பல கோடி சொத்து வைத்துள்ள வைர வியாபாரியின் 8 வயது மகள் துறவறம் - தீட்சை பெற என்ன காரணம்?

குஜராத்தைப் பூர்வீகமாகக் கொண்ட மிகப்பெரிய வைர வியாபாரியின் மகளான தேவான்ஷி சங்கவி என்பவர் துறவறம் மேற்கொள்ள இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.
8-year-old daughter of diamond baron from Surat set to embrace monkhood
8-year-old daughter of diamond baron from Surat set to embrace monkhoodTwitter
Published on

உலகின் மிகப்பெரிய செல்வந்தர்களில் ஒருவராக இருந்த கௌதம புத்தர், ஆத்ம ஞானத் தேடலின் காரணமாக துறவறத்தை மேற்கண்டது போல, சமீபத்தில் வெறும் 8 வயது நிரம்பிய, குஜராத்தைப் பூர்வீகமாகக் கொண்ட மிகப்பெரிய வைர வியாபாரியின் மகளான தேவான்ஷி சங்கவி என்பவர் துறவறம் மேற்கொள்ள இருப்பதாக டைம்ஸ் ஆப் இந்தியா வலைதளத்தில் செய்தி வெளியாகியுள்ளது.

சமண சமயத்தில், ஒருவர் துறவறம் மேற்கொள்வதற்கு முன், கடைசியாக உலக விஷயங்களை அனுபவிப்பதை வெளிப்படுத்தும் விதமாக, பிரமாதமான ஆடை அலங்காரங்களை எல்லாம் செய்து கொண்டு, ஆடல் பாடல் என கொண்டாடுவர்.

அதற்குப் பிறகு தான் துறவறப் பணிகள் தொடங்கும். தற்போது தேவான்ஷிக்கான பிரமாண்ட கொண்டாட்டப் பணிகள் புதன்கிழமை (இன்று ஜனவரி 18) நடைபெற உள்ளதாகக் கூறப்படுகிறது.

தானிஷ் சங்க்வி மற்றும் ஆமி சங்க்விக்கு மொத்தம் இரண்டு மகள்கள். மூத்தவரின் பெயர் தேவான்ஷி (வயது 8), இளையவர் பெயர் காவ்யா (வயது 5). சங்க்வி & சன்ஸ் என்கிற வட இந்தியாவில் பிரபலமான வைர வியார குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் இவர்கள்.

தேவான்ஷி சங்க்வி மட்டும் துறவறத்தைப் பெறவில்லை என்றால், அடுத்த 10 - 15 ஆண்டுகளில் பல நூறு கோடி ரூபாய் மதிப்புள்ள வைர வியாபாரம் அவர் வசமாகி இருக்கும்.

சிறு வயதிலிருந்து மதம் சார்ந்த மற்றும் இறை நம்பிக்கை சார்ந்த விஷயங்களில் அதீத ஈடுபாடு இருந்த காரணத்தினால், தேவான்ஷி தொடர்ந்து 367 பேர் உலக வாழ்க்கையில் இருந்து துறவற தீட்சை பெறும் நிகழ்ச்சியை கண்டதாகவும், அதுவே அவருக்கு தீட்சை பெற ஒரு முக்கிய உந்துதலாக அமைந்ததாகவும் செய்திகளில் கூறப்படுகின்றன.

8-year-old daughter of diamond baron from Surat set to embrace monkhood
கோகினூர் முதல் நம்பிக்கை வைரம் வரை: உலகின் விலையுயர்ந்த வைரங்கள் - என்னென்ன சிறப்பு?

என்னதான் தானிஷ் சங்க்வியின் குடும்பம் மிகப்பெரிய பணக்காரர்களாக இருந்தாலும், தனிப்பட்ட முறையில் அவர்களுடைய சமய பழக்க வழக்கங்களை ஒட்டி மிக எளிமையான வாழ்க்கையை வாழ்ந்து வந்ததாகவும் சில வலைதளங்களில் பார்க்க முடிகிறது.

அப்படித்தான் தேவான்ஷியும் வளர்க்கப்பட்டார் என்றும், மிக இளம் வயதில் இருந்தே நாளொன்றுக்கு மூன்று முறை பிரார்த்தனை செய்யும் பழக்கம் கொண்டவர் என்றும் அவர்களுடைய குடும்பத்தோடு நெருங்கிய தொடர்புடைய சிலர் ஊடகங்களிடம் கூறியுள்ளனர். லெளகீகமோ, துறவறமோ வாழ்கை சிறக்க நம் வாழ்த்துகள்!

8-year-old daughter of diamond baron from Surat set to embrace monkhood
உலகின் மிக பெரிய வைரம் - அரியவகை Pink நிற வைரத்தின் மதிப்பு என்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com