செங்கல் போல கட்டிவைக்கப்பட்ட 50 கோடி பணம், சிக்கிய வங்காள அமைச்சரின் தோழி - என்ன நடந்தது?

அர்பிதாவின் அடுக்குமாடிக் குடியிருப்பில் நேற்று மாலை சோதனை நடத்தப்பட்டது. இந்தப் பணம் முகர்ஜியால் விரைவில் எடுத்துச் செல்லப்படவிருந்த நேரத்தில் அமலாக்கத்துறை சோதனை செய்து பணத்தைக் கைப்பற்றியதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
arpita mukherjee
arpita mukherjeeTwitter
Published on

வங்காள அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜியின் நெருங்கிய உதவியாளரான அர்பிதா முகர்ஜியின் இரண்டு அடுக்குமாடிக் குடியிருப்புகளிலிருந்து இரண்டு நாட்களில் ரூ.50 கோடி ரொக்கத்தை அமலாக்கத் துறை இயக்குநரகம் (ED) கண்டுபிடித்தது. கடந்த வாரம் சோதனை நடத்தப்பட்ட முதல் அடுக்குமாடிக் குடியிருப்பில் ரூ.21.90 கோடியும், அவரது மற்றொரு வீட்டில் நேற்று இரவு ரூ.27.90 கோடியும் கைப்பற்றப்பட்டது.

கொல்கத்தாவின் பெல்காச்சியா பகுதியில் உள்ள அர்பிதாவின் அடுக்குமாடிக் குடியிருப்பில் நேற்று மாலை சோதனை நடத்தப்பட்டது. இந்தப் பணம் முகர்ஜியால் விரைவில் எடுத்துச் செல்லப்படவிருந்த நேரத்தில் அமலாக்கத்துறை சோதனை செய்து பணத்தைக் கைப்பற்றியதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அமலாக்கத் துறை ஆரம்பத்தில் ஒரு அலமாரியைத் திறந்தது, அங்கு அவர்கள் பல பெரிய விலை குறைந்த சாதாரணப் பைகளைக் கண்டனர். அவற்றின் உள்ளே, பழுப்பு நிற டேப் மூலம் பார்சல் செய்யப்பட்ட செங்கல் போன்ற பல பாக்கெட்டுகளை அதிகாரிகள் கண்டனர்.

அந்த செங்கல் கட்டுப் பணம் அதிகாரிகளைத் திகைக்க வைத்தது. 2000 ரூபாய் நோட்டுகளின் நூற்றுக்கணக்கான கட்டுக்கள் அங்கே இருந்தன. ஒரு கட்டில் தலா ரூ.50 லட்சம் பணம் இருந்தது.

அதிகாரிகள் பின்னர் அதே அலமாரியிலிருந்து ஒத்த தோற்றமுடைய பாக்கெட்டுகளைக் கொண்ட இதுபோன்ற பல பைகளை மீட்டனர். அவர்கள் மற்ற அலமாரிகளைச் சோதனை செய்த போது, ​​இதுபோன்ற பல பைகள் பாதுகாப்பாக உள்ளே வைக்கப்பட்டிருந்தன.

அலமாரியில் உள்ள பணம் பேக் செய்யப்பட்டு வைக்கப்பட்டிருந்த பைகளைப் பார்த்து அதிகாரிகள் ஆச்சரியம் அடைந்தனர். குறைந்த விலை மற்றும் எளிதில் கிடைக்கும் இந்த பைகளில் கோடிக்கணக்கில் பணம் இருக்கலாம் என்று யாரும் சந்தேகிக்கவே முடியாது. நமது ஊரில் ஒரு மஞ்சப் பையில் 50 இலட்சத்தை வைத்தால் யாரும் நம்புவார்களா? மேலும் இந்த குடியிருப்பில் இத்தகைய பணக்கட்டுக்களை வைப்பதற்கும் எடுப்பதற்கும் ஒரு சிலர் மட்டுமே அனுமதிக்கப்பட்டதாக அமலாக்கத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

arpita mukherjee
இந்தியக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு: அதிகாரங்கள் மற்றும் பொறுப்புகள் என்ன?

"ரூ. 2,000 நோட்டுகள் ரூ. 50 லட்சம் கொண்ட கட்டுக்களாக நேர்த்தியாக பார்சல் செய்யப் பட்டிருந்தன. அதே சமயம் ரூ. 500 நோட்டுக்கள் 20 லட்சம் கொண்ட கட்டுக்களாகச் செங்கல் போல அடுக்கி வைக்கப்பட்டிருந்தன" என்று அமலாக்கத் துறை வட்டாரங்கள் ஊடகங்களிடம் தெரிவித்தன.

ரொக்கம் தவிர, சுமார் 4.31 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள் மற்றும் தங்கக் கட்டிகள் அலமாரிகளின் லாக்கர்களில் இருந்து அமலாக்கத்துறையால் மீட்கப்பட்டது. தலா ஒரு கிலோ எடையுள்ள மூன்று தங்க கட்டிகள், தலா 500 கிராம் எடையுள்ள ஆறு வளையல்கள் மற்றும் தங்கப் பேனா உட்பட மற்ற தங்க நகைகளும் கண்டு பிடிக்கப்பட்டன.

minister
ministertwitter

தங்கத்தை மீட்க அதிகாரிகள் லாக்கரை உடைத்ததாகக் கூறப்படுகிறது.

கடந்த வாரம் மேட்டுக்குடியினர் வாழும் டோலிகஞ்ச் பகுதியில் உள்ள அர்பிதாவின் இரண்டு படுக்கையறை குடியிருப்பில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியபோது, ​​ஒரு அறை பூட்டப்பட்டிருந்தது. அவர்கள் சாவியைக் கேட்டபோது, ​​​​அர்பிதா முதலில் அறைக்குள் எதுவும் இல்லை என்று கூறியதாக வட்டாரங்கள் தெரிவித்தன.

இறுதியில், அறை திறக்கப்பட்டது. உள்ளே அதிகாரிகள் பல பாக்கெட்டுகள் மற்றும் பைகளைக் கண்டுபிடித்தனர். ஒரு சில பாக்கெட்டுகள் அலமாரியில் வைக்கப்பட்டிருந்தன, மீதமுள்ளவை அறையின் ஒரு மூலையிலிருந்தன. 5 லட்சம் பணத்துடன் மேற்கு வங்காளத்தின் கல்வி அமைச்சகத்தின் முத்திரை குத்தப்பட்ட ஒரு கவரையும் அமலாக்கத்துறை கைப்பற்றியது. பார்த்தா சாட்டர்ஜி இதற்கு முன்பு மாநில கல்வித் துறையின் அமைச்சராக இருந்தார்.

arpita mukherjee
வாட்டர்கேட் ஊழல் : அமெரிக்கா நாட்டின் வரலாற்றை மாற்றி அமைத்த ஓர் ஊழல் - பரபரப்பான வரலாறு

பெல்காச்சியா அபார்ட்மெண்ட் போலல்லாமல், அங்குப் பணம் மூட்டையாக மற்றும் பாக்கெட்டுகளில் நேர்த்தியாக அடுக்கி வைக்கப்பட்டது. டோலிகஞ்ச் குடியிருப்பில் பணக் கட்டுக்கள் அலமாரிகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்தன. அந்த அறை வெறும் பணத்தைச் சேமிப்பதற்காக மட்டும் பயன்பட்டதாக அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.


அர்பிதா முகர்ஜி, ஆரம்பத்தில் வீடு வந்த அமலாக்கத்துறை அதிகாரிகளைத் தவறாக வழிநடத்த முயன்றார். பிறகு, அமலாக்கத் துறை அதிகாரிகளிடம் அங்கிருந்த பணம் தனது வணிகங்கள் மூலம் கிடைத்தது என்று கூறினார். இருப்பினும், அதிகாரிகளின் கிடுக்கிப்பிடி விசாரணையில் முகர்ஜியின் உண்மை முகம் வெளி வந்தது. பின்னர் அந்தப் பணம் அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜிக்கு சொந்தமானது என்று அர்பிதா முகர்ஜி ஒப்புக் கொண்டதாகக் கூறப்படுகிறது.


சினிமாக்களில் பார்ப்பது போல இப்படி படுக்கை அறை முழுக்க கட்டுக் கட்டாகப் பணமும், தங்கமும் இருந்திருக்கின்றன. அமைச்சரின் ஒரு உதவியாளர் வீட்டிலேயே இவ்வளவு பணம் இருந்தால் மற்ற உதவியாளர்களிடம் எவ்வளவு இருந்திருக்கும்? ஐஞ்சுக்கும் பத்துக்கும் அல்லாடும் மக்களைக் கொண்ட நாட்டில்தான் இப்படி ஊழலில் சுருட்டிய பணக்கட்டுக்களை செங்கல் போல அடுக்கி வைக்கும் அரசியல்வாதிகளும் இருக்கிறார்கள்!

arpita mukherjee
பாலியல் தொழில் நடத்திய மேகாலயா பாஜக தலைவர்? பாக்கெட் கணக்கில் ஆணுறை - யார் இவர்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com