சாவித்ரி தேவி: ஹிட்லரின் பாசிசத்தை ஆதரித்த மர்மப் பெண்

கிரீஸ் மற்றும் ஆரியர்களின் பண்டைய புராண கற்பனாவாதப் பெருமையை அழித்ததாக யூத மற்றும் கிறிஸ்தவ மதங்களின் மீது குற்றம் சாட்டிய சாவித்ரி, ஐரோப்பாவின் ஆரியப் பெருமையைத் தேடி இந்தியாவிற்குப் பயணம் செய்தார்.
சாவித்ரி தேவி
சாவித்ரி தேவிTwitter
Published on

புடவை கட்டி பொட்டு வைத்த ஒரு பெண், ஹிட்லருக்குத் தீவிர பக்தையாக இருந்தார் என்பதை உங்களால் நம்ப முடிகிறதா? ஆம். அப்படி ஒரு பெண் இருந்தார். 25 ஆண்டுகளுக்கு முன்பு அவர் இறந்து விட்டாலும் இன்று தீவிர வலதுசாரிகளின் எழுச்சிக்குப் பிறகு அவரது பெயரும், உருவமும், கருத்துக்களும் மேற்கத்திய நாடுகளில் வலது சாரி இணைய தளங்களில் செல்வாக்கு பெற்று வருகின்றன என்கிறார் பிபிசியின் மரியா மார்கரோனிஸ். சாவித்ரி தேவி எனும் அந்த மர்மப் பெண் யார்?

சாவித்ரி தேவி ஒரு இந்தியரா?

சாவித்ரி தேவி என்ற பெயர் அவர் ஓர் இந்தியர் என்று தோற்றமளித்தாலும் அது உண்மையல்ல. 1905 இல் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த லியோனில் ஒரு ஆங்கில தாய் மற்றும் கிரேக்க – இத்தாலியத் தந்தைக்கும் பிறந்தார்.

சிறு வயதிலிருந்தே அவர் அனைத்து வகையான சமத்துவத்தையும் வெறுத்தார். “ஒரு அழகான பெண்ணும் ஒரு அசிங்கமான பெண்ணும் சமமானவர்கள் அல்ல" என்று 1978 இல் ஒரு நேர்காணலில் கூறினார்.

கிரேக்கத் தேசியவாதத்தால் ஈர்க்கப்பட்ட அவர் 1923ல் ஏதென்ஸ் வந்தார். அந்த நேரத்தில் ஆசியா மைனரில் கிரீஸ் ஒரு பேரழிவான படையெடுப்பை முதல் உலகப் போரின் முடிவில் நடத்தி முடித்திருந்தது. இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் அகதிகளாக இடம் பெயர்ந்தார்கள்.

பைபிளிலிருந்து யூத விரோத மனப்பான்மையை அவர் கற்றுக் கொண்டதாகக் கூறுகிறார்.

சாவித்ரி தேவி

ஹிட்ரலின் பக்தையான சாவித்ரி தேவி

முதல் உலகப்போரின் முடிவில் கிரீஸ் மற்றும் ஜெர்மனி இரண்டிற்கும் மேற்குல நாடுகளால் வெர்செய்ல்ஸ் ஒப்பந்தத்தின் படி அநீதி இழைக்கப்பட்டன என்பது சாவித்ரி தேவியின் கருத்து. பைபிளிலிருந்து யூத விரோத மனப்பான்மையை அவர் கற்றுக் கொண்டதாகக் கூறுகிறார். இதன் மூலம் ஆரம்பத்திலேயே அவர் ஹிட்லரைப் போலத் தன்னை ஒரு தேசிய சோசலிஸ்டாக கருதிக் கொண்டார்.

ஹிட்லர் ஜெர்மனியின் ஒரு மாபெரும் தலைவர் என்று சாவித்ரி போற்றினார். மேலும் ஐரோப்பாவில் யூதர்களை அழித்து ஆரிய இனத்தின் அதிகாரத்தை நிலைநாட்டுவது குறித்த ஹிட்லரின் கொள்கை சாவித்ரியை மேலும் கவர்ந்தது.

ஹிட்லருக்கு முன்பே 18ம் நூற்றாண்டில் யூத விரோத சிந்தனையாளர்கள் இருந்தனர். அவர்கள், கிரீஸ் மற்றும் ஆரியர்களின் பண்டைய புராண கற்பனாவாதப் பெருமையை அழித்ததாக யூத மற்றும் கிறிஸ்தவ மதங்களின் மீது குற்றம் சாட்டினர். அவர்களின் வழி சிந்தித்த சாவித்ரி ஐரோப்பாவின் ஆரியப் பெருமையைத் தேடி அவர் இந்தியாவிற்குப் பயணம் செய்தார்.

இந்தியப் பயணம்

இந்தியாவில் ஆரியர்களின் இனத்தூய்மை, சாதி அமைப்பு மற்றும் அகமண முறையால் பாதுகாக்கப்பட்டுள்ளதாக நம்பினார்.

அமெரிக்காவின் வெள்ளை நிறவெறி அமைப்பான கு கிளக்ஸ் கிளான் தலைவர் டேவிட் டியூக் 1970களில் இந்தியாவிற்கு வந்த போது சாவித்ரி தேவி தனது தவறான கருத்தான தூய இந்திய ஆரிய மேன்மையைப் பகிர்ந்து கொண்டார்.

<div class="paragraphs"><p>Hitler</p></div>

Hitler

NewsSense

பிராமணரை மணந்து ஹிந்து மிஷன் பணி

இந்தியாவில் சுதந்திரத்திற்கு முன்பாக அவர் இருந்த காலத்தில் பிரிட்டீஷாரால் கண்காணிக்கப்பட்டார். இரண்டாம் உலகப் போர் சமயத்தில் ஹிட்லரின் கூட்டாளியான ஜப்பானுக்கு அவர் இந்தியாவிலிருந்து தகவல்கள் சேகரித்துக் கொடுத்தார். இந்திய மொழிகளை கற்றுக் கொண்டதோடு ஒரு பிராமணரையும் மணந்தார். இதன் மூலம் தன்னை மேலும் ஒரு ஆரியனாகக் கருதிக் கொண்டார். நாசிசத்திற்கும் ஹிந்து மதத்திற்கும் உள்ள ஒற்றுமைகளை அவர் இணைத்து விவரித்தார். இந்து புராண கட்டுக்கதையின் படி கலியுகத்தின் முடிவில் வரும் மாமனிதரான ஹிட்லர், ஆரியர்களின் ஆதிக்கத்தை நிலை நிறுத்துவார் என்று அவர் கூறினார்.

கொல்கத்தாவில் 1930களில் அவர் ஹிந்து மிஷனுக்காக பணி புரிந்தார். தற்போது அது ஒரு அமைதியான கோவிலாக இருந்தாலும் சாவித்ரியின் காலத்தில் தீவிர ஹிந்து தேசியவாதிகளின் மையமாக ஹிந்து மிஷன் இருந்தது. இந்தியாவின் மதம் சார்ந்த சமூகங்களை பிரிட்டிஷ் ஆட்சியில் அரசியல் படுத்துவதன் மூலம் இந்துத்துவா இயக்கம் வளருவதற்கு அது துணை புரிந்தது. இதன் முக்கியக் கொள்கையே ஹிந்துக்கள் மட்டும்தான் ஆரியர்களின் உண்மையான வாரிசுகள். எனவே இந்தியா அடிப்படையில் ஒரு ஹிந்து நாடு.

1980 களில் சாவித்ரி தேவி
1980 களில் சாவித்ரி தேவிTwitter

இந்தியாவில் பாசிசக் கருத்துக்களைப் பிரச்சாரம் செய்த சாவித்ரி

அப்போது ஹிந்து மிஷனின் தலைவராகச் சுவாமி சத்யானந்தா இருந்தார். அவர் மூலம் தனது கொள்கைகளைச் சாவித்ரி பிரச்சாரம் செய்தார். சுதந்திரத்திற்கு முன்பு பல இந்தியர்களைப் போலவே சத்யானந்தாவும் ஹிட்லரின் அபிமானியாக இருந்தார். ஆர்.எஸ்.எஸ் -ன் இரண்டாவது தலைவர் கோல்வால்கரும் கூட தனது ஞான கங்கை எனும் நூலில் ஹிட்லரைப் போற்றுகிறார். எனவே சத்தியானந்தா, சாவித்ரியின் நாஜிக் கருத்துக்களை ஹிந்து அடையாளத்துடன் பிரச்சாரம் செய்ய அனுமதித்தார். நாடு முழுவதும் சுற்றுப்பிரயாணம் செய்த சாவித்ரி ஹிட்லரின் சுயசரிதையான மெயின் கேம்பிலிருந்து மேற்கோள்களைச் சுட்டிக் காண்பித்து ஆரிய மேன்மையை இந்தியிலும், பெங்காலி மொழியிலும் பிரச்சாரம் செய்தார்.

"ஒரு நாள் நாம் எழுந்து மீண்டும் வெற்றி பெறுவோம்! நம்பிக்கையோடு காத்திருங்கள்! ஹிட்லர் வாழ்க!"
துண்டு பிரசுரம்

ஐரோப்பாவிற்குத் திரும்பிய சாவித்ரி

1945 இல் இரண்டாம் உலகப்போரில் ஜெர்மன் தோல்வி அடைந்து ஹிட்லர் தற்கொலை செய்து கொள்கிறார். இதை the fall of the Third Reich என்று ஹிட்லர் ஆதரவாளர்கள் அழைக்கிறார்கள். இதன் பொருள் முன்பு புனித ரோமானிய பேரரசர், பிறகு ஜெர்மனிய பேரரசின் அழிவிற்குப் பின் மூன்றாவது முறையாக ஹிட்லர் எனும் ஆரியப் பேரரசர் அழிந்தார் என்பதே. இது சாவித்ரிக்குப் பேரதிர்ச்சியாக இருந்தது. எனவே அவர் ஆரிய மேன்மையை நிலைநிறுத்தும் பொருட்டு ஐரோப்பாவிற்குத் திரும்பினார். இங்கிலாந்தில் வந்திறங்கிய சாவித்ரி Long-Whiskers and the Two-Legged Goddess எனும் நூலை எழுதினார். அதில் அவரைப் போலவே ஒரு நாயகி பூனைகளை நேசிப்பதோடு ஹிட்லரின் நாஜிக்களையும் நேசிக்கிறார்.

Long-Whiskers and the Two-Legged Goddess
Long-Whiskers and the Two-Legged GoddessSavitri Devi
சாவித்ரி தேவி
இன்கா நாகரிகம்: துரோகத்தால் வீழ்ந்த ஒரு பெரும் நாகரிகத்தின் வரலாறு

மனிதர்களை விட விலங்குகளைத் தான் விரும்புவதாகச் சாவித்ரி எப்போதும் தெளிவாக இருந்தார். ஹிட்லரைப் போலவே இவரும் சைவ உணவு உண்பவர். பனி சூழ்ந்த ஐஸ்லாந்திற்குச் சென்ற அவர் ஹெக்லா மலையின் சரிவுகளில் இரண்டு இரவுகளைக் கழித்தார். அங்கே ஒலித்த ஒலி ஓம் என்றார். அதுதான் படைப்பின் அசல் ஒலி என்றார். எரிமலை கூட இரண்டு அல்லது மூன்று விநாடிகளுக்கு ஒரு முறை ஓம் என்று ஒலிக்கிறது என்றார்.

1948, சாவித்ரி ஆக்கிரமிக்கப்பட்ட ஜெர்மனியில் நுழைந்தார். அங்கு அவர் ஆயிரக்கணக்கான நாஜி ஆதரவு துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தார்: "ஒரு நாள் நாம் எழுந்து மீண்டும் வெற்றி பெறுவோம்! நம்பிக்கையோடு காத்திருங்கள்! ஹிட்லர் வாழ்க!" என்று அந்த பிரசுரத்திலிருந்தது.

சில ஆண்டுகளுக்குப் பிறகு, ஜெர்மனியில் பிரிட்டிஷ் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதில் மகிழ்ச்சியடைவதாக அவர் சொன்னார். ஏனெனில் அது சிறையிலிருந்த நாஜி தோழர்களுடன் தன்னை நெருக்கமாகக் கொண்டு வந்தது என்றார். இந்திய அரசாங்கத்தின் மூலம் அவரது கணவரின் தலையீட்டால் அவர் சிறையிலிருந்து விடுதலை ஆனார்.

சாவித்ரி தேவி
சோவியத் யூனியன் : உக்ரைன், கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான் - சிதறிய வல்லரசு நாட்டின் கதை

சாவித்ரியின் பாலுறவு சில ஊகங்களுக்கு உட்பட்டது. அவர் பிராமணரான அஜித் முகர்ஜியுடனான அவரது திருமணம் ஒரு பிரம்மச்சரிய வாழ்வாகே இருந்தது என்று கூறப்படுகிறது. ஏனெனில் அவர்கள் ஒரே சாதியைச் சேர்ந்தவர்கள் அல்ல. நாஜி நிதியாளர் ஃபிராங்கோயிஸ் டியோர் எனும் ஆடை வடிவமைப்பாளரின் மருமகள், அவரது காதலர் என்று கூறப்படுகிறது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

சாவித்ரி தேவி
அம்பானி, அதானி மற்றும் ஒரு தமிழர் : இவர்கள்தான் இந்தியாவின் டாப் 10 பணக்காரர்கள்

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com