கொரோனா கால துணைவன் டோலோ 650 : நிறுவனம் மீது ரெய்டு - என்ன நடந்தது?

பெங்களூருவைத் தலைமையிடமாகக் கொண்ட இந்த மருந்து நிறுவனத்திற்கு எதிரான நடவடிக்கையில் மொத்தம் 1.20 கோடி ரொக்கமும், 1.40 கோடி மதிப்புள்ள தங்கம் மற்றும் வைர நகைகளும் "கணக்கில் காட்டப்படாதவையாக” பறிமுதல் செய்யப்பட்டன
Dolo 650
Dolo 650Twitter
Published on

டோலோ-மேக்கர் மைக்ரோ லேப்ஸ் லிமிடெட் மீது மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT) "நெறிமுறையற்ற நடைமுறைகளில்" ஈடுபட்டதாகவும், மருத்துவர்கள் மற்றும் பிற மருத்துவ நிபுணர்களுக்கு சுமார் 1,000 கோடி மதிப்புள்ள இலவச பரிசுகளை வழங்கியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

கடந்த ஜூலை 6 அன்று வருமான வரி அதிகாரிகளால், ஒன்பது மாநிலங்களில் அமைந்துள்ள 36 மைக்ரோ லேப்ஸ் லிமிடெட் மீது நடத்தப்பட்ட சோதனையைத் தொடர்ந்து இந்த குற்றச்சாட்டு எழுந்துள்ளது. CBDT அறிக்கையில் குழுவின் பெயர் குறிப்பிடப்படவில்லை என்றாலும், அது மைக்ரோ லேப்ஸ் நிறுவனம் பற்றிய குற்றச்சாட்டுதான் என்று ஊடக வட்டாரங்கள் உறுதிப்படுத்தி இருக்கின்றன.

பெங்களூருவைத் தலைமையிடமாகக் கொண்ட இந்த மருந்து நிறுவனத்திற்கு எதிரான நடவடிக்கையில் மொத்தம் 1.20 கோடி ரொக்கமும், 1.40 கோடி மதிப்புள்ள தங்கம் மற்றும் வைர நகைகளும் "கணக்கில் காட்டப்படாதவையாக” பறிமுதல் செய்யப்பட்டன என்று, CBDT-யின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"விற்பனை மற்றும் ஊக்குவிப்பு” என்பதன் பெயரில் மருத்துவ நிபுணர்களுக்கு இலவசங்களை விநியோகித்ததற்குப் பயன்படுத்திய பணத்தை நிறுவனம் முறையாகக் கணக்கில் வைக்கவில்லை. இந்த அனுமதிக்கப்படாத செலவுகள் கம்பெனியின் சொத்து மதிப்பாகவே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுமென்று இந்திய ஐ-டி துறையின் நிர்வாக அமைப்பு தெரிவித்துள்ளது.

Doctors
Doctors Twitter

மேலும், ”இந்த ரெய்டு நடவடிக்கைகளில் ஆவணங்கள் மற்றும் டிஜிட்டல் தரவு வடிவில் கணிசமான குற்றச் சாட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுக் கைப்பற்றப்பட்டுள்ளன." என்றும் அவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

CBDT, மேலும் சில முறைகேடுகளையும் டோலோ மேக்கர்ஸ் நிறுவனம் செய்திருப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளது.

Dolo 650
சோடா வியாபாரி டூ 650 கோடி ரூபாய் ஐஸ் கிரீம் சாம்ராஜ்ஜியம் - வாடிலாலின் வியக்க வைக்கும் கதை

"தகுதியான யூனிட்டுகளுக்கு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுச் செலவினங்களை போதுமான அளவு ஒதுக்கீடு செய்யாமல் இருந்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது பிரிவு 35 (2AB) -ன் கீழ் சட்டப்படி குற்றமாகும். அது மட்டுமல்லாமல், அந்நிறுவனம் பல்வேறு வழிகளில் வரி ஏய்ப்பு செய்திருப்பதற்கான ஆதாரங்களும் கண்டறியப்பட்டுள்ளன" என்று CBDT தெரிவித்துள்ளது. IT சட்டத்தின் 194-C பிரிவின் கீழ், வரி விலக்கு (டிடிஎஸ்) விதிகளின் "மீறல்" நடந்திருப்பதையும் கண்டறிந்தறிப்பதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள்.

Dolo 650
Dolo 650 : 350 கோடி மாத்திரைகள் விற்பனையா ? |எச்சரிக்கும் மருத்துவர்கள்

இந்த டோலோ மேக்கர் மைக்ரோ லேப்ஸ் பி.லிட் கம்பெனி தான் நமக்கெல்லாம் நன்கு பரிச்சயமான டோலோ-650 வலி நிவாரணி மாத்திரையைத் தயாரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இந்தியா முழுக்க பரிச்சயமான மாத்திரையைத் தயாரிக்கும் நிறுவனத்தின் மீது நடத்தப்பட்டிருக்கும் இந்த ரெய்டு நடவடிக்கை மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Dolo 650
ஒரு வாவ் செய்தி - இந்த நாடுகளில் எல்லாம் வரி இல்லை தெரியுமா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com