75 வருடத்திற்கு பின் சொந்த வீட்டிற்குச் சென்ற பெண் - ஓர் அடடே சம்பவம்

20 வருடங்களுக்குப் பிறகு, 1965ல் ஒரு முறை ரீனா பாகிஸ்தானிலுள்ள தன் வீட்டிற்கு செல்ல முயற்சித்துள்ளார். இதற்காக ஒரு சிறப்பு இந்தியா-பாகிஸ்தான் பாஸ்போர்ட்டையும் இவர் பெற்றார். ஆனால் சொந்த காரணங்களுக்காக அம்முறை அந்த பயணத்தை ரீனா மேற்கொள்ளவில்லை.
Reena
Reena Twitter
Published on

ரீனா வர்மா என்ற 92 வயது மூதாட்டி, தான் சிறுவயதில் பிறந்து வளர்ந்த தன் இல்லத்திற்கு 75 வருடங்களுக்குப் பிறகு சென்றுள்ளார். பாகிஸ்தானில் இவரது இந்த வீடு அமைந்திருக்கிறது.

கடந்த மார்ச் 1947ல், பிரிவினைக்கு சில மாதங்களுக்கு முன்பு ரீனா மற்றும் அவரது சகோதரர்கள் சோழன் என்ற இடத்திற்கு அவர்களது பெற்றோரால் அனுப்பிவைக்கப்பட்டனர். அப்போது அவருக்கு வயது 15. அதன் பின்னர் பிரிவினைக்குப் பிறகு, ரீனாவின் பெற்றோரும் இந்தியாவிற்கு வந்துவிட்டனர். அதன் பின்னர், பாகிஸ்தானுக்கும் இவர்கள் யாரும் செல்லவில்லை.

20 வருடங்களுக்கு பிறகு, 1965ல் ஒரு முறை ரீனா பாகிஸ்தானிலுள்ள தன் வீட்டிற்கு செல்ல முயற்சித்துள்ளார். இதற்காக ஒரு சிறப்பு இந்தியா-பாகிஸ்தான் பாஸ்போர்ட்டையும் இவர் பெற்றார். ஆனால் சொந்த காரணங்களுக்காக அம்முறை அந்த பயணத்தை ரீனா மேற்கொள்ளவில்லை.


அதன் பின் 2022ல் ஃபேஸ்புக்கில் India-Pakistan Heritage Club என்ற குரூப்பில் இணைந்துள்ளார் ரீனா. அந்த குரூப்பில் தனக்கு பரிச்சயமான சஜாத் ஹுசைன் என்பவர் ரீனாவின் இல்லத்தைக் கண்டுபிடிப்பதற்கு உதவ முன்வந்துள்ளார்.

சாஜத்திடம் ரீனா அவரது இல்லம் இருந்த இடத்திற்கான அடையாளங்களைப் பகிர்ந்துள்ளார். அதன் பிறகு, சாஜத்தும் அவரது இல்லத்தை கண்டுபிடித்து தனக்கு தகவல்கள், மற்றும் இல்லத்தின் புகைப்படங்களையும் தந்ததாக ரீனா தி குவின்ட் பத்திரிக்கையிடம் கூறியிருந்தார்.


அதன் பிறகு மீண்டும் விசாவிற்கு விண்ணப்பித்தார் ரீனா.ஆனால் கடந்த மார்ச் மாதம் நிராகரிக்கப்பட்டது. மனம் தளராமல், மீண்டும் விண்ணப்பித்தார் ரீனா. கூடவே இவரது கதையும் ஒரு வீடியோவாக பகிரப்பட, நல்லெண்ண அடிப்படையில் மே மாதம் பாகிஸ்தான் உயர் ஆணையம் இவருக்கு மூன்று மாதங்களுக்கான விசாவை வழங்கியது.


"இந்த வயதில் எனக்கு தனியாக பாகிஸ்தானுக்கு செல்ல எந்த பயமும் இல்லை. அங்கிருப்பவர்கள் எனக்கு அவ்வளவு அன்பைத் தந்துள்ளனர். எனக்கு நிஜமாகவே என் வீட்டிற்கு திரும்பி செல்வது போல இருக்கிறது" என்றார் ரீனா.

ஜூலை 15ஆம் தேதி அட்டாரி-வாகா எல்லையை கடந்த ரீனா, ராவல்பிண்டியிலுள்ள தனது இல்லத்திற்குச் சென்றார். இவரது வீட்டின் பெயர் "ப்ரேம் நிவாஸ்" என்றும், இன்றும் அங்கிருந்ததெல்லாம் தனக்கு அழியா நினைவுகளாக இருக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த நிகழ்வு பலரையும் நெகிழச் செய்துள்ளது

Reena
Pasoori: பிரபல பாகிஸ்தான் பாடலை பாடி அசத்திய கேரளா சகோதரர்கள்- வைரல் வீடியோ

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com