4000 அடி நீளத்துக்கு பழைய மரங்களைக் கொண்டு குடியரசுத் தலைவரின் உருவப்படத்தை செதுக்கி சாதனைப் படைத்திருக்கின்றனர் இந்தூரைச் சேர்ந்த ஒரு குழுவினர்.
இந்த கலைப் படைப்பாடனது 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு உருவாக்கப்பட்டதாக அந்த குழுவினர் கூறியுள்ளனர்.
"இது பழைய கழிவான மரங்களைக் கொண்டு 50 நபர்களின் உழைப்பால் உருவாக்கப்பட்டது" எனக் கூறியுள்ளார் இதனை ஏற்பாடு செய்த ராகுல் பார்கவ் என்ற நபர்.
திரௌபதி முர்மு இந்தியாவின் முதல் பழங்குடி பெண் குடியரசுத் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஒடிஷாவைச் சேர்ந்த இவருக்கு பலதரப்பட்ட மக்கள் நாடு முழுவதிலுமிருந்து ஆதரவு அளித்து வருகின்றனர்.
64 வயது பெண்ணான திரௌபதி முர்மு இந்தியாவின் இளம் மற்றும் சுதந்திரத்துக்கு பிறகு பிறந்த முதல் குடியரசுத் தலைவர் ஆவார்.
அவரை பெருமைப்படுத்தும் விதமாக இந்தூரில் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டது.
Shekunj.com என்ற ராகுல் பார்கவின் நிறுவனம் சார்பாக இது ஏற்பாடு செய்யப்பட்டதாம்.
"எங்கள் நிறுவனம் பெண்கள் முன்னேற்றத்துக்காக உழைத்து வருகிறது" என்று பெறுமையுடன் கூறியிருக்கிறார் ராகுல்.
சஹில் லகிரி என்ற புகழ் பெற்ற கலைஞர் உடன் இணைந்து இதனை உருவாக்கியதாக தெரிவித்துள்ளார் ராகுல்.
இதனை உருவாக்க 5 நாட்கள் ஆனதாம்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust