சமீபத்தில் இணையமெங்கும் மாயாண்டி குடும்பத்தார் படத்தில் வரும் "பரமா படிடா" மீம் செம வைரலானது. அப்பாவாக நடித்திருந்த மணிவண்ணன் தனது மகனிடம், "டேய் பரமா படிடா, நீ படிச்சு பெரியாளா வரனும்டா" என அழுதுகொண்டே செல்வது போல அந்த காட்சியாக இருக்கும். படத்தில் எமோஷனல் காட்சியாக இருந்தாலும் நம்ம நெட்டிசன்கள் கடந்த 10th,+2 பொதுத்தேர்வில் அதை மீம் டெம்ப்ளேட்டாக மாற்றி எல்லாரையும் சிரிக்க வைத்தனர். இதே போல உண்மையிலேயே நடந்திருக்கிறது. பரிட்சையில் மகன் வாங்கிய மதிப்பெண்ணைப் பார்த்து தந்தை ஒருவர் அழும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
சீனாவில் நிகழ்ந்த சம்பவம் அது. எடுக்கப்பட்ட அந்த வீடியோவில் தந்தை ஒருவர் தனது மகன் கணித பாடத்தில் 100க்கு 6 மதிப்பெண்களை மட்டுமே எடுத்திருப்பதைப் பார்த்து மனமுடைந்து அழுதார்.
ஏனெனில், அவர் தான் அவனுக்கு இரவு நெடுநேரம் விழித்திருந்து கணிதம் சொல்லிக்கொடுத்திருக்கிறார்.
தனது மகன் கணிதத்தில் பாஸாகி மகிழ்ச்சியாக இருப்பதைப் பார்க்க நினைத்த தந்தையை அழவைத்து விட்டன மதிபெண்கள். இது குறித்து weirdkaya.comல் செய்தி வெளியாகியிருக்கிறது.
மகனுக்கு சொல்லிக்கொடுப்பதற்காக அவனது பள்ளி பாடத்தை மீண்டும் கற்றுக்கொண்ட தந்தை, "இனி நான் கண்டுக்கொள்ள மாட்டேன், நான் செய்தது எல்லாமே வீண்" எனவும். "இனி அவனே பார்த்துக்கொள்ளட்டும்" எனவும் கூறியுள்ளார்.
அந்த மகனுக்கு கணிதம் வரவில்லையா அல்லது அவன் சரியாக படிப்பதில்லையா என்பதும் அந்த தந்தை சரியாக தான் கணிதம் கற்றுக்கொடுத்தாரா என்பதும் நமக்குத் தெரியாது.
ஆனால் குழந்தைக்கு ஒரு பாடம் சரியாக வரவில்லை எனில் அவனுக்கு வருகிற பாடத்தில் நல்ல மதிப்பெண்கள் எடுக்க ஊக்குவிக்க வேண்டும்.
எல்லாரும் எல்லா பாடத்திலும் நல்ல மதிப்பெண்கள் பெற வேண்டும் என்ற அவசியமில்லை. குழந்தைக்காக கணக்கு சொல்லிக்கொடுத்த அப்பாவின் முயற்சி பாராட்டக் கூடியது.
அவர் மனமுடைந்து விடாமல் தொடர்ந்து அவனை ஊக்குவித்தோ வேறு நல்ல ஆசிரியரிடம் சேர்த்தோ பாஸாக வைக்க வேண்டும் என்பது தான் நெட்டிசன்கள் கூறும் கருத்தாக இருக்கிறது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust