தீபாவளி இந்தியா முழுவதும் பரவலாக கொண்டாடப்படும் இந்துப் பண்டிகையாகும். இந்த விழாவில் புத்தாடை அணிவதும், பட்டாசு வெடிப்பதும், இனிப்புகள் பரிமாறுவதும் முக்கிய கொண்டாட்டங்கள்.
ஒவ்வொரு தீபாவளியும் நமக்கு எப்போதும் நிலைத்திருக்கக் கூடிய நினைவுகளைத் தருபவை. தசரா முடிந்த 10 நாட்களும், ஏன் சிலருக்கு அதற்கு முன்னரே தீபாவளி தயாரிப்புகள் தொடங்கியிருக்கும்.
இந்த கொண்டாட்ட மனநிலையுடன் இந்த கட்டுரையை தொடர்ந்து வாசியுங்கள். தீபாவளி எனும் தீபங்களின் திருவிழா மொத்த உலகுக்கும் சிறப்பானதாக அமைய இங்கு சில வழிகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன!
தீபாவளி என்றாலே நம் நினைவிற்கு வருவது பட்டாசுகள் தான். இந்த பட்டாசு சத்தம் நமக்கு ஒருவித பரவசத்தைக் கொடுக்கும். ஆனால் அது நம்முடன் இணைந்து வாழும் பறவைகளுக்கும் விலங்குகளுக்கும் பெரிய அளவில் தீங்குகளை விளைவிக்கும். அதிக ஒலி எழுப்பக் கூடிய பட்டாசுகள் ஒலி மாசை ஏற்படுத்தும்.
ஒரு சத்தமான பட்டாசு அதனை வெடிக்கும் ஒரு நபருக்கு மட்டுமே மகிழச்சியை ஏற்படுத்தும். ஆனால் சுற்றியிருக்கும் ஐந்தறிவு ஜீவன்கள், வயதானவர்கள் என பலருக்கு அது ஒலி மாசுதான்.
ஒரே நேரத்தில் பலர் இணைந்து இப்படி ஒலி மாசை ஏற்படுத்துவது நம் சுற்று சூழலுக்கு எந்த வகையில் சிறப்பானதாக அமையும்.
வான வேடிக்கைகள் கண்களுக்கு விருந்தாக அமையலாம். ஆனால் வானுக்கு? புவி வெப்பமயமாதல் மற்றும் காலநிலை மாற்றம் போன்ற பிரச்னைகள் குறித்து நிச்சயம் பேசியாக வேண்டிய கட்டாயம் இந்த தலைமுறையினருக்கு இருக்கிறது. எனில் பட்டாசுகள் வேண்டாமா? சத்தமும், நெருப்பும், புகையுமில்லாமல் என்ன தீபாவளி என சிந்திக்கிறீர்களா? பசுமை தீபாவளியைக் கொண்டாட சில வழிகள் இதோ...
அதிக ஒலி மற்றும் புகையை வெளிப்படுத்தாத பட்டாசுகளை தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். குழந்தைகளுக்கு மட்டும் பட்டாசுகளை வெடிக்கக் கொடுக்கலாம். கண்கவரும் வண்ண வெடிகளை தனித்தனியாக போட்டிப்போட்டு வெடிக்காமல் சமூகமாக இணைந்து ஒருமுறை வெடித்து அனைவரும் ரசிக்கலாம்.
வீடுகளில் அகல் விளக்கில் எண்ணெயுடன் தீபம் ஏற்றுவதற்கு பதிலாக மெழுகுவர்த்தி ஏற்றுவதைத் தவிர்க்கவும். மெழுகு எரியும் போது வெளிப்படும் புகை நமக்கும் சுற்று சூழலுக்கும் தீங்கு விளைவிக்கும்.
செயற்கை முறையில் கலர் செய்யப்பட்ட அகல் விளக்குகளையும் தவிர்க்கலாம். மண் அகல் விளக்குகளை பயன்படுத்தலாம்.
வீடுகளை ஒளியால் நிரப்ப சாதாரண குண்டு பல்புகளுக்கு பதிலாக எல்.இ.டி பல்புகளைப் பயன்படுத்தினால் மின்சாரத்தை கட்டுப்படுத்தலாம்.
தீபாவளிப் பரிசாக மரக்கன்றுகள், உள்வீட்டுத் தாவரங்கள் ஆகியவற்றைக் கொடுப்பதன் மூலம் சுற்றுசூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தலாம்.
உள்ளூரில் தயாரிக்கப்பட்ட பொருட்களை உங்கள் அன்புக்குரியவர்களுக்கு பரிசளிப்பதன் மூலம் உள்ளூர் சந்தையை ஊக்குவிக்க முடியும். கையால் தயாரிக்கப்பட்ட ஆர்கானிக் டீ கப்புகள், உள்ளூரில் தயாரிக்கப்பட்ட குக்கீஸ் மற்றும் உள்ளூர் மக்களால் தயாரிக்கப்படும் பிற பொருட்கள் என பலவும் ஒரு நல்ல பரிசுக்கான யோசனைகள் ஆகும். இந்த தீபாவளி பசுமை தீபாவளியாக இருக்கட்டும்!
தீபாவளியன்று வீட்டில் கோலமிட்டு அலங்காரம் செய்வோம். ஆனால் இந்த தீபாவளிக்கு செயற்கை வண்ணங்கள் கொண்ட ரங்கோலிக்கு பதிலாக இயற்கையான வண்ணங்களைப் பயன்படுத்தலாம்.
இன்னும் கிரியேடிவாக அரிசி, மஞ்சள், பருப்பு, மலர்களைப் பயன்படுத்தி கோலமிடலாம்.
தீபாவளி ஷாப்பிங்கிலும் இனிப்புகள் வாங்குவதிலும் பரிசுகள் வாங்குவதிலும் நெகிழிப்பையிக்கு நிச்சயம் நோ சொல்லிவிடுங்கள். நம் உலகம் நமக்கானது மட்டுமல்ல இங்கு வாழும் அனைத்து உயிர்களுக்குமானது!
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust