”குற்றம் நிரூபிக்கப்பட்டால்...” பாலியல் குற்றச்சாட்டுக்கு பிரிஜ் பூஷன் அளித்த பதில் என்ன?

ஜந்தர் மந்தரில் ஒரு மாதக் காலத்திற்கும் மேலாக நடந்து வந்த போராட்டமானது கடந்த ஞாயிற்றுக் கிழமையன்று பெரிதாக வெடித்தது. புதிய நாடாளுமன்ற கட்ட திறப்பு விழாவின் போது பேரணி நடத்தி பிரதமரை சந்திக்க முயற்சித்தனர் போராட்டக்காரர்கள்.
”குற்றம் நிரூபிக்கப்பட்டால்...” பாலியல் குற்றச்சாட்டுக்கு பிரிஜ் பூஷன் அளித்த பதில் என்ன?
”குற்றம் நிரூபிக்கப்பட்டால்...” பாலியல் குற்றச்சாட்டுக்கு பிரிஜ் பூஷன் அளித்த பதில் என்ன?ட்விட்டர்
Published on

தன் மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், தூக்கில் தொங்கிவிடுவேன் என கூறியுள்ளார் இந்திய மல்யுத்த வீரர்கள் சம்மேளன தலைவரும் பாஜக எம்பியுமான பிரிஜ் சிங் பூஷன்.

பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை முன்னிறுத்தி, இந்திய மல்யுத்த வீராங்கனைகள், வீரர்கள் கடந்த ஏப்ரல் 23 முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ஜந்தர் மந்தரில் ஒரு மாதக் காலத்திற்கும் மேலாக நடந்து வந்த போராட்டமானது கடந்த ஞாயிற்றுக் கிழமையன்று பெரிதாக வெடித்தது. புதிய நாடாளுமன்ற கட்ட திறப்பு விழாவின் போது பேரணி நடத்தி பிரதமரை சந்திக்க முயற்சித்தனர் போராட்டக்காரர்கள்.

அப்போது இரு தரப்பினருக்கும் இடையில் தள்ளு முள்ளு ஏற்பட்டு, போராட்டக்காரர்களான சாக்‌ஷி மலிக், சங்கீதா போகத், வினேஷ் போகத் உள்ளிட்டோரை கைது செய்து அன்றைய நாள் முடிவில் விடுவித்தனர்.

இந்நிலையில், இதுவரை தன் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்காமல் இருந்த பாஜக எம் பி பிரிஜ் பூஷன் தற்போது பேசியுள்ளார்

”குற்றம் நிரூபிக்கப்பட்டால்...” பாலியல் குற்றச்சாட்டுக்கு பிரிஜ் பூஷன் அளித்த பதில் என்ன?
கங்கை நதியில் வீசி எறியப்படும் ஒலிம்பிக் பதக்கங்கள்- முகமது அலி வழியில் மல்யுத்த வீரர்கள்?

உத்தர பிரதேசத்தில் செய்தியாளர்களை சந்தித்த பிரிஜ் பூஷன்,

“என் மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளில் ஏதாவது ஒன்று நிரூபிக்கப்பட்டாலும் நான் தூக்கில் தொங்குவேன். நான் குற்றம் செய்தவன் என நிரூபிக்க மல்யுத்த வீரர்களிடம் ஆதாரம் இருக்கிறதா? எனில் நீதிமன்றத்தில் சம்ர்ப்பியுங்கள். எனக்கான தண்டனையை நான் ஏற்கிறேன்” எனக் கூறினார்.

பிரிஜ் பூஷன் பேசியது சர்ச்சையை கிளப்பியுள்ளது

”குற்றம் நிரூபிக்கப்பட்டால்...” பாலியல் குற்றச்சாட்டுக்கு பிரிஜ் பூஷன் அளித்த பதில் என்ன?
போராடும் மல்யுத்த வீரர்கள், களம் இறங்கிய விவசாயிகள் - என்ன செய்ய போகிறது அரசு?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com