திருமண சடங்குகளின் போது மணமகள் திடீரென மாரடைப்பால் உயிரிழந்துவிடுகிறார்.
இதனால் மணமகளின் தங்கையை உடனடியாக புதிய மணமகளாக்கி திருமணத்தை நடத்தியுள்ளது ஒரு குடும்பம்.
இந்த சம்பவத்துக்கு இணையத்தில் பலத்த எதிர்ப்புகள் எழுந்துள்ளன.
குஜராத் மாநிலம் பாவ்நகர் பகுதியைச் சேர்ந்தவர் மணமகன் விஷால். சுபாஷ் நகர் பகுதியில் திருமணம் நடந்துகொண்டிருக்கும் போது மணமகள் திடீரென மயங்கி விழுந்துள்ளார்.
அவரை அவசரமாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால் அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த துக்கசம்பவத்துக்கு மத்தியிலும் திருமணத்தை நடத்த உறவினர்களும் குடும்பத்தினரும் புதிய யோசனைகளை வைத்திருந்திருக்கின்றனர்.
மணமகனுக்கு ஏமாற்றமாகிவிடக் கூடாது என்பதனால் மணமகள் உடல் குளிர் பெட்டியில் இருக்கும் போதே அவரது தங்கைக்கு விஷாலுடன் திருமணத்தை நடத்தியுள்ளனர்.
இந்த நிகழ்வை நெட்டிசன்கள் வன்மையாக கண்டித்துள்ளனர்.
"இந்த சமூகத்தில் பெண்கள் வெறும் பரிமாற்றம் செய்யும் பொருளாக தான் இருக்கிறார்கள். இன்னொருவரின் பரிமாற்றம் கெட்டுவிடக் கூடாது என்பதற்காக சொந்த மகளின் மரணத்தைக் கூட பொருட்படுத்தாமல் திருமணத்தை நடத்துவதா?" என கேள்வி எழுப்புகின்றனர்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust