சந்திரயான் 3: விமர்சித்த பிபிசி செய்தியாளர்- ஆனந்த் மஹிந்திரா பதில்! வைரலாகும் பழைய வீடியோ

மிகவும் மோசமான உள்கட்டமைப்பு வசதிகளும், வறுமையின் பிடியில் நாடே சிக்கித் தவிக்கும் வேலையில், இத்தனை கோடி செலவு செய்து நிலவுக்கு விண்கலத்தை இந்தியா அனுப்பவேண்டுமா?
சந்திரயான் 3: விமர்சித்த பிபிசி செய்தியாளர்- ஆனந்த் மஹிந்திரா பதில்! வைரலாகும் பழைய வீடியோ
சந்திரயான் 3: விமர்சித்த பிபிசி செய்தியாளர்- ஆனந்த் மஹிந்திரா பதில்! வைரலாகும் பழைய வீடியோtwitter

இந்தியாவின் சந்திரயான் திட்டத்தை விமர்சித்த பிபிசி செய்தி தளத்திற்கு பதிலளித்திருக்கிறார் தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா.

இந்தியாவின் சந்திரயான் 3 விண்கலம் நேற்று நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக சாஃப்ட் லேண்ட் செய்தது. இதன் மூலம் வரலாற்று சாதனை படைத்துள்ளது இந்தியா.

நிலவில் தரையிறங்கிய விக்ரம் லேண்டர், அதன் ரோவர் மூல ஆராய்ச்சிகளை தொடங்கியிருக்கிறது.

விக்ரம் லேண்டரின் தரையிறங்குவதை பார்க்க உலகமே நேற்று திரைக்கு முன் கூடியிருந்தது. வெற்றிகரமாக தரையிறக்கப்பட்ட பிறகு பலரும் வாழ்த்துமழை பொழிந்தும், தங்களின் மகிழ்ச்சிகளையும் பகிர்ந்து வந்தனர்.

இதற்கிடையில், பிபிசி தளத்தின் பழைய செய்தி காணொளி ஒன்றும் ட்விட்டரில் பரவியது.

அதில் செய்தி வாசிப்பாளர், சந்திரயான் திட்டத்தையும், இந்தியாவின் பொருளாதார சூழலையும் விமர்சிப்பது தெரிகிறது.

பேசப்படும் வீடியோவில், “மிகவும் மோசமான உள்கட்டமைப்பு வசதிகளும், வறுமையின் பிடியில் நாடே சிக்கித் தவிக்கும் வேலையில், இத்தனை கோடி செலவு செய்து நிலவுக்கு விண்கலத்தை இந்தியா அனுப்பவேண்டுமா? “ என்று கேட்கிறார் செய்தியாளர்

சந்திரயான் 3: விமர்சித்த பிபிசி செய்தியாளர்- ஆனந்த் மஹிந்திரா பதில்! வைரலாகும் பழைய வீடியோ
Rishi Sunak: "இந்தியர்கள் திறனற்றவர்கள்" சொன்ன முன்னாள் பிரதமர்- ஆனந்த் மஹிந்திரா பதில்

இந்த காணொளி வைரலானதை அடுத்து இந்திய தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிலளித்திருக்கிறார்.

எங்கள் நாட்டில் நிலவும் வறுமைக்கு பெருங்காரணம், நூற்றாண்டு கால காலனித்துவ ஆட்சி தான்.

எங்களிடம் இருந்து சொத்துக்கள் திருடிச் செல்லபட்டது. கோஹினூர் வைரம் போன்ற பொக்கிஷங்கள் மட்டுமல்லாது எங்களின் தன்னம்பிக்கையையும் நீங்கள் களவாடிச் சென்றீர்கள்" என்றார்

மேலும், “காலனித்துவத்தின் மிக நயவஞ்சகமான தாக்கம், அதில் பாதிக்கப்பட்டவர்களை அவர்களின் தாழ்வு மனப்பான்மையை நம்ப வைப்பதாகும்.

அதனால்தான் கழிப்பறைகள் மற்றும் விண்வெளி ஆய்வு ஆகிய இரண்டிலும் முதலீடு செய்வது முரண்பாடானதல்ல.” என்றும் சாடியிருந்தார்.

இந்த சந்திரயான் மிஷன் இந்தியர்களின் தன்னம்பிக்கையை, ஆற்றல்களை மீட்டெடுக்க உதவும் கருவி எனவும் குறிப்பிட்டிருந்தார் ஆனந்த் மஹிந்திரா.

இவரது ட்வீட் வைரலாகி வருகிறது

சந்திரயான் 3: விமர்சித்த பிபிசி செய்தியாளர்- ஆனந்த் மஹிந்திரா பதில்! வைரலாகும் பழைய வீடியோ
Anand Mahindra: அம்பானி, சுனிதா வில்லியம்ஸுடன் Selfie எடுத்த தொழிலதிபர் - வைரல் புகைப்படம்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com