ஓநாய், குரங்கு, கோழியால் வளர்க்கப்பட்ட குழந்தைகள்: மிருகங்களாகவே மாறிய மனிதர்களின் கதை!

டார்சான், ஜார்ஜ் ஆஃப் தி ஜங்கிள், தி ஜங்கிள் புக் போன்ற ஹாலிவுட் படங்களைப் போல அவர்களின் வாழ்க்கை இனிமையானது அல்ல. அவர்கள் தினமும் உணவுக்காக விலங்குகளுடன் சண்டையிட வேண்டும். இயற்கையை எதிர்த்து விலங்குகளில் ஒன்றாக மாற வேண்டும். காய்ப்பு பிடிக்கும் தோல் கொடுக்கும் வலியை பொருத்துக்கொள்ள வேண்டும்.
ஓநாய், குரங்கு, கோழி வளர்த்த குழந்தைகள்
ஓநாய், குரங்கு, கோழி வளர்த்த குழந்தைகள் Twitter
Published on

டார்சான், ஜார்ஜ் ஆஃப் தி ஜங்கிள், தி ஜங்கிள் புக் போன்ற படங்களில் விலங்குகளால் வளர்க்கப்பட்டப் மனிதர்களை குறித்து பார்த்திருப்போம்.

உண்மையில் அப்படி மிருகங்களுடன் இணைந்த குழந்தைகள் உலகெங்கும் இருக்கின்றனர். ஆனால், ஹாலிவுட் படங்களைப் போல அவர்களின் வாழ்க்கை இனிமையானது அல்ல. அவர்கள் தினமும் உணவுக்காக விலங்குகளுடன் சண்டையிட வேண்டும். இயற்கையை எதிர்த்து விலங்குகளில் ஒன்றாக மாற வேண்டும். காய்ப்பு பிடிக்கும் கைகள் கொடுக்கும் வலியை பொருத்துக்கொள்ள வேண்டும். குரல்வளை பிய்ய ஊளையிடவும், குரைக்கவும், கொக்கரிக்கவும் வேண்டும். நடங்களையும் பற்களையும் கூர்மையாக்க வேண்டும். எலும்புகள் தெறிக்க நான்கு கால்களில் நடக்க வேண்டும்.

காட்டுக் குழந்தைகளாக வளர்ந்து மனித குணங்களை இழக்கும் இந்த குழந்தைகள் பெரும்பாலும் அவர்களின் மோசமான குடும்பத்தின் அடையாளமாக இருக்கின்றனர். இவர்களின் மனித வாழ்விலும் கொடிய கதைகள் இரகசியமாக ஒளிந்திருக்கின்றன.

வளர்ப்பு என்பது பிறப்பைவிட முக்கியமானது. ஒரு குழந்தையை பெற்றெடுப்பதன் வழியாக ஒரு மனிதரை இந்த உலகுக்கு கொடுத்துவிட முடியாது எனக் கூறுகின்றன இந்தக் கதைகள்.

நாய்களால் வளர்க்கப்பட்ட பெண்

உக்ரைன் நாட்டைச் சேர்ந்த ஒக்ஸனா மலயா பெண் தனது 3 வயது முதல் 5 வயது வரை நாய்களால் வளர்க்கப்பட்டுள்ளார்.

3 வயதாக இருந்த அந்த குழந்தைக்கு பெற்றோரின் அன்பு உரியபடி கிடைக்கவில்லை. குடிகாரர்களாக இருந்த பெற்றோர்கள் குழந்தையை ஓரிடத்தில் தவறவிடுகின்றனர். ஆனால் அவள் காணாமல் போனதை அவர்கள் கவனிக்கவில்லை.

குளிரில் நடுங்கிய குழந்தை நாய்கள் வசிக்கும் கொட்டிலுக்குள் சென்று தூங்கியுள்ளார். அன்று முதல் அவளது வசிப்பிடமாகவே மாறிவிட்டது அந்த நாய்கள் கொட்டில்.

நாய் கொட்டிலுக்குள்ளாகவே மொத்த வாழ்க்கையையும் கழிக்கத் தொடங்கியிருக்கிறாள் ஒன்ஸனா. நாய்களின் மிச்சத்தையே சாப்பிட்டிருக்கிறாள்.

நாய்களே அவளை வளர்த்தன. நாட்கள் சென்றன. சில நேரங்களில் ஒக்ஸனா தூரத்திலிருந்து மனிதர்களைப் பார்த்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆனால் அவளது வாழ்க்கை எல்லாம் நாய்களுடனேயே இருந்தது.

நான்கு கால்களில் நடக்கவும் குரைக்கவும் நாக்கால் தண்ணீர் பருகவும் தொடங்கிவிட்டார். 5 ஆண்டுகளுக்கும் மேலாக ஒக்ஸனா நாயாகவே வாழ்தார். 1991ம் ஆண்டு அவர் கண்டுபிடிக்கப்பட்ட போது அவருக்கு வயது 8.

அவர் மனித சுபாவங்களை முழுவதுமாக விட்டுவிட்டார். பேசவும் இரண்டு கால்களில் நடக்கவும் கூட அவருக்கு மறந்து விட்டது.

இப்போது 38 வயதாகும் ஒக்ஸனா மனநல காப்பகம் ஒன்றில் வசித்து வருகிறார். அவருக்கு 6 வயது மனிதருக்கு உண்டான அறிவே இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். எல்லாரும் அவரையே கவனிப்பது அவருக்கு பிடித்த ஒன்றாக இருக்கிறது.

சாப்பிடவும், கால்களால் நடக்கவும் கற்றுக்கொண்டு விட்டார் அவர். பல நிபுணர்கள் அவரை சந்தித்து வருகின்றனர். இப்போது வரை அவரால் சாதாரண வாழ்வைத் திரும்பப் பெற முடியவில்லை.

ஓநாய்களின் மகன் ஷம்தோ

1972ம் ஆண்டு இந்தியாவில் காடுகளில் கண்டுபிடிக்கப்பட்ட சிறுவன் ஷம்தோ.

அவர் கண்டுபிடிக்கப்பட்ட போது அவருக்கு நான்கு வயது இருக்கலாம் என்று கணிக்கப்படுகிறது. உண்மையான வயது தெரியவில்லை.

அவரை ஓநாய் குட்டிகளுடன் விளையாடிக்கொண்டிருக்கும் போது கண்டிருக்கின்றனர்.

ஷம்தோக்கு நீளமான நகங்கள், சடைபிடித்த முடி இருந்திருக்கிறது. மிகவும் கருத்த தோல், கூர்மையாக்கப்பட்ட பற்கள் என இயற்கைக்கு மாறன உடலமைப்பைக் கொண்டிருந்திருக்கிறார்.

வளர்ப்பு என்பது இயற்கையை, இயல்பைக் கடந்தது என இந்த மனித சுபாவத்தை இழந்த சிறுவன் கூறுவதாகக் கருதுகின்றனர் ஆர்வலர்கள்.

ஓநாய்களால் வளர்க்கப்பட்ட இவர் கோழிகளை வேட்டையாடக் கற்றுக்கொண்டுள்ளார். மண்ணைத் திண்ணவும், இரத்தத்தைக் குடிக்கவும் செய்துள்ளார்.

காட்டிலிருந்து திரும்பிய பின்னர், நாய்களுடனேயே அதிக பிணைப்பினைக் கொண்டிருந்திருக்கிறார். பேசுவதற்கு அவரைப் பழக்குவது முடியாத காரியாமக இருந்திருக்கிறது. சில சைகை மொழியை மட்டும் கற்றுக்கொண்ட அவர், மனிதர்களுடன் இறுதிவரை இணைய முடியவில்லை. அந்த ஓநாய்களின் குழந்தை 1985ம் ஆண்டு மரணித்தார்.

குரங்குகளால் வளர்க்கப்பட்ட குழந்தை

இந்த கதை கொலம்பியாவில் தொடங்கியது. இந்த கதையின் முடிவு கொஞ்சம் சுவாரஸ்யமானது. மற்றவர்களைப் போல இல்லாமல் இப்போது இவர் தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் வாழ்ந்து வருகிறார்.

1954ல் மெரினா சாப்மேன் என்ற அந்த பெண் 5 வயதாக இருக்கும் போது சில நபர்களால் அவரது கிராமத்தில் இருந்து கடத்தப்பட்டார். ஏதோ காரணங்களுக்காக அவர்கள் அந்த சிறுமியை காட்டில் விட்டுவிட்டு சென்று விட்டனர். அவள் காட்டின் குழந்தையானால்...

காபச்சுன் குரங்குகள் அவளைப் பார்த்துக்கொண்டன. பெர்ரி பழங்கள், வாழைப்பழங்கள், கிழங்குகளை உண்டு அவர் வாழ்ந்து வந்தார்.

குரங்குகள் அவருக்கு எப்போதும் உணவளித்துப் பார்த்துக்கொண்டிருக்கவில்லை. இது ஒன்றும் டார்சான் கதையுமில்லை. இது வாழ்க்கை.

தனது திறமையை அவர் வளர்த்துக்கொண்டார். வாழ்வதற்காக குரங்குகளின் பழக்கங்களை நகலெடுக்கத் தொடங்கினார். அவளுக்கு இருந்த உள்ளுணர்வைப் பயன்படுத்தி வாழ்க்கையை நகர்த்தத்தொடங்கினார். மரப்பொந்துகளில் அந்த பெண்ணால் தூங்கிக்கொள்ள முடிந்தது. சக குரங்குகள் அவள் தலையிலிருந்து பேனை எடுத்தன.

இவர் காட்டுக்கு சென்ற வேட்டைக் காரர்களால் கண்டுபிடிக்கப்பட்டார். அப்போது இவருக்கு 10 வயது. பல தசாப்தங்கள் கடந்துவிட்டன. வடக்கு இங்கிலாந்தில் யார்க்ஷைர் என்ற பகுதியில் வசித்து வருகிறார். இவர் குறித்து வெளியான The Girl With No Name என்ற புத்தகம் பெரிய அளவில் பேசப்பட்டது.

காடு விழுங்கிய சிறுவன்

புதுப்பேட்டை படத்தின் ஆரம்பத்தில் ஒரு காட்சி வரும். தனுஷின் அம்மாவை அவரது அப்பாவே கொலை செய்யும் காட்சி அது. அதன் பிறகு தனுஷின் வாழ்க்கை மாறும். ஒரு வேளை தனுஷுக்கு 3 வயதாக இருந்த போது அந்த சம்பவம் நடந்திருந்தால்? அவர் ஒரு காட்டுக்குள் ஓடிச் சென்றிருந்தால்? அது தான் நடந்தது இந்த உகாண்டா சிறுவனுக்கு!

ஜான் செபுன்யா என்ற உகாண்டாவைச் சேர்ந்த சிறுவனின் தந்தை அவனது தாயை கொலை செய்துள்ளார். இந்த சம்பவத்தன்று சிறுவன் வீட்டை விட்டு ஓடி காட்டுக்குள் நுழைந்துவிட்டார். காடு அவனை விழுங்கியது...

குரங்களுடன் இணைந்து அவன் வாழத் தொடங்கினான். ஒரு காட்டுச் சிறுவன். அவனது முழங்கால்கள் மரத்து காய்த்துப் போயிருந்தன.

1991ம் ஆண்டு அவன் கண்டுபிடிக்கப்பட்ட போது அவரது வயது 6. மூன்று வருடங்கள் குரங்குகளுடனே வாழ்ந்திருக்கிறார் அவர். இப்போது அவரால் ஓரளவு மனிதர்களுடன் நெருங்க முடிகிறது. பேசவும் பழகிக்கொண்டார் அவர்.

நாய்குட்டி சிறுமி

மதினா என்ற பெண் ரஷ்யாவைச் சேர்ந்தவர். இந்த கதைகளில் மிகவும் சமீபத்தில் இருப்பது இவர் தான். மதினாவை 2013ம் ஆண்டு கண்டுபிடித்தனர்.

அப்போது 3 வயது நிரம்பியிருந்த அவர் வீட்டிலிருந்த நாய்களுடன் நான்கு கால்களில் விளையாடிக்கொண்டிருந்தார். அவைகளுக்கு கொடுக்கப்படும் எலும்புத் துண்டுகளையே தானும் உண்டு வாழ்ந்தார். குளிர்காலங்களில் அவற்றுடன் நெருங்கி படுத்துக்கொண்டார்.

மதினாவின் அப்பா அவர் பிறந்த போதே குடும்பத்தை விட்டு ஓடிவிட்டார். அம்மா எப்போதும் குடித்துக்கொண்டிருந்தார். அவர் போதையுடன் மேசையில் அமர்ந்து சாப்பிட்டுவிட்டு வீசும் எலும்புத்துண்டுகளை நாய்களுடன் பொறுக்கித் தின்றார் மதினா.

சமூக ஆர்வலர்களுக்கு மதினா குறித்து தெரியவர அவளை மீட்கச் சென்ற போது அவர் ஆடை கூட அணிந்திருக்கவில்லை. ஆனால் உடலளவிலும் மனதளவிலும் அவர் மோசமாக பாதிக்கப்படவில்லை. எனினும் 3 வயதுக்குள்ளாகவே மிக மோசமான அனுபவங்களைக் கடந்து வந்தார் அவர்.

சிறுமி மதினா மற்றும் அவரின் தாய்
சிறுமி மதினா மற்றும் அவரின் தாய்

கோழிகளுடன் திரிந்த சிறுவன்

பிஜி நாட்டைச் சேர்ந்த சிறுவன் சுஜித் குமார். 1978ம் ஆண்டு இவர் கண்டுபிடிக்கப்பட்ட போது இவருக்கு 8 வயது. அப்போது அவருக்கு பேசத் தெரியவில்லை. உட்காரத்தெரியவில்லை. எந்த பொருளையும் ஒழுங்காக பிடிக்கத் தெரியவில்லை. கண்களைப் பார்ப்பது கூட இல்லை. அவர் ஒரு கோழியாக மாறியிருந்தார்.

சுஜித்தின் அப்பா கொலைசெய்யப்பட்டார். அவரை கோழி பண்ணையில் பூட்டிவிட்டு அம்மா தற்கொலை செய்து கொண்டார். அதன் பிறகு சுஜித்தை தாத்தா தான் கவனித்துக்கொண்டார். ஆனால் அதே கோழிப்பண்ணையில் தான் சுஜித் வளர்க்கப்பட்டார். சுஜித்தை பிடித்துக்கொண்டது தனிமை. அவர் வாழ்க்கை முழுக்க கோழிகளுடன் தான் இருந்தது. அவற்றுடனே அவர் வாழ்க்கையை தொடங்கிவிட்டார்.

புறக்கணிப்பு, தனிமை, மோசமான வளர்ப்பு தெருக்களில் சுஜித்தை இரைத் தேடித் திரியவிட்டது. கைகளை கோழியின் இறக்கை போல மடித்துக்கொண்டு குனிந்த படி நடந்த அவர் உணவை கொத்தி கொத்தி சாப்பிடப் பழகியிருந்தார். உள்ளுணர்வால் அவர் ஒரு கோழியாக இருந்தார்.

கோழிப்பண்ணையிலிருந்து மீட்கப்பட்ட சுஜித் அதன் பிறகு ஒரு காப்பகத்தில் வளர்க்கப்பட்டார்.

ஓநாய், குரங்கு, கோழி வளர்த்த குழந்தைகள்
ஒசிதா இஹேம் : மீம்களிள் பிரலபமான நைஜீரியச் சிறுவன் - இந்த சிறுவனின் வயது என்ன தெரியுமா ?

ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தைகளுக்கு சிறப்பான எதிர்காலம் பிறக்க இனிமையான சுற்றத்தை அமைத்துக்கொடுக்க விரும்புகின்றனர்.

தனியாக வளரும் குழந்தைக்கும் அண்ணன், தம்பியுடன் வளரும் குழந்தைக்கும் வித்தியாசமிருக்கும். பாட்டி தாத்தா வளர்க்கும் குழந்தைகள் கொஞ்சம் வேறுபட்டவர்களாக இருப்பர். பிறப்பை விட சுற்றம் தான் ஒருவரின் குணநலங்களை முடிவு செய்கிறது. அதன் தாக்கம் எந்த அளவு என்பதை மேலே கூறப்பட்டிருக்கும் கதைகள் நமக்குச் சொல்கின்றன.

குழந்தைகளின் மனம் எளிதில் பாதிப்படையக் கூடியது. தனிமை, குழப்பம், அமைதியின்மை போன்ற மனநலப் பிரச்னைகள் அவர்களை எளிதாக ஆட்டுவிக்கக் கூடியது. ஒரு குடும்பத்தால் கவனிக்கப் படாத குழந்தையின் வாழ்வு எத்தனை கொடியதாகவும் மாறிவிடும். நம் குழந்தைகளுக்கு மட்டுமில்லாமல் சமூகத்தின் அனைத்துக் குழந்தைகளும் பாதுகாப்பான, நம்பிக்கைத் தரக் கூடிய, ஆரோக்கியமான சுற்றத்தை உருவாக்கித் தரக் வேண்டியது நம் கடமை.

ஓநாய், குரங்கு, கோழி வளர்த்த குழந்தைகள்
Real மௌக்லி: ஓநாய் வளர்த்த காட்டுச் சிறுவன் - அதிர வைக்கும் உண்மை கதை

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com