தொழிலதிபர் ஆனந்த் மஹிந்த்ரா, தனது ட்விட்டர் பக்கத்தில் யானையின் வீடியோ இன்றை பகிர்ந்து, தனது பின்தொடர்பவர்களுக்கு அட்வைஸ் செய்துள்ளார்.
இந்தியாவின் மிகப்பெரிய தொழிலதிபர் ஆனந்த் மஹிந்த்ரா. சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது, மோட்டிவேஷனல் வீடியோக்கள், ஃபோட்டோக்களை பகிர்ந்து மக்களுக்கு அறிவுரைகள் வழங்குவார்.
இவரது வித்தியாசமான, அறிவுப்பூர்வமான போஸ்களுக்காகவே எல்லா வயதினரும் இவரை பின்தொடர்கின்றனர். குறிப்பாக இளைஞர்கள்.
இந்நிலையில், ஆனந்த் மஹிந்திரா தன் ட்விட்டர் பக்கத்தில் கடந்த ஆகஸ்ட் 4ஆம் தேதி வீடியோ ஒன்றினை பகிர்ந்திருந்தார்
அது ஒரு யானையின் வீடியோ. பல ஆண்டுகளுக்கு முந்தையது தான். என்றாலும், அந்த வீடியோ நமக்கு எவ்வளவு பெரிய பாடத்தை கற்றுத்தருகிறது என்பதை விளக்கியிருந்தார் ஆனந்த் மஹிந்த்ரா.
பகிரப்பட்ட வீடியோவில், யானை ஒன்று முள் கம்பி வேலியை தாண்டி வர முயற்சி செய்வது தெரிகிறது. முதலில் தனது முன்னங்காலால் அந்த கம்பியை தொட்டு தொட்டு பார்க்கிறது யானை. முட்கள் தன்னை காயப்படுத்தாமல் இருக்கும் வண்ணம், அதனை கடந்து வரவேண்டும். மேலும் கம்பிகளில் மின்சாரம் பாயலாம். அதனால் யானைக்கு காயங்கள் ஏற்படலாம்.
சில வினாடிகள், முயற்சித்த யானை, லாவகமாக கம்பி வேலிகளை கட்டியிருக்கும் கம்பத்தை தனது காலால் சாய்க்கிறது.
பின்னர் எளிதாக அந்த இடத்தை கடக்கிறது
இந்த வீடியோவை பகிர்ந்து தொழிலதிபர், இந்த சம்பவம் நமக்கு மூன்று முக்கிய பாடங்களை கற்பிக்கிறது என்றார்.
"தடைகளை எவ்வாறு தகர்ப்பது என்பதற்கு ஒரு யானை கற்றுத்தரும் மாஸ்டர்கிளாஸ்.
முதலில் உங்கள் முன்னால் இருக்கும் தடங்கல் எவ்வளவு சவாலானது என்பதை சோதனை செய்யுங்கள். அது எந்த இடத்தில் வலுவற்றதாக இருக்கிறது என்பதை கண்டுபிடிக்கவேண்டும்.
உங்கள் அனைத்து வலுவையும் பயன்படுத்தி அந்த இடத்தில் மெதுவாக அழுத்தம் கொடுங்கள்
தடையை உடைத்து தன்னம்பிக்கையோடு முன்னேறுங்கள்
ஆனந்த் மஹிந்த்ராவின் இந்த ட்விட்டர் பதிவு வைரலாகி 12 ஆயிரத்துக்கும் அதிகமான லைக்குகள், பல்லாயிரம் ரிட்வீட்களை பெற்று வருகிறது
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust