ஒடிஷாவின் சுகாதார துறை அமைச்சர் நபா கிஷோர் தாஸ் காவல் ஆய்வாளர் துப்பாக்கியால் சுட்டதில் மரணமடைந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
ஜார்சுகுடா மாவட்டத்தில் புதிதாக கட்டப்பட்ட அரசு அலுவலகங்களை திறக்கும் விழாவில் பங்கேற்ற போது இந்த சம்பவம் நடந்திருக்கிறது.
நிகழ்வில் கலந்துகொள்ள அமைச்சர் காரில் இருந்து இறங்கிய போது உதவி சப்-இன்ஸ்பெக்டர் கோபால் தாஸ் என்பவர் அவரது மார்பில் சுட்டார்.
மார்பில் இரண்டு குண்டுகள் இறங்கிய நிலையில் புபனேஸ்வர் அப்போலோ மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டார். அங்கு அவரது உயிர் பிரிந்தது.
60 வயதாகும் நபா கிஷோர் தாஸின் மனைவி மினாதி. இந்த தம்பதிக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர்.
1962ம் ஆண்டு பிறந்த நபா கிஷோர் தாஸ், ஆங்கிலம் மற்றும் சட்டம் பயின்றவர். கல்லூரி காலத்திலேயே கங்கிரஸில் இணைந்து அரசியல் பணிகள் ஆற்றியிருக்கிறார்.
இந்திய தேசிய மாணவர் அமைப்பு, இளைஞர் காங்கிரஸ் இயக்கங்களில் துணைத் தலைவராக இருந்திருக்கிறார்.
காங்கிரஸ்காரராக இருந்த இவர், 2019 தேர்தலின் போது பிஜு ஜனதா தல் கட்சியில் சேர்ந்து அமைச்சரானார். இவர் தொடர்ந்து மூன்றாவது முறையாக எம்.எல்.ஏ பதவியில் அமர்ந்தவர்.
ஜார்சுகுடா மாவட்டத்தில் உள்ள அடித்தட்டு சுரங்க தொழிலாளர்களின் நன்மதிப்பை பெற்றிருக்கிறார். அதேவேளையில் ஒடிஷா சட்டமன்றத்திலேயே இரண்டாவது பணக்காரராக இருப்பதும் இவர் தான்.
ஹோட்டல் மற்றும் போக்குவரத்து தொழிலில் ஏராளமான வருமானம் ஈட்டி வந்தார். சுரங்க தொழிலும் இருப்பதாக கூறப்படுகிறது. சமீபத்தில் மகாராஷ்டிராவின் ஷிங்னாபூரில் உள்ள ஷானி கோவிலில் பிரார்த்தனை செய்தவர், 1 கோடி மதிப்புள்ள தங்க கலசங்களை நன்கொடையாக அளித்தார்.
அரசியலில் வலிமையான தலைவரான இவர், சொகுசு கார்கள் மீது விருப்பம் கொண்டவர். 80 கார்களை வைத்திருந்தார். அவரது மனைவி 65 கார்களை வைத்திருக்கிறார். அவரது மொத்த சொத்து மதிப்பு 34 கோடி எனக் கூறப்படுகிறது. கார்கள் மட்டுமே 15 கோடி மதிப்பிருக்கும் என்கிறார்கள்.
ஒடிஷாவைத் தாண்டி டெல்லி, கொல்கத்தாவிலும் இவருக்கு சொத்துகள் இருக்கின்றன.
2020-21 ஆண்டுகளில் ஏற்பட்ட கொரோனா பெருந்தொற்று பிரச்னையை சிறப்பாக கையாண்டதிலும் மக்களிடம் பேசப்பட்டார்.
முதன் முதலாக 2004ம் ஆண்டு காங்கிரஸ் சார்பாக ஜார்சுகுடா எம்.எல்.ஏ தேர்தலில் நின்றவர் தோற்கடிக்கப்பட்டார். 2009ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்றவர் இப்போது வரை அவரது தொகுதியில் அசைக்க முடியாத சக்தியாக இருந்தார்.
காங்கிரஸில் முன்னணி தலைவராக இருந்தவருக்கு மாநில செயல் தலைவர் பதவியும் வழங்கப்பட்டிருந்தது. எனினும் 2019ம் ஆண்டு பிஜேடி கட்சியில் இணைந்து நவீன் பட்நாயக்கின் நம்பிக்கைக்கு உரியவராக செயலாற்றி வந்தார்.
இவரது மறைவுக்கு ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக், பிரதமர் மோடி, தமிழ் நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் பல தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust