T20 WC : இந்திய அணி தோல்விக்கு ஆனந்த் மஹிந்திராவின் ஆறுதல் ட்வீட்!

இந்திய ரசிகர்கள் அணியையும் அணி வீரர்களையும் டிரால் செய்தும், திட்டியும் போஸ்ட்கள் பகிர்ந்து வந்தனர். இந்நிலையில், தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திராவும் ட்வீட் செய்திருந்தார்.
Anand Mahindra
Anand MahindraTwitter

இந்திய அணி இங்கிலாந்திடம் அரையிறுதிப் போட்டியில் தோற்றதை அடுத்து, ஆனந்த் மஹிந்திரா ட்வீட் செய்துள்ளார்.

நேற்று நடந்த டி20 உலகக்கோப்பை இரண்டாவது அரையிறுதியில் இந்தியா இங்கிலாந்து அணிகள் மோதின. இதில் இந்தியாவை வீழ்த்தி இங்கிலாந்து அணி இறுதிப்போட்டிக்கு சென்றது.

நாக் அவுட் போட்டி என்பதால், தோல்வியடைந்த இந்திய அணி தொடரிலிருந்து வெளியேறியுள்ளது. நேற்றைய போட்டிக்கு இந்திய ரசிகர்கள் மட்டுமல்லாது, மற்ற நாட்டின் ரசிகர்கள் மத்தியிலும் மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. இந்திய அணி வென்றால் இறுதிப்போட்டியில் பாகிஸ்தானுடன் மோதும் என்பதால் இந்த எதிர்பார்ப்பு சற்று அதிகமாகவே இருந்தது.

மேலும், கடைசியாக முன்னாள் கேப்டன் தோனியின் தலைமையில் 2013ல் தான் இந்திய ஆடவர் கிரிக்கெட் அணி ஐசிசி கோப்பையை வென்றது. அதன் பிறகு எந்த ஐசிசி தொடரிலும் இந்திய அணி வெல்லவில்லை.

கோலி
கோலிடிவிட்டர்

தொடர்ந்து இந்திய அணியின் கேப்டனாக இருந்த விராட் கோலியும் தனது பதவியை விட்டு விலகினார். இவருக்கு பிறகு ரோஹித் சர்மா இந்திய அணியின் கேப்டனாக பொறுப்பேற்றார். பயிற்சியாளராக ரவி சாஸ்திரி இருந்த நிலையில், முன்னாள் இந்திய வீரர் ராகுல் டிராவிட் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில், 20 ஓவர் உலகக்கோப்பை போட்டிகள் ஆஸ்திரேலியாவில் நடைபெற்றது. அதிக புள்ளிகளுடன் இந்திய அணி அரையிறுதிக்கு தேர்வானது. இரண்டு அரையிறுதிப் போட்டிகள் நடைபெற்ற நிலையில், முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி நியூசிலாந்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு சென்றது. நேற்று இந்தியா இங்கிலாந்து அணிகள் மோதின.

Anand Mahindra
Anand Mahindra: டிவிட்டரில் 10 மில்லியன் followers - நன்றி சொல்லி பகிர்ந்த போஸ்ட் வைரல்

இந்திய அணி 168 ரன்கள் எடுத்திருந்தது. இரண்டாவதாக களமிறங்கிய இங்கிலாந்து அணி, எந்த விக்கெட் இழப்புமின்றி 170 ரன்களை எடுத்து இறுதிக்குள் நுழைந்தது. இந்தியா தோல்வியடைந்ததை அடுத்து, கேப்டன் ரோஹித் சர்மா மைதானத்தில் கண்ணீர் விட்டு அழுத புகைப்படங்கள் வைரலாகின.

இந்திய ரசிகர்கள் அணியையும் அணி வீரர்களையும் டிரால் செய்தும், திட்டியும் போஸ்ட்கள் பகிர்ந்து வந்தனர். இந்நிலையில், தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திராவும் ட்வீட் செய்திருந்தார். இந்திய அணிக்கு ஆறுதல் கூறும் வகையில் தனது ட்வீட்டில் பேசியிருந்தார்.

"தோல்வியடைந்தது வலிக்கவில்லை. தோல்வியடைந்த விதம் தான் வருத்தமளிக்கிறது. இருந்தாலும், நாம் மீண்டும் எழுந்து நிற்க இதை மற்றுமொரு வாய்ப்பாகவே பார்க்கலாம்" என்று பதிவிட்டிருந்தார்.

இந்திய அணி தோல்வியடைந்த பிறகு, டிவிட்டரில், தோனி, ஓரியோ, விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகிய வார்த்தைகள் டிரெண்டிங்கில் இருந்தது குறிப்பிடத்தக்கது

Anand Mahindra
Rishi Sunak: "இந்தியர்கள் திறனற்றவர்கள்" சொன்ன முன்னாள் பிரதமர்- ஆனந்த் மஹிந்திரா பதில்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com