கடலில் மாயமான பெண்ணை தேட கோடிகளில் செலவு, கடற்படை வருகை - என்ன நடந்தது?

கடலுக்குள் மனைவி இழுத்துச் செல்லப்பட்டுவிட்டாரோ என்ற சந்தேகமும் பயமும் எழ, துரிதமாக செயல்பட்டு, அருகில் உள்ள மூன்று நகர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்
navy
navycanva
Published on

ஐதராபாத்தில் உள்ள மருந்து நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார் சீனிவாச ராவ். கடந்த திங்களன்று முதலாண்டு திருமண நாளை கொண்டாடுவதற்காகச் சொந்த ஊரான விசாகப்பட்டினத்துக்கு வந்திருந்தார்.


மனைவி சாய் பிரியாவுடன் கடலோர மலைப்பகுதிக் கோயிலான சிம்மாச்சலம் கோயிலுக்குச் சென்றார். பின்னர், மாலையில் விசாகப்பட்டினம் ஆர்.கே. பீச் கடற்கரைக்குச் சென்றனர், தம்பதியர். கடற்கரையில் சில மணி நேரம் இரண்டு பேரும் பொழுதைக் கழித்தனர். பின்னர் கடல் நீர்ப் பகுதிக்குள் சென்றனர். அங்கு விளையாடிக்கொண்டு இருந்தபோது சீனிவாசராவுக்கு செல்பேசியில் முக்கியமான தகவல்கள் வந்துள்ளன.


அவற்றுக்கு அங்கிருந்து பதில் அனுப்ப முடியாததால், சீனிவாச ராவ் சற்று தள்ளி வந்து பதில்களை அனுப்பிக்கொண்டு இருந்தார். பதில் அனுப்பிய பிறகு, அவர்கள் இருந்த பகுதிக்கு சென்று பார்த்த போது அவரது மனைவி காணவில்லை. சுற்றிலும் தேடி அலைந்து பார்த்தும், உடன் வந்த மனைவியை அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை.

கடலுக்குள் மனைவி இழுத்துச் செல்லப்பட்டுவிட்டாரோ என்ற சந்தேகமும் பயமும் எழ, துரிதமாக செயல்பட்டு, அருகில் உள்ள மூன்று நகர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். கிட்டத்தட்ட இரவு நேரத்தை நெருங்கிவிட்டதால், உடனடியாக அவரைத் தேடமுடியாத நிலை ஆகிவிட்டது என்று காவல்நிலையத்தினர் கூறிவிட்டார்கள். ஆனால் அடுத்த நாளான செவ்வாய் காலையில் தேடும் பணி முடுக்கிவிடப்பட்டது.

முடுக்கிவிடப்பட்டது என்றால் சும்மா இல்லை... இந்தியக் கடற்படையின் கிழக்குப் பிராந்தியக் கட்டளை மையத்தின் ஹெலிகாப்டர்கள், கடலோரக் காவல் படையின் சுற்றுக்காவல் கப்பல்களும் தேடுதலில் ஈடுபடுத்தப்பட்டன. காலையில் தொடங்கிய தேடுதல் பணி, இரவு 8.30வரை நீடித்தது. ஆனால், காணாமல்போன சாய் பிரியாவைப் பற்றிய எந்தத் துப்பும் கிடைக்கவில்லை.

தொடர்ந்து மூன்று நாட்கள் தேடிய பின்னரும் சாய் பிரியாவை கடற்படை, கடலோரக் காவல்படை, காவல்துறையினர் ஏமாற்றம் அடைந்தனர்.

காவல்துறையினர் வழக்கம்போல சமூக ஊடகத்தில் சாய்பிரியாவைக் கண்காணிக்க ஆரம்பித்தனர். அவர்களின் எதிர்பார்ப்பு வீண் போகவில்லை. காணாமல்போன சாய் பிரியா ஆந்திர மாநிலம் நெல்லூருக்குப் போய்விட்டதாக பல சமூக ஊடகப் பக்கங்களில் தகவல்கள் வெளியாகின. அதுகுறித்து காவல்துறை உடனடியாக கருத்து கூறவில்லை. காரணம், அவர்கள் முறைப்படி அந்தத் தகவலை உறுதிப்படுத்துவதற்காகக் காத்திருந்தனர்.

ஒருவழியாக, 21 வயது சாய் பிரியா தன் பால்ய காலத்து சினேகிதனுடன் பெங்களூருவில் இருப்பது உறுதியானது. அந்தப் பெண் தன் பெற்றோருக்கு குறுந்தகவல் ஒன்றை அனுப்பியுள்ளார்; அதில், தான் பத்திரமாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார். இந்தத் தகவலை சாய் பிரியாவின் பெற்றோர் காவல்துறையிடமோ சீனிவாசராவிடமோ அவர்களாகவே தெரிவிக்கவில்லை.

தகவல் வெளியே கசிந்து காவல்துறையினர் விசாரித்தபோதே அதைச் சொல்லியிருக்கின்றனர். தங்கள் மகளைத் தேடி கப்பற்படை, கடலோரக் காவல் படை, காவல்துறை என பகீரதப் பிரயத்தனங்கள் மேற்கொள்ளப்பட்டதும், அதைப் பற்றி உள்ளூர் ஊடகங்களில் அடுத்தடுத்து மூன்று நாள்கள் பரபரப்பாக செய்திகள் வெளியாகியும், அதைப் பற்றி எந்த அக்கறையும் அவர்களிடம் இல்லை!

கணவனுடன் கடற்கரை நீரில் விளையாடிக்கொண்டு இருந்த சாய்பிரியா, எப்படி பெங்களூருவுக்குத் தப்பியோடினார்? அவரே போனாரா அல்லது அவருடைய காதலர் கூட்டிச் சென்றாரா? அதற்காகவே அவரை விசாகப்பட்டினத்துக்கு சாய்பிரியா வரவழைத்திருந்தாரா என விசாரித்துவருகிறோம் என்று ஊடகங்களிடம் தெரிவித்தார், மூன்று நகர் காவல்நிலைய அதிகாரி கொரடா இராம ராவ்.

இந்த விவகாரம் வெறும் காவல்துறை தேடுதல் என்பதாக மட்டுமில்லாமல், நகரத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லையா என்பதாகவும் பிரச்னையானது.

சீனிவாசராவ்- சாய்பிரியா வசித்துவரும் என்.ஏ.டி. ஜங்சன் பகுதியைச் சேர்ந்தவரும் மாநகராட்சி துணைமேயருமான ஜிய்யானி ஸ்ரீதர், எப்படியோ சாய்பிரியாவைக் கண்டுபிடித்துவிட்டோம்; என்ன அவரைத் தேடுவதற்காக ஹெலிகாப்டர், கப்பல்களை ஈடுபடுத்தியதற்காக அரசாங்கம் கிட்டத்தட்ட ஒரு கோடி ரூபாயைச் செலவிட்டுள்ளது என்று கூறினார்.

நல்ல வேளை, சாய் பிரியாவைத் தண்ணீருக்குள் தேடுவதற்காக இன்னும் ஒருசில கோடிகளைக் கொட்டாமல் தப்பித்தது அரசாங்கம் என சுய எள்ளலுடன் சொல்கிறார்கள், நகர காவல்துறையினர்.

navy
டைட்டானிக் போல பனிப்பாறையில் மோதிய சொகுசு கப்பல் - பயணிகள் நிலை என்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com