அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கடந்த மாதம் ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா நடந்தது.
விழாவில், நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிக் கொண்டிருந்த நடிகர் கிறிஸ் ராக், வில் ஸ்மித்தின் மனைவியை கேலி செய்ததால், கோபமான வில் ஸ்மித் மேடையில் ஏறி தொகுப்பாளர் கிறிஸ் ராக்கின் முகத்தில் அறைந்தார்.
இந்த சம்பவதால் வில் ஸ்மித்துக்கு ஆஸ்கர் அகாடமி 10 ஆண்டுகளுக்கு பொது நிகழ்ச்சியில் கலந்துகொள்ளத் தடை விதித்தது.
இந்த நிலையில் நேற்று மும்பை கலினாவில் உள்ள தனியார் விமான நிலையத்திற்கு வில் ஸ்மித் திடீரென வந்து இறங்கினார்.
சுயமாற்றத்துக்கான வழிகளை நாடி ஆன்மீக குருவான சத்குருவைச் சந்தித்து பேசியுள்ளார். ஆஸ்கர் சர்ச்சைக்குப் பின் பொதுவெளியில் சிரித்த முகத்தோடு வந்த வில் ஸ்மித்தை ரசிகர்கள் உற்சாகமாக வரவேற்று அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com