ஆனந்த் மஹிந்திரா: ஹனிமூனில் செஸ் விளையாடிய தொழிலதிபர் - இணையத்தில் வைரலாகும் புகைப்படம்

இந்தியாவின் மிக பெரிய தொழிலதிபரான ஆனந்த் மஹிந்திரா தனது ஹனிமூனில் செஸ் விளையாடிய புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்திருந்தார். இந்த புகைப்படம் தற்போது நெட்டிசன்களை கவர்ந்துள்ளது.
ஆனந்த் மஹிந்திரா: ஹனிமூனில் செஸ் விளையாடிய தொழிலதிபர் - இணையத்தில் வைரலாகும் புகைப்படம்
ஆனந்த் மஹிந்திரா: ஹனிமூனில் செஸ் விளையாடிய தொழிலதிபர் - இணையத்தில் வைரலாகும் புகைப்படம் ட்விட்டர்
Published on: 

மஹிந்திரா குழுமத்தின் தலைவரான ஆனந்த் மஹிந்திரா எப்போதும் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருப்பவர். தன்னை ஈர்க்கும் விஷயங்களை, ஆச்சரியப்படுத்தும் புதிய தகவல்களை அடிக்கடி பகிர்வார். அவரது சோசியல் மீடியா போஸ்ட்டிற்காக இளைஞர்கள் பலரும் ஆவலாக காத்திருப்பார்கள்.

அவர் அவ்வப்போது தனது இளமைக்கால அனுபவங்களையும் பகிர்வார். அந்த பதிவுகளும் இணையத்தில் வைரலாகும்.

இந்நிலையில், தான் செஸ் விளையாடும் புகைப்படம் ஒன்றினை ட்விட்டரில் பகிர்ந்திருந்தார். அவர் தன் ஹனிமூனின் போது செஸ் விளையாடியதாகவும் தனியே விளையாடியதாகவும் தெரிவித்திருந்தார்.

இது குறித்து அவர் கூறியபோது தற்போதெல்லாம் ஆன்லைனில் கம்ப்யூட்டருடன் தான் செஸ் விளையாடுவதாக கூறினார். தனது செஸ் விளையாடும் திறனையும் மேம்படுத்தி வருவதாக தெரிவித்தார்.

ஆனந்த் மஹிந்திரா: ஹனிமூனில் செஸ் விளையாடிய தொழிலதிபர் - இணையத்தில் வைரலாகும் புகைப்படம்
"ஃபோன் லேப்டாப்பை தூக்கி வீசுங்கள்" தூக்கமின்மைக்கு ஆனந்த் மஹிந்திரா மனைவியின் அட்வைஸ்!

தான் பகிர்ந்த புகைப்படம் கேமராவுக்காக விளையாடுவதுபோல நடித்தது என்பதையும் அந்த ட்வீட்டில் கூறியிருந்தார். ஆனந்த் மஹிந்திரா பகிந்த இப்புகைப்படம், இணையவாசிகளை, குறிப்பாக செஸ் ஆர்வலர்களை கவர்ந்தது.

ஜூலை 20ஆம் தேதி சர்வதேச செஸ் தினம் அனுசரிக்கப்படுகிறது. அதனையொட்டி ஆனந்த் மஹிந்திரா இந்த புகைப்படத்தை பகிர்ந்திருந்தார்

ஆனந்த் மஹிந்திரா: ஹனிமூனில் செஸ் விளையாடிய தொழிலதிபர் - இணையத்தில் வைரலாகும் புகைப்படம்
Monday Motivation : "இதை செய்தால் திங்கள் கிழமையும் அழகாக இருக்கும்!” - ஆனந்த் மஹிந்திரா

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.