Anti Clockwise திசையில் நடக்கக் கூடாது - பெங்களூர் பார்க்கின் அறிவிப்பு பலகையால் குழப்பம்

அதில் எழுதப்பட்டிருந்த செய்தியானது, பூங்காவுக்கு வாக்கிங் வருபவர்கள் யாரும் ஆன்டி க்ளாக் வைஸ் (எதிர் கடிகார திசை) நடக்கக்கூடாது என்பது தான். இதை கவனித்த மக்கள் இணையதளத்தில் பகிர, படுபயங்கரமாகக் கலாய்த்து வருகிறார்கள் நெட்டிசன்ஸ்.
Sign Board at Bengaluru Park
Sign Board at Bengaluru ParkTwitter
Published on

பூங்காக்களில் வித்தியாசமான அறிவிப்புப் பலகைகள் பல வகையாக நாம் பார்த்திருப்போம். பூக்களை பறிக்கக்கூடாது, செல்ல பிராணிகளை எடுத்துவரக் கூடாது என பொதுவாக இருப்பது வழக்கம். வழக்கத்திற்கு மாறாகவும் பலகைகள் வைப்பதுண்டு. அவற்றில் சில நகைச்சுவையானதாகவும் இருக்கும்.

அப்படித்தான் இருக்கிறது பெங்களூருவின் ஒரு பூங்காவில் வைக்கப்பட்ட அறிவிப்புப் பலகை ஒன்று. அதில் எழுதப்பட்டிருந்த செய்தியானது, பூங்காவில் வாக்கிங் வருபவர்கள் யாரும் ஆன்டி க்ளாக் வைஸ் (எதிர் கடிகார திசை) நடக்கக்கூடாது என்பது தான்.

இதை கவனித்த மக்கள் இணையதளத்தில் பகிர, படுபயங்கரமாகக் கலாய்த்து வருகிறார்கள் நெட்டிசன்ஸ். மேலும் இந்த பலகையில், ஜாக்கிங், ரன்னிங் போன்றவற்றிற்கும் தடை என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்புப் பலகையை வைத்துள்ளது பெங்களூருவின் உள்கட்டமைப்பு மற்றும் பொது சேவைகள் நிர்வாகம். இதற்கு பலதரப்பட்ட கமென்ட்டுகள் குவிந்துள்ளன.


அதில் ஒருவர், "நாம் இந்த பூங்காவில் சந்திக்கலாம். அங்கு சிறிது நேரம் இருந்து, பேசி சிரித்து, வேண்டியதை சாப்பிட்டுவிட்டு வீடு திரும்புவோம். அப்படி திரும்புகையில் எல்லோரும் எதிர்த் திசையில் தான் நடந்தாகவேண்டும்" என பதிவிட்டிருந்தார்

Sign Board at Bengaluru Park
சென்னை - பெங்களூரு : 200 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் 5 மலைப்பகுதிகள்

மேலும் அவர், "நம்மை நிறுத்தி யாரேனும் நாம் எதிர்த் திசையில் நடக்கிறோம் என்று கூறினால், அவர்கள் தான் தவறான திசையில் நடக்கிறார்கள் என்று சொல்லுவோம்... நிறைய பேர் சேர்ந்து சொன்னால் நம்பிவிடுவார்கள்" எனவும் குறிப்பிட்டிருந்தார்.


பெங்களூருவில் வித்தியாசமான அறிவிப்பு பலகைகள் வைப்பது இது ஒன்றும் புதிதல்ல. இதற்கு முன்னர், வீட்டின் முன் வாகனங்கள் நிறுத்தக்கூடாது என்பதற்காக மக்கள் வைத்திருந்த அறிவிப்பு பலகைகள் இணையத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது.

Sign Board at Bengaluru Park
'பார்க்கிங்கா?' பெங்களூர் ஹவுஸ் ஓனர்ஸ் அட்ராசிட்டிஸ்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com