கண்ணாடி மண்டபம், ரகசிய வழிப்பாதை - ஜெய்ப்பூர் மலைக்கோட்டையின் வரலாறு என்ன?

இங்கு தான் ஷீஷ் மஹால் எனப்படும் கண்ணாடி மண்டபம் அமைந்திருக்கிறது. இதனை திவான் ஈ காஸ் என்று அழைக்கின்றனர். இந்த மண்டபம் முழுவதுமே கண்ணாடியால் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கண்ணாடிகள் பெல்ஜியத்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவை
Amber Fort: கண்ணாடி மண்டபம், ரகசிய வழிப்பாதை - ஜெய்ப்பூர் மலைக்கோட்டையின் வரலாறு என்ன?
Amber Fort: கண்ணாடி மண்டபம், ரகசிய வழிப்பாதை - ஜெய்ப்பூர் மலைக்கோட்டையின் வரலாறு என்ன?twitter

இந்தியாவின் பாரம்பரிய சுற்றுலா தலங்களில் ஒன்று ஆம்பர் கோட்டை. முகலாய மற்றும் ராஜபுத்திர கட்டிடக்கலையின் கலவையில் கட்டப்பட்டிருக்கும் இந்த கோட்டையானது, இரண்டு அரசக் குலத்தின் வரலாற்றையும் பறைச்சாற்றும் வண்ணம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

ஆமெர் கோட்டை என்றும் அழைக்கப்படும் இந்த அரண்மனையானது, ஜெய்ப்பூரின் ஆமெர் எனும் இடத்தில், 4 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் மலையின் உச்சியில் அமைந்திருக்கிறது. இந்த கோட்டை அமைந்திருக்கும் மலையின் அடிவாரத்தில் மாவொதா ஏரி அமைந்திருக்கிறது.

இதுவே ஆம்பர் கோட்டைக்கு பிரதான நீராதாரமாக இருக்கிறது

வரலாறு

ஆம்பர் கோட்டை கச்வாகா அரசர்களால் 11 ஆம் நூற்றாண்டில் ஆளப்பட்டு வந்த பகுதி. பின்னர் 16 ஆம் நூற்றாண்டில் முகலாய அரசர் அக்பரின் காலத்தில் இந்த கோட்டை கட்டப்பட்டது.

1592ஆம் ஆண்டு அரசர் அக்பரின் படைத்தளபதிகளில் ஒருவராக இருந்த ராஜா மான்சிங் இந்த கோட்டையை முதலில் எழுப்பினார். அவருக்கு பின் வந்த அரசின் வழித்தோன்றல்கள் பலரும், இந்த கோட்டையை மேம்படுத்திவந்தனர். 1727 ஆம் ஆண்டு, கச்வாகா அரசர்கள், தங்கள் தலைநகரான ஆமெரை ஜெய்ப்பூருக்கு தந்து சென்று விட்டனர்.

2013ஆம் ஆண்டு ராஜஸ்தானில் உள்ள மற்ற 5 மலைக்கோட்டைகளுடன் சேர்த்து, ஆம்பர் கோட்டையும் யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தலமாக அறிவிக்கப்பட்டது.

ரகசிய வழிப்பாதை

பூமி தெய்வமான அம்பா மாதாவின் பெயரை தான் இந்த கோட்டைக்கு சூட்டியுள்ளனர். இந்த ஆம்பர் கோட்டையில் ஒரு ரகசிய சுரங்கப்பாதை இருக்கிறது. 2 கிலோமீட்டர் தூரம் செல்லும் இந்த சுரங்கப்பாதை அருகில் இருக்கும் ஜெய்கர் கோட்டைக்கு நம்மைக் கூட்டிச் செல்கிறது

ஆனால் தற்போது அந்த பாதை ஒரு பெரும் பாறையால் மூடப்பட்டுள்ளது. ஒரு கிலோமீட்டர் தூரம் வரை மட்டுமே சுற்றுலா பயணிகளால் இந்த சுரங்கத்துக்குள் செல்ல முடியும்

Amber Fort: கண்ணாடி மண்டபம், ரகசிய வழிப்பாதை - ஜெய்ப்பூர் மலைக்கோட்டையின் வரலாறு என்ன?
Bhangarh கோட்டை: அச்சத்தில் நடுங்க வைக்கும் அமானுஷ்யம் நிறைந்த ஒரு சுற்றுலாத்தலம்

என்னென்ன பார்க்கலாம்?

இந்த ஆம்பர் கோட்டையில் மணற்கற்கள் மற்றும் பளிங்கினால் ஆன மொத்தம் 4 முற்றங்கள், அரண்மனைகள், மண்டபங்கள், அழகிய பூக்கள் பூத்துக்குலுங்கும் தோட்டங்கள் உள்ளன.

இதன் பிரதான முற்றம், ஜலேப் சவுக் என்று அழைக்கப்படுகிறது. இங்கு தான் அரசின் படை தங்களின் பயிற்சிகளை மேற்கொண்டது.

இந்த கோட்டைக்குள் செல்ல நான்கு நுழைவாயில்கள் உள்ளன. அதில் சூரஜ் போல் எனப்படும் சூரிய வாயில் பிரதானமானது

இரண்ட்வாது முற்றத்திற்கு செல்லும் பாதை மறைத்துவைக்கப்பட்டுள்ளது.

மூன்றாவது முற்றம்

இங்கு தான் அரசரின் அரண்மனைகள், அந்தபுரங்கள் இருந்தன. இங்கு இரண்டு கட்டிடங்களும், ஒரு அழகிய தோட்டமும் இருக்கிறது.

இங்கு தான் ஷீஷ் மஹால் எனப்படும் கண்ணாடி மண்டபம் அமைந்திருக்கிறது. இதனை திவான் ஈ காஸ் என்று அழைக்கின்றனர். இந்த மண்டபம் முழுவதுமே கண்ணாடியால் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கண்ணாடிகள் பெல்ஜியத்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவை

Amber Fort: கண்ணாடி மண்டபம், ரகசிய வழிப்பாதை - ஜெய்ப்பூர் மலைக்கோட்டையின் வரலாறு என்ன?
Janjira Fort: இந்தியாவின் இந்த வீழ்த்தப்படாத கோட்டை பற்றி தெரியுமா?

ஜாஸ் மந்திர் என்று அழைக்கப்படும் திவான்-இ-காஸின் மேல் பகுதியில் கண்ணாடிகளில் மலர்கள் போன்று வடிவமைக்கப்பட்டுள்ளன. தோட்டத்தின் எதிர் பக்கத்தில் உள்ள மற்ற கட்டிடம் சுக் நிவாஸ் என்று அழைக்கப்படுகிறது, அதாவது அரசர் ஓய்வெடுக்கும் அறையாக இருந்தது. இந்த அறை தற்போது மூடப்பட்டுள்ளது.

கோட்டையின் கடைக்கோடியில், ராஜா மான் சிங்கின் அரண்மனை அமைந்திருந்தது. இங்கு ஜெனானா எனப்படும் மற்றொரு அரண்மனையும் இருந்தது. இது அரசரின் மனைவிகளுக்கான அரண்மனைகள்.

Amber Fort: கண்ணாடி மண்டபம், ரகசிய வழிப்பாதை - ஜெய்ப்பூர் மலைக்கோட்டையின் வரலாறு என்ன?
Travel: கொச்சி கோட்டை முதல் வர்க்கலா வரை - கேரளாவில் நிச்சயம் பார்க்கவேண்டிய இடங்கள்!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com