உலக அழகி ஐஸ்வர்யா ராய் பெயரில் போலி பாஸ்போர்ட் தயாரித்து மோசடியில் ஈடுபட்ட வெளிநாட்டைச் சேர்ந்த 3 பேரை உத்தரப் பிரதேச மாநில போலீஸார் கைது செய்துள்ளனர்.
இணைய மோசடிகள் தற்போது அதிகமாக நடந்துக் கொண்டிருக்கிறது.
உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டா பகுதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரியிடம் இந்த வெளிநாட்டவர்கள் மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.
1.81 கோடி மோசடி செய்ததாக ஓய்வுபெற்ற ராணுவ கர்னல் புகார் அளித்ததையடுத்து, போலீசார் விசாரணை நடத்தினர்.
நைஜீரிய நாட்டை சேர்ந்த இருவர், கானா நாட்டை சேர்ந்த ஒரு நபரை போலீஸார் கைது செய்தனர்.
இவர்களிடம் நடத்திய விசாரணையில் இந்த மோசடி குறித்த விவகாரங்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
மேலும் திருமண வரன் பார்க்கும் தளங்கள், டேட்டிங் தளங்கள் போன்றவற்றில் போலி அடையாளங்களை உருவாக்கி பண மோசடியில் ஈடுபட்டு வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இவர்களிடமிருந்து நடிகை ஐஸ்வர்யா ராய் பெயரில் உருவாக்கப்பட்ட போலி பாஸ்போர்ட் ஒன்றையும் பறிமுதல் செய்தனர்.
இது தவிர 6 மொபைல் போன்கள், 11 சிம் கார்டுகள், லேப்டாப்புகள், பிரின்டர்கள் போன்றவற்றையும் பறிமுதல் செய்தனர். ரூ.10.76 கோடி மதிப்புள்ள கள்ளநோட்டுகளையும் இவர்களிடம் இருந்து கைப்பற்றியுள்ளனர்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust