ஒரே வீட்டில் இரண்டு IAS இரண்டு IPS - ஓர் அடடே குடும்பம்

பிள்ளைகளுக்கு எந்த பாரபட்சமும் இல்லாமல் சிறந்த கல்வியை வழங்க வேண்டும் என்பதில் அனில் பிரகாஷ் மிஸ்ரா மிகவும் கவனமாக இருந்ததாக ஊடகங்களில் கூறியுள்ளார். பிள்ளைகளும் படிப்பிலேயே கவனம் செலுத்தியதாகவும் அவர் கூரியுள்ளார்.
Brother - sisters
Brother - sistersTwitter
Published on

உத்தரபிரதேசத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதர சகோதரிகள் நான்கு பேரில் இரண்டு பேர் ஐஏஎஸ் மற்றும் இரண்டு பேர் ஐபிஎஸ் அதிகாரியாகியிருப்பது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இரண்டு ஆண் மற்றும் இரண்டு பெண் பிள்ளைகளின் தந்தையான அனில் பிரகாஷ் மிஸ்ரா ஒரு வங்கியில் மேனேஜராக பணியாற்றுகிறார்.

பிள்ளைகளுக்கு எந்த பாரபட்சமும் இல்லாமல் சிறந்த கல்வியை வழங்க வேண்டும் என்பதில் அனில் பிரகாஷ் மிஸ்ரா மிகவும் கவனமாக இருந்ததாக ஊடகங்களில் கூறியுள்ளார். பிள்ளைகளும் படிப்பிலேயே கவனம் செலுத்தியதாகவும் அவர் கூரியுள்ளார்.

இந்த உடன்பிறப்புகளில் மூத்தவர் யோகேஷ் மிஸ்ரா இவர் இப்போது ஐஏஎஸ் அதிகாரியாக பணியாற்றுகிறார். இன்ஜினியரான இவர் நொய்டாவில் பணியாற்றிக்கொண்டே UPSC தேர்வுகளுக்கும் படித்து 2013ல் தேர்ச்சி பெற்று IAS அதிகாரியானார்.

அவரது தங்கையான கஷ்மா மிஸ்ரா 3 முறை தோற்ற பின்னர் 4வது முறையாக தேர்ச்சி பெற்று ஐஏஎஸ் அதிகாரியானார்.

3வது மற்றும் 4வது குழந்தைகள் மாதுரி மிஸ்ரா மற்றும் லோகேஷ் மிஸ்ரா ஐபிஎஸ் அதிகாரிகளாக உருவாகியிருக்கின்றனர்.

Brother - sisters
கணிதத்தில் 31 மார்க், மற்ற பாடங்களில் ஜஸ்ட் பாஸ் - வைரலாகும் IAS அதிகாரியின் மார்க் ஷீட்

தனது குழந்தைகள் குறித்து பெருமிதம் கொள்வதாகக் கூறியிருக்கிறார் மிஸ்ரா.

அனில் பிரகாஷ் மிஸ்ராவிடம் உங்களுக்கு எத்தனை ஆண் பிள்ளைகள் எத்தனை பெண் பிள்ளைகள் என்றில்லாமல் எத்தனை ஐஏஎஸ் பிள்ளைகள் எத்தனை ஐபிஎஸ் பிள்ளைகள் என்று தானே கேட்பார்கள்?

Brother - sisters
'டேய் பரமா படிடா' மகனின் மோசமான மதிப்பெண்ணைப் பார்த்து கதறி அழுத தந்தை

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com