Adani : உலகின் மூன்றாவது பணக்காரராக உயர்ந்தார் அதானி - சொத்து மதிப்பு என்ன?

உலகப் பணக்காரர்கள் பட்டியலில் முதல் மூன்று இடத்துக்குள் இதுவரை எந்த இந்தியரும், ஏன்? ஆசியாவைச் சேர்ந்த யாருமே கூட இடம் பெற்றதில்லை. முகேஷ் அம்பானி, ஜாக் மா யாரும் எட்ட முடியாத இடத்தை சென்றடைந்திருக்கிறார் அதானி.
அதானி
அதானிTwitter
Published on

உலக பணக்காரர்கள் பட்டியலில் 3வது இடத்தைப் பிடித்திருக்கிறார் அதானி. ஆசியாவின் முதல் பணக்காரராக நிலைத்திருக்கிறார்.

உலகப் பணக்காரர்கள் பட்டியலில் முதல் மூன்று இடத்துக்குள் இதுவரை எந்த இந்தியரும், ஏன்? ஆசியாவைச் சேர்ந்த யாருமே கூட இடம் பெற்றதில்லை. முகேஷ் அம்பானி, ஜாக் மா யாரும் எட்ட முடியாத இடத்தை சென்றடைந்திருக்கிறார் அதானி.

கௌதம் அதானி : இரண்டே ஆண்டுகளில் 15 மடங்கு அதிகரித்த சொத்து மதிப்பு - எப்படி?

கௌதம் அதானி வெற்றிக் கதை : கடத்தப்பட்ட பணையக் கைதி அம்பானியை முந்திய வரலாறு

கௌதம் அதானி: 400 கோடி வீடு, தனி விமானம் - இதுதான் உலக பணக்காரரின் வாழ்க்கை

சில வருடங்களுக்கு முன்பு வரை இந்தியாவைத் தாண்டி யாருக்கு அதானி என்ற மனிதரைத் தெரியாது. கல்லூரிப் படிப்பைக் கூட முழுவதுமாக முடிக்காத இவர் ப்ளூம் பெர்க் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார்.

இப்போது 10 லட்சம் கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் Louis Vuitton SE -ன் CEO பெர்னர்ட் அர்னால்ட்டை விஞ்சியிருக்கிறார் அதானி.

கெளதம் அதானி
கெளதம் அதானிTwitter

60 வயதாகும் அதானி வைர வணிகத்தின் மூலம் தனது இராஜ்ஜியத்தை கட்டமைக்க ஆரம்பித்தார். கடந்த ஆண்டுகளில் நிலக்கரி முதல் துறைமுகங்கள் வரை பல தொழில் நிறுவனங்களை நடத்தி வருகிறார்.

அவர் துணிச்சலாக டேட்டா சென்டர்ஸ் முதல் சிமெண்ட் வரை பல துறைகளில் முதலீடு செய்து வருகிறார்.

அதானி குழுமம் இப்போது இந்தியாவின் மிகப்பெரிய தனியார் துறைமுகம் மற்றும் விமான நிலைய ஆபரேட்டராக இருக்கிறது, நகர எரிவாயு விநியோகம் மற்றும் நிலக்கரி சுரங்கத் தொழிலில் வளர்ந்திருக்கிறது.

அதானி
ஆசியாவின் முதல் பணக்காரர் : அம்பானியை பின்னுக்கு தள்ளிய அதானி

ஆஸ்திரேலியாவில் நிலக்கரி சுரங்கம் அமைக்கும் அதானி குழுமத்துக்கு பெரிய அளவில் எதிர்ப்புகள் எழுந்து அதானிக்கு எதிரான போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

அதானி பணக்காரர் வரிசையில் உச்சத்தை எட்டியிருந்தாலும் அவரது குழுமம் கடனில் தத்தளித்து வருவது மறுக்க முடியாதது.

அதானி சாம்ராஜ்ஜியம் கடனில் மூழ்கும் ?: பங்குகளை சரியவைத்த அறிக்கை | Explained

அதானி
உலக சூப்பர் பணக்காரர் அதானி : எலான் மஸ்க் சொத்தை விட இந்த இந்தியரின் சொத்து அதிகம்!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com