உலகப் புகழ்பெற்ற இந்தி திரைப்பட நடிகர் ஷாரூக் கானின் மனைவி, கெளரி கான் ஒரு பிரபல கட்டட உட்புற அழகுபடுத்துனர் என்பதை நாம் அறிவோம். இவர் பல இந்திய பிரபலங்களின் வீட்டின் உட்புறங்களை அழகுபடுத்தியுள்ளார்.
கடந்த 2013 ஆம் ஆண்டு முதல், கெளரி கான் டிசைன்ஸ் என்கிற பெயரில் ஒரு கட்டட உட்புற அழகுபடுத்தும் நிறுவனத்தைத் தொடங்கி நடத்தி வருகிறார் கெளரி கான். அந்த நிறுவனம் வீட்டை அழகுபடுத்தும் பொருட்களையும் விற்பனை செய்து வருகிறது.
சமீபத்தில் சில நாட்களாக, கெளரி கான் நிறுவனத்தின் பல பொருட்கள், டாடா கிளிக் போன்ற இ - காமர்ஸ் வலைதளங்களில் பட்டியலிடப்பட்டு இருக்கும் பொருட்களின் விலை பெரிய பஞ்சாயத்துக்கு வழிவகுத்திருக்கிறது.
கெளரி கான் வடிவமைத்த குப்பைத் தொட்டி சுமார் 15,000 ரூபாய், அறையில் படிக்க பயன்படுத்தப்படும் டேபிள் லைட் சுமார் 1.5 லட்சம் ரூபாய் என்கிறது வலைதள விலைப்பட்டியல்.
இதை இணையத்தில் பார்த்த பலரும் டிரோல் செய்யத் தொடங்கினர். பலரும் வேடிக்கையாக பல பதிவுகளைப் போடத் தொடங்கினர். சிலரோ, இந்திய நடுத்தர மக்களின் குரலாக பொங்கி எழுந்துள்ளனர்.
"நீங்கள் எத்தனை பெரிய பணக்காரராக இருந்தாலும், ஒரு குப்பைத் தொட்டிக்காக ஏன் 15,000 ரூபாய் செலுத்த வேண்டும். ஒருவேளை என் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த புத்தி இதை ஏற்க மறுக்கிறது என்று கருதுகிறேன்" என ஒரு சமூக வலைதளப் பயனர் பதிவிட்டிருந்தார்.
ஒரு டேபிள் லைட்டின் விலை 1.59 லட்சம் ரூபாய் என டாடா கிளிக் வலைதளத்தில் காண முடிந்தது. "இவ்வளவு விலை கொடுத்து இந்த லைட்டை வாங்குவதற்கு பதிலாக, நானே நேரடியாக அந்தமான் தீவுகளுக்குச் சென்று, கடல் சிப்பிக்களை வாங்கி வந்து என் டேபிள் லைட்டின் மீது வைத்துக் கொள்வேன்" என தன் தாயார் கூறியதாக மற்றொரு பயனர் பதிவிட்டு இருந்தார்.
மற்றொரு பயணரோ, இந்த அளவுக்கு அதிக விலை கொடுத்தாலும், டிசைன்கள் எல்லாம் அந்த அளவுக்கு பிரமாதமாக இல்லை என பதிவிட்டு இருந்தார்.
ஷாரூக் கானின் மனைவி என்பதாலேயே கெளரி கான் அடிக்கடி தலைப்புச் செய்தி ஆகிவிடுகிறார் என்று கருத வேண்டாம்.
சமீபத்தில், ஒரு ரியல் எஸ்டேட் நிறுவன விளம்பரத்தில் கெளரி கான் நடித்திருந்தார். சொல்லப் போனால், அந்த ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் விளம்பரத் தூதரே அவர் தானாம். அந்த ரியல் எஸ்டேட் நிறுவனம், தாங்கள் சொன்ன படி வீடுகளை தான் வாடிக்கையாளர்களுக்குக் கட்டிக் கொடுக்கவில்லை.
அதனைத் தொடர்ந்து, சில வாங்களுக்கு முன், உத்தரப் பிரதேச மாநிலத்தில், லக்னெள நகரத்தில் இந்தியா தண்டனைச் சட்டம் 403ன் கீழ் கெளரி கானுக்கு எதிராக வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளதாகச் செய்திகளில் பார்க்க முடிகிறது.
என்ன தான் பெரிய பணக்காரர்கள் என்றாலும், குப்பைத் தொட்டிக்கு 15,000 ரூபாய் கொஞ்சம் ஓவர் தான் மேடம்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust