இரவில் பீர் திருடி குடிக்கும் குடிகார குரங்கு - இணையத்தில் வைரலாகும் வீடியோ | Video

இதேபோன்ற சம்பவம் லக்னோ-கான்பூர் சாலையில் உள்ள மதுபானக் கடையில் நிரந்தர வாடிக்கையாளராக இருந்த குரங்கு பின்னர், கல்லீரல் பெரிதாகி, இறந்தது.
பீர் குடிக்கும் குரங்கு
பீர் குடிக்கும் குரங்குTwitter
Published on

உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி மாவட்டத்தில் மது அருந்தும் குரங்கு ஒன்று மது விற்பனையாளர்களுக்கு தொல்லை கொடுத்து வருகிறது.

மதுக்கடையில் புகுந்து அட்டூழியம் செய்யும் குரங்கு, கடைகளுக்குள் இருக்கும் மதுபாட்டில்களை கொள்ளையடித்து வருகிறது.

மேலும், வாடிக்கையாளர்களிடம் இருந்து மதுபாட்டில்களை பறித்துச் செல்கிறது. குரங்கை பிடிக்க முயற்சித்து வருவதாக மாவட்ட காவல் அதிகாரி ராஜேந்திர பிரதாப் சிங் தெரிவித்தார்.

குடிப்பழக்கத்திற்கு அடிமையான குரங்கு, மதுபானக் கடைகளுக்குள் புகுந்து மதுபாட்டில்களை திருடி குடித்து வரும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதுகுறித்து மாவட்ட காவல் அலுவலர் ராஜேந்திர பிரதாப் சிங் கூறுகையில், வனத்துறையினர் உதவியுடன் குரங்கை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

பீர் குடிக்கும் குரங்கு
உலகிலேயே சோகமான கொரில்லா இதுதான்! 32 ஆண்டுகளாக மாலில் சிறைப்பட்டிருக்கும் குரங்கு - ஏன்?

பாட்டிலை எடுக்காமல் தடுக்க முயன்றால், குரங்கு ஆக்ரோஷமாக மாறிவிடும் என மதுக்கடை உரிமையாளர் ஒருவர் தெரிவித்திருக்கிறார்.

இதேபோன்ற சம்பவம் லக்னோ-கான்பூர் சாலையில் உள்ள மதுபானக் கடையில் நடந்தது. நிரந்தர வாடிக்கையாளராக இருந்த குரங்கு பின்னர், கல்லீரல் வீக்கம் ஏற்பட்டு இறந்தது.

பீர் குடிக்கும் குரங்கு
ஓநாய், குரங்கு, கோழியால் வளர்க்கப்பட்ட குழந்தைகள்: மிருகங்களாகவே மாறிய மனிதர்களின் கதை!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com