மத்திய பிரதேசத்தில் இருக்கும் இந்த அற்புத குவாலியர் கோட்டை பற்றி தெரியுமா?

இக்கோட்டையில் ஐந்து நுழைவாயில்கள் உள்ளன. இங்குள்ள தர்பார் மண்டபம் உலகிலேயே சிறந்த மண்டபங்களுள் ஒன்று என கூறப்படுகிறது. ராஜ்புத், முகலாயர் மற்றும் இந்து உள்ளிட்ட கட்டிடக்கலை பாணிகளின் கலவையை இந்த கோட்டை பிரதிபலிக்கிறது.
Amazing facts about the magnificent Gwalior Fort in Madhya Pradesh
Amazing facts about the magnificent Gwalior Fort in Madhya PradeshCanva

குவாலியர் கோட்டை மத்திய பிரதேசத்தில் இருக்கும் ஒரு வரலாற்று சிறப்பு மிக்க பொக்கிஷமாகும். இது குவாலியரின் மிக முக்கியமான அடையாளங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்த கோட்டை அதன் பிரம்மாண்ட கட்டிடக்கலைக்கு பெயர் பெற்றது.

இந்த அதிர்ச்சியூட்டும் இந்திய கோட்டை பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்களை இங்கே தெரிந்துக்கொள்ளலாம்.

குவாலியர் கோட்டை ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையானது என நம்பப்படுகிறது! இந்த கோட்டை 8 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.

அதன் தோற்றம் தோமர் வம்சத்தில் இருந்து அறியப்படுகிறது. இக்கோட்டையில் ஐந்து நுழைவாயில்கள் உள்ளன. இங்குள்ள தர்பார் மண்டபம் உலகிலேயே சிறந்த மண்டபங்களுள் ஒன்று என கூறப்படுகிறது.

ராஜ்புத், முகலாயர் மற்றும் இந்து உள்ளிட்ட கட்டிடக்கலை பாணிகளின் கலவையை இந்த கோட்டை பிரதிபலிக்கிறது.

கோட்டையின் மற்றொரு முக்கிய அம்சம் மான் சிங் அரண்மனை. இது 15 ஆம் நூற்றாண்டில் ராஜா மான் சிங் தோமர் என்பவரால் கட்டப்பட்டது. இந்த கோட்டை வளாகத்திற்குள் குஜாரி மஹால் ஒன்று இருக்கிறது.

இது ராஜா மான் சிங் தனது ராணியான மிருக்னயனிக்காக கட்டப்பட்டது. தற்போது தொல்லியல் அருங்காட்சியகமாக மாற்றப்பட்டுள்ளது.

Amazing facts about the magnificent Gwalior Fort in Madhya Pradesh
Sankagiri Fort : வரலாற்றுடன் வசீகரத்தை வழங்கும் சங்ககிரி கோட்டை - இவ்வளவு விஷயம் இருக்கா?

அரண்மனை தவிர இங்கு விஷ்ணுவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இரட்டைக் கோயில்கள் உள்ளன. 'மாமியார் மற்றும் மருமகள்' கோயில்கள் என்று பொருள்படும் அவற்றின் பெயர் குடும்பத்தை பிரதிபலிப்பதாக இல்லை மாறாக கட்டிடக்கலை நுணுக்கத்திற்காக அப்படி கருதப்படுகிறது.

அக்பரின் அரசவை இசைக்கலைஞ்ர் தான்சேன் என்பவர் சமாதியை இக்கோட்டையில் காணலாம். கோட்டையினுள் பல நினைவுச்சின்னங்கள் காணப்படுகின்றன.

குவாலியர் கோட்டை பல்வேறு இசை விழாக்கள் மற்றும் கலாச்சார நிகழ்வுகளுக்கு இடமாக இருந்து வருகிறது. கோட்டையின் வரலாற்றையும் அதன் ஆட்சியாளர்களையும் விவரிக்கும் ஒரு ஒலி மற்றும் ஒளி காட்சி கோட்டையில் நடத்தப்படுகிறது.

மத்திய பிரதேசம் சென்றால் நிச்சயம் இந்த அற்புத குவாலியர் கோட்டைக்கு செல்லவும்!

Amazing facts about the magnificent Gwalior Fort in Madhya Pradesh
பேய் தாஜ்மஹால் : போபாலில் இருக்கும் கைவிடப்பட்ட கோட்டை - பேய் நடமாட்டம் இருக்கிறதா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com