கொல்கத்தா: எச்.ஐ.வி பாதித்தவர்களால் நடத்தப்படும் ஆசியாவின் முதல் கஃபே.!

எச்.ஐ.வி பாதித்தவர்களுக்கும் வேலை வாய்ப்பை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ஒன்று களத்தில் இறங்கி, மற்ற நிறுவனங்களுக்கு முன்மாதிரியாக செயல்பட்டு வருகிறது.
cafe positive - Kolkata
cafe positive - Kolkatatwitter
Published on

ஆசியாவில் முதன்முறையாக எச்.ஐ.வி நோயாளிகளால் கஃபே ஒன்று கொல்கத்தாவில் நடத்தப்பட்டு வருகிறது. இதற்கு 'கஃபே பாசிட்டிவ்' என்று பெயரிடப்பட்டுள்ளது. ஆசியாவிலேயே எச்ஐவி பாசிட்டிவ் ஊழியர்களால் நடத்தப்படும் முதல் கஃபே என்று கூறலாம்.

கல்லோல் கோஷ், ஆனந்தகர் என்பவரால் தொடங்கப்பட்ட இந்த கஃபே, அரசு சாரா தன்னார்வ தொண்டு நிறுவனத்தின்

மூலம் செயல்படுகிறது. எச்.ஐ.வி பாதித்தவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் அவர்களுக்கும் வேலைவாய்ப்பு உருவாக்க வேண்டும் என்பதே இந்த தொண்டு நிறுவனத்தின் நோக்கமாக உள்ளது.

cafe positive - Kolkata
cafe positive - KolkataTwitter
cafe positive - Kolkata
Summer Skin Care: சன்ஸ்க்ரீன் பயன்படுத்துவது நல்லதா? எப்படி பயன்படுத்துவது?

கல்லோல் கோஷ் இது குறித்து பேசும்போது,

ஜெர்மனி பிராங்பேர்ட்டில் உள்ள ஒரு ஹோட்டலை எச்ஐவி பாதித்தவர்கள் நடத்துவதை கண்டு ஈர்க்கப்பட்டு, இந்த கஃபே திறக்கப்பட்டதாக கூறினார்.

ஹெச்ஐவி குறைபாடு கொண்ட குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் நலனுக்காக உழைத்து வருவதாகவும், இந்தியாவில் இதுபோன்ற 30 கஃபேக்களை திறக்க திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

cafe positive - Kolkata
cafe positive - Kolkatatwitter

மேலும் இந்த கஃபேவிற்கு வரும் சிலர் ஹெச்ஐவி ஊழியர்கள் என தெரிந்தும் சாப்பிடத் தயங்குவதில்லை என்று கூறினார். இந்த கஃபே திறக்கும் போது தான் எதிர்கொண்ட பிரச்சனைகள் குறித்தும் பேசினார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com