இந்தியாவின் பெருமையை பறைசாற்றும் விஷயங்கள் ஏராளமாக இருக்கின்றன. பன்முகத்தன்மை, வெவ்வேறு கலாச்சாரங்கள், பல மொழிகள் என இந்தியாவின் சிறப்புகள் குறித்து நாம் நிறைய பேசியிருக்கிறோம்.
இதுவே சுற்றுலா பயணிகளை ஈர்க்க முக்கிய காரணமாகவும் இருக்கிறது. குறிப்பாக வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை வெகுவாக ஈர்க்கிறது நம் நாடு.
சுற்றுலா பயணிகளுக்காகவே இந்தியாவை பற்றிய சில தகவல்களை இந்த பதிவில் காணலாம்
இந்தியாவில் சுற்றுலா மேற்கொள்ளும்போது, ஒரு வேளை தங்க இடங்கள் கிடைக்காமல் போனால், குருத்வாராக்களில் நாம் இலவசமாகவே தங்கிக்கொள்ளலாம். குருத்வாரா என்பது சீக்கியர்களின் வழிபாட்டு தலமாகும். இங்கு எப்போதும் மக்களுக்கு தங்குவதற்கும், உணவளிப்பதற்கும் வசதிகள் செய்யப்பட்டிருக்கும்.
ஆகையால் தங்க இடமில்லை என்று கவலைகொள்ள வேண்டாம்.
கும்பமேளா இந்து சமயத்தினரால் ஒவ்வொரு பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நான்கு இடங்களில் கொண்டாடப்படுகிறது. இந்தியாவின் அலகாபாத், அரித்வார், உச்சைன் மற்றும் நாசிக் ஆகிய நான்கு ஊர்களில் உள்ள ஆற்றுப்படுகையில் நடைபெறும்.
நீங்கள் வட இந்தியாவில் சுற்றுலா மேற்கொள்ளும் நேரத்தில் கும்ப மேளா நடக்கிறது என்றால், நிச்சயம் இந்த விழாவை கண்டு வாருங்கள். அல்லது கும்பமேளாவையொட்டி உங்கள் சுற்றுலாவைத் திட்டமிடுங்கள்!
உலகின் இரண்டாவது மிக நீண்ட சாலை இணைப்பாகும் இந்திய சாலை மார்க்கங்கள். மொத்தம் 6,215,797 கிமீ தூரம் செல்கிறது இந்திய சாலைகள்.
ரோட் டிரிப் மேற்கொள்ள ஏதுவாகவும் இச்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன.
தவிர இந்தியாவிலிருந்து, மலேசியா, நேபாளம், பூட்டான் போன்ற நாடுகளுக்கு சாலை வழியாகவே செல்லலாம்.
இந்தியாவில் மொத்தம் 40 யுனெஸ்கோ உலக பாரம்பரிய தலங்கள் உள்ளன. தாஜ் மஹால், அஜந்தா மற்றும் எல்லோரா குகைகள், கஜுராஹோ, ஹம்பி இந்திய பட்டியலில் அடங்கும்.
உங்கள் டிராவல் பக்கெட் லிஸ்ட்டில் இந்த இடங்களை சேர்த்துக்கொள்ளுங்கள்.
இரண்டாம் உலகப்போரின் போது, பிரிட்டனை எதிர்த்து ஜப்பான் போரிட்டது. இந்தியாவில் நாகாலாந்தின் கோஹிமா மற்றும் மணிபூரின் இம்பால் ஆகிய இரு நகரங்களில் மட்டும்தான் உலக போர் நடந்தது.
இப்போரில் ஜப்பான் தோல்வியை தழுவியது. இரண்டாம் உலகப்போர் வரலாற்றில், இதுவே ஜப்பானின் மிகவும் மோசமான தோல்வி.
உலகின் நாங்காவது பெரிய ரயில்வே இணைப்பைக்கொண்டு உள்ளது இந்தியா. இது 70,225 கிமீ தூரம் நீள்கிறது.
ரயில் பயணங்களை வேண்டாம் என்பவர் இல்லை. இயற்கையின் அழகை ரசித்துக்கொண்டும், ரயிலில் புதிய மனிதர்களுடன் சினேகம் செய்துகொண்டும், இந்தியாவின் அழகை கண்டுகளியுங்கள்!
இந்திய மியான்மர் எல்லையில் அமைந்திருக்கிறது லாங்வா என்கிற பழங்குடி கிராமம். இந்த கிராமத்தில் கொன்யாக் நாகா என்கிற பழங்குடி மக்கள் வசித்து வருகின்ரனர். இவர்கள் அனைவருக்குமே இந்தியா மியான்மர் ஆகிய இரு நாடுகளின் குடியுரிமையும் இருக்கிறது
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust