இந்தியரின் புகைப்படத்தை பாராட்டிய ஆப்பிள் நிறுவன சிஇஓ - ஏன் தெரியுமா?

உண்மையிலேயே டிம் குக் பகிர்ந்த படம் ஐபோனில் தான் எடுக்கப்பட்டது என பல செய்தி வலை தளங்கள் உறுதி செய்கின்றன.
Apple CEO Tim Cook
Apple CEO Tim CookTwitter
Published on

சமீபத்தில் ஒரு புகைப்படக் கலைஞரால் எடுக்கப்பட்ட ஒரு எறும்பு முகத்தின் புகைப்படம் ஒட்டுமொத்த உலக இணையத்தையும் ஈர்த்தது. அதே போல தற்போது ஒரு இந்தியரின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி கொண்டு இருக்கிறது.

உலகின் முன்னணி டெக்னாலஜி நிறுவனமான ஆப்பிளின் முதன்மைச் செயல் அதிகாரியாக டிம் குக் செயல்பட்டு வருகிறார். அவர் மும்பையைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் ஒருவரின் புகைப்படத்தை தன் டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து வெகுவாகப் பாராட்டியுள்ளார்.

அந்தப் புகைப்படத்தைப் பகிர்ந்து "தீபாவளி ஏன் ஒளிகளின் திருவிழாவாக இருக்கிறது என்பதை இப்படம் விளக்குகிறது" என டிவிட்டர் பதிவிலேயே பாராட்டினார். மேலும் தீபாவளி கொண்டாடும் அனைவருக்கும் என் வாழ்த்துகள் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

அதே பதிவில் "#ShotoniPhone by Apeksha Maker" எனப் புகைப்படம் எடுத்தவரின் பெயரையும் பகிர்ந்து இருந்தார். டிம் குக்கின் பதிவைக் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் பார்க்கலாம்.

உண்மையிலேயே டிம் குக் பகிர்ந்த படம் ஐபோனில் தான் எடுக்கப்பட்டது என பல செய்தி வலை தளங்கள் உறுதி செய்கின்றன. அதோடு அபெக்ஸா மேகரும் டிம் குக்குக்கு நன்றி தெரிவித்து தன் இன்ஸ்டாகிராம் பதிவிலும் #ShotoniPhone என்பதைக் குறிப்பிட்டு இருந்தார்.

அபெக்ஸா மார்கர் 'தி ஹவுஸ் ஆஃப் பிக்ஸல்ஸ்' என்கிற நிறுவனத்தை நடத்தி வருகிறார். இதற்கு முன் அவர் பல பெரிய பிராண்டுகளோடும், பல சினிமா நடிகர், நடிகைகளோடும் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.

Apple
Technology company
Apple Technology companyTwitter

ஹவுஸ் ஆஃப் பிக்ஸல்ஸ் நிறுவனத்தின் இன்ஸ்டாகிராம் பக்கத்தைப் பார்த்தால் இந்தி மொழி சினிமாவின் முன்னணி நடிகைகளாக தீபிகா படுகோன், கரீனா கபூர், அனுஷ்கா ஷர்மா ஆகியோரின் படங்களைப் பார்க்க முடிகிறது.

எனக்குள் இருக்கும் விஷயங்களுக்கான வடிகால் தான் புகைப்படம் எடுப்பது. மேலும் அது என்னை வெளிப்படுத்தக் கூடியது. புகைப்படம் எடுப்பது என்னை அப்படியே உள்வாங்கிக் கொள்கிறது எனவே அதை நான் ரசிக்கிறேன் என அபெக்ஸா மேகர் கடந்த 2017ஆம் ஆண்டு ஒரு பத்திரிகை பேட்டியில் கூறி இருந்தார். வாழ்த்துகள் அபெக்ஸா.

Apple CEO Tim Cook
ஆப்பிள் நிறுவனத்தில் சேர ஆசையா? அப்ப இந்த 4 குணங்கள் அவசியம்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com