின் லாங்கர் வாரத்தில் ஏழு நாட்களும் 24 மணி நேரமும் இயங்குகிறது. இது தினசரி ஆயிரக்கணக்கான மற்றும் இலட்சக்கணக்கான மக்களுக்கு சேவை செய்கிறது. சீக்கிய சமூகம் மற்றும் பிற நலம் விரும்பிகளின் நன்கொடைகளில் தன்னார்வலர்களால் இந்த இலவச சமையலறை நடத்தப்படுகிறது.

இந்த சமூக உணவில் பருப்பு, சப்ஜி, சப்பாத்தி மற்றும் கீர் ஆகியவை அடங்கும். குருத்வாராவில் உள்ள சமையலறையில் ஒரே நேரத்தில் 5000 பேர் தங்கக்கூடிய இரண்டு பெரிய சாப்பாட்டு அறைகள் உள்ளன.

ஒவ்வொரு நாளும் இத்தனை பேருக்கு சேவை செய்வது எவ்வளவு கடினம் என்பதை கற்பனை செய்து பார்க்கமுடியுமா? ஆனால் சேவதர்களோ அல்லது தொழிலாளர்களோ இதை ஒரு எளிய பணியாகவே பார்க்கிறார்கள்.

தினமும் ஒரு லட்சம் பேருக்கு இலவசமாக உணவு வழங்கும் இந்திய கோயில் - எங்கு இருக்கிறது?
நேபாளம் : ருத்ராட்ச சந்தை, 108 சிவ லிங்கங்கள் - பசுபதிநாத் கோயில் பற்றித் தெரியுமா?

இங்கு சுமார் 300 நிரந்தரத் தொழிலாளர்கள் உள்ளனர். மீதமுள்ள அனைவரும் தன்னார்வத் தொண்டர்கள், அவர்கள் உணவு சமைத்து சரியான நேரத்தில் வழங்கப்படுவதை சேவையாக செய்கின்றனர்.

லெபனானைச் சேர்ந்த பக்தர் ஒருவர் நன்கொடையாக வழங்கிய சப்பாத்தி தயாரிக்கும் இயந்திரம் இந்த லாங்கரில் உள்ளது.இதன் மூலம் ஒரு மணி நேரத்தில் 25,000 ரொட்டிகள் தயாரிக்க முடியும். மாவை பிசைவதற்கும் சப்பாத்திகள் தயாரிப்பதற்கும் வேறு பெரிய இயந்திரங்கள் உள்ளன.

ஒரு சாதாரண நாளில், சமையலறையில் உணவு தயாரிக்க கிட்டத்தட்ட 5000 கிலோ கோதுமை, 2000 கிலோ பருப்பு, 1400 கிலோ அரிசி, 700 கிலோ பால் மற்றும் 100 கேஸ் சிலிண்டர்கள் பயன்படுத்தப்படுகின்றன.

பொற்கோயிலில் உள்ள லங்கார் சேவையை சர்வதேச அளவில் பாராட்டியுள்ளனர்.

தினமும் ஒரு லட்சம் பேருக்கு இலவசமாக உணவு வழங்கும் இந்திய கோயில் - எங்கு இருக்கிறது?
தஞ்சை பெரிய கோயில் : நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com