'பார்க்கிங்கா?' பெங்களூர் ஹவுஸ் ஓனர்ஸ் அட்ராசிட்டிஸ்

No Parking போலவே, "இங்கு சிறுநீர் கழிக்காதீர்" , இங்கு குப்பைகளைக் கொட்டாதீர்", "இங்கு விளம்பரம் செய்யாதீர்" போன்ற பல வாசகங்கள் தொடர்ந்து தட்டிக்கழிக்கப்பட்டு வருகிறது.
நோ பார்கிங்
நோ பார்கிங்Twitter
Published on

ரோட்டின் மேல இருக்கும் வீடுகளின் பெரிய பிரச்னை பார்க்கிங் தான்.

அவசர அவசரமாக வெளியில் கிளம்பும் போது யாரென்றே தெரியாத ஒரு வழிப்போக்கரின் வாகனம் வழிமறித்து நிற்கும்.

இதற்காக எத்தனை ”நோ பார்க்கிங்” போர்டு வைத்தாலும் எடுபடாது. எனினும் இதனைக் குறைப்பதற்காகப் பெங்களூரு வீட்டு உரிமையாளர்கள் வித்தியாசமான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அவற்றில் சில இணையத்தில் வைரலாகி வருகிறது.

நோ பார்க்கிங் போர்டுகளைக் கொஞ்சமும் மதிக்காமல் பார்க் செய்வோர் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்கள் "ஒரு 5 மினிட்ஸ் சார்" "போர்ட கவனிக்கல சார்" என சாக்குப் போக்கு சொல்வார்கள்.

"இங்கு சிறுநீர் கழிக்காதீர்" , இங்கு குப்பைகளைக் கொட்டாதீர்", "இங்கு விளம்பரம் செய்யாதீர்" போன்ற பல வாசகங்கள் தொடர்ந்து தட்டிக்கழிக்கப்பட்டு வருகிறது.

சரி, பெங்களூரு ஹவுஸ் ஓனர்ஸ் செய்த காரியத்தைப் பார்ப்போம்.

தொடர்ந்து இந்த நோ பார்க்கிங் பிரச்னையால் பாதிக்கப்பட்ட ஒருவர், "Don't Even Think of Parking here" என போர்டு வைத்திருக்கிறார். அதாவது அங்கு பார்க் செய்வது குறித்து நினைத்துக் கூட பார்க்காதீர்கள் என்கிறார்.

நோ பார்கிங்
பெப்சி குடிக்க தினமும் 2000 செலவு செய்யும் மனிதர் - அவருக்கு என்ன ஆனது?

இந்த ட்வீட் சில நாட்களுக்கு முன்னர் வைரலானது. இதில் மற்றொருவரோ, "No Parking. Not 5 minutes, Not 30 Seconds, Not at All" என போர்டு வைத்திருக்கிறார்.

பெங்களூர் வாசிகள் இந்த நோ பார்க்கிங் விஷயத்தில் எவ்வளவு பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என இப்போது தெரிகிறது.

நோ பார்கிங்
பெங்களூர் : லைட், மின்கட்டணம் இல்ல; இயற்கையோடு இயைந்த வீடு - அசத்தும் தம்பதி

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com