நம் வீடுகளில் தீபாவளியை கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். இந்த நேரத்தில் ஆசிய அளவில் அதிக மாசுபாடான நகரங்களின் பட்டியல் வெளியாகியிருக்கிறது. அதிர்சிகரமாக முதல் பத்து நகரங்களில் 8 இந்திய நகரங்கள் இடம் பெற்றிருக்கின்றன. தொடர் மாசு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளால் டெல்லி இந்த பட்டியலில் இடம்பெறவில்லை.
உலக காற்று தர இன்டெக்ஸ் வெளியிட்டுள்ள பட்டியலில் ஹரியானா மானியத்தை குர்கிராம் முதலிடம் பிடித்துள்ளது. மாசுபாடு குறித்த தரவுகளை மக்களுக்கு எடுத்துரைப்பதன் மூலம் காலநிலை மாற்றம் மற்றும் புவி வெப்பமயமாதல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த முயன்று வருகின்றனர்.
காற்றுமாசானது AQI என்ற அலகால் குறிப்பிடப்படுகிறது. 0 முதல் 50 AQI சாதாரணமாக கருதப்படுகிறது.
51 முதல் 100 வரை மிதமானதாகவும், 101 முதல் 150 எளிதில் பாதிக்கப்படுபவர்களுக்கு தீங்கு விளைவிப்பதாகவும் வகைப்படுத்தப்படுகிறது.
151 முதல் 200 சுகாதாரத்திற்கு தீங்கானது.
201 முதல் 300 அதிக தீங்கானது.
300 முதல் 500 மனித ஆரோக்கியத்தில் பாதிப்பை ஏற்படுத்தும்.
இப்போது இந்திய நகரங்களின் அளவீடுகளை பார்க்கலாம்,
குர்கிராம் (ஹரியானா) - 679
தாரூஹிரா (ஹரியானா) - 543
முஸாவர்பூர் (பீகார்) - 316
தாள்கதூர், லக்னோ - 298
DRCC அனந்தபூர், பேகுசரி - 269
போபால் சாருக்கா, திவாஸ் - 266
கடக்கப்படா, கல்யான் - 256
தர்ஷன் நகர், சாப்ரா - 239
இவை தவிர சீனா மற்றும் மங்கோலியா நாடுகளை சேர்ந்த நகரங்கள் இடம் பெற்றுள்ளன.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust